🌴PANDA 🌴 Profile picture
Movies & Series -Reviewer 🎬 PS5 Gamer 🚀 Cinema Lover 📽 @Sai_Pallavi92 ♥️

Feb 15, 2022, 17 tweets

CLINT EASTWOOD
பாலா&வெற்றிமாறன் சேர்ந்து படம் பண்ணா எப்படி இருக்கும்
Client Eastwood இயக்கிய படங்கள் அப்படிதான் இருக்கும் ஆஸ்கார் போகாத இவர் படங்களே கிடையாது.
அவரோட சில படங்களை பத்தி ஒரு த்ரேட்.Link Dm

MILLION DOLLAR BABY-2004
Prime/English/8.1Imdb
இது பாக்சிங் பற்றிய கதை

ஒரு பொண்ணுக்கு அதுவும் 30 வயசுக்கு மேலான உனக்கு பாக்சிங் சொல்லி தரமாட்டேன் னு சொல்ற வாத்தியார்,மனசை மாத்தி பெரிய பாக்சிங் வீராங்கனையா ஹீரோயின் மாறும் கதை.
Hilary Swank சிறந்த நடிகையா ஆஸ்கார் மட்டுமில்ல,பல அவார்டுகளை வாங்கி குவிச்ச படம்.அட்டகாசமான நடிப்பு
படத்துல நடிச்ச அத்தனை

பேருமே அவ்ளோ அருமையா நடிச்சி இருப்பாங்க.சின்ன சின்ன விஷயங்கள்& கேரக்டர் கூட ரொம்ப அழகா கேர் எடுத்து பண்ணி இருப்பாங்க.
க்ளைமாக்ஸ்ல அவங்க இரண்டு பேரோட அந்த கான்வோ ரணப்படுத்தும்.
கண்டிப்பா எல்லாரும் பாக்க வேண்டிய ஒரு படம்.ஆபாச காட்சிகள் எதுவும் இருக்காது, குடும்பத்தோட பாருங்க 💥

GRAN TORINO 2008
Prime/English/8.1Imdb
இரண்டு இனத்துகுள்ள நடக்கிற பிரச்சனை,அதனால பாதிக்கப்படுற ஒரு குடும்பம்.இத
வேடிக்கை பாக்கும் அரசாங்கம்.
இப்படி ஒரு கதையை அவ்ளோ அழகா திரைக்கதை அமைச்சி, அருமையா சொல்லி இருப்பாரு.
அடைக்கலம் தேடுற அந்த குடும்பத்துக்கு ஹீரோ உதவுற விதம்,கொஞ்சம்

கொஞ்சமா அந்த குடும்பத்து பையன் மேல அவர்க்கு வரும் பாசம்னு ரொம்ப அழகா கதை நகரும். இப்படி ஒரு கதையை இதுக்கு மேல இவ்ளோ அழகா சொல்லவே முடியாது.
க்ளைமேக்ஸ்ல.
என்ன பண்ணா, அரசாங்கம் தலையிடும், இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரும்னு ஒரு விஷயம் பண்ணுவாரு ஹீரோ.
Hats off Director 💥
படம்👌

MYSTIC RIVER 2003
Netflix/English/7.9Imdb
ஒரு கொலை நடக்குது,போலிஸ் இரண்டு பேரை சந்தேக படுது யார் குற்றவாளி,இதான் படம்.
ஒரு கொலையை எப்படி ரியாலிட்டியா விசாரிப்பாங்கனு அருமையா எடுத்து இருப்பாரு இயக்குனர்.இந்த படத்துல நடிச்ச Sean Pennக்கு ஆஸ்கார் கிடைச்சது. Must watch Movie 💥

RICHARD JEWELL 2019
Netflix/English/7.5 IMDb
வெற்றிமாறன், நம்ம பேரறிவாளன் கதையை படமா எடுத்தா எப்படி இருக்கும்.
இதான் படம்.
ஒரு உண்மை சம்பவத்தை, நேர்த்தியா&நேர்மையா பாக்கிற நமக்கு பயம் வர மாதிரி அருமையா எடுத்து இருப்பாரு படத்தை. கண்டிப்பா பாக்க வேண்டிய படம்.வேற லெவல்ல இருக்கும்

ABSOLUTE POWER 1997
TAMIL/6.7 Imdb

ஹீரோ திருட போற இடத்துல ஒரு கொலையை பாக்கிறாரு.
மறுநாள் தான் தெரியுது அத செஞ்சது அந்த நாட்டு ஜனாதிபதினு,அதுக்கப்புறம் நடக்கிற விஷயத்தை ரொம்ப சூப்பரா, த்ரில்லிங்கா,வேற லெவல்ல சொல்லி இருப்பாரு இயக்குனர்.Must watch Movie
தமிழ்ல இருக்கு பாருங்க 🙏

SULLY 2016 / Netflix
English /7.4 Imdb

விமானத்தில நடக்கிற என்ஜின் கோளாறு காரணமா,நம்ம ஹீரோ எடுக்கிற முடிவு தான் இந்த படம்.
Tom Hanks நடிப்பு வேற லெவல்ல இருக்கும்.விசாரணை கமிஷன் கிட்ட Tom Hanks நடந்த விபத்தை சொல்ற விதமே ரொம்ப அருமையா இருக்கும்.Technical team very strong.செம படம்

THE BRIDGES OF
MADISON COUNTY 1995
English /7.6 Imdb
அழகான அருமையான காதல் கதை.
அட்ரஸ் தேடி வந்தவர் கிட்ட
வெறும் நாலே நாட்கள் பழகி காதலாகி,அவரை தன்னோட கடைசி வாழ்நாள் வரைக்கும் நினைச்சிட்டு வாழுற சூப்பர் படம்.
ரொம்ப நல்ல படம்.Hollywood love stories இந்த படத்துக்கு தனி இடமுண்டு

AMERICAN SNIPER 2014
Netflix/English/7.4 Imdb
ஈராக் போர்ல இருந்து திரும்ப வீடு திரும்பும் ஒரு ராணுவ வீரன்,தன் இல்வாழ்க்கையிலும்,இயல்பு வாழ்க்கையிலும் சந்திக்கும் பிரச்சனை தான் படம்.
சவுண்ட் எடிட்டிங்க்கு ஆஸ்கார் வாங்குன படம். ரொம்பவே சென்சிட்டிவான படம்..
அருமையா இருக்கும் 👌👌

THE MULE 2018 /Prime
English / 7.0 Imdb

90 வயதான ஹீரோ,குடும்ப சூழ்நிலைக்காக போதைப்பொருள் கடத்துற கும்பலோட சேரும் கதை.
ரொம்ப மெதுவா,அமைதியா போற திரைக்கதையா இருந்தாலும்,இவர் போலிஸ் கிட்ட மாட்டிக்க கூடாதுனு நமக்கு தோணும.அந்த த்ரில்லிங் படம் முழுக்க இருந்துட்டே இருக்கும்.

90 வயசாகியும், இன்னமும் படம் எடுக்கிறத நிறுத்தாம, இன்றைய இளைய ஜெனரேஷனுக்கு , சவால் விடுற மாதிரி படம் எடுத்துட்டு இருக்கிற
CLIENT EASTWOOD
Director/ Producer/Actor
அவர்களுக்கு இந்த த்ரேட்டை சமர்பிக்கிறேன்.
#ClintEastwood
Hats off💥
சில படங்கள் தமிழ் சப்டைட்டில் இருக்கு 🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling