#வேப்பஞ்சேரி #லட்சுமிநாராயணர்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது லட்சுமி நாராயணர் திருக்கோவில். இக்கோயிலில் உள்ள தசாவதார கிருஷ்ணர் வரப்பிரசாதியாக திகழ்கிறார். 750 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தில்
இக்கோயில
கட்டப்பட்டது. அந்நியப் படையெடுப்பால் சிதலமடையவே வழிபாடு மறைந்தது. மழையின்றி போனதால் இங்குள்ள மக்கள் வறுமையில் வாடினர். இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது வேப்பஞ்சேரியில் குடியிருக்கும் லட்சுமி நாராயணருக்கு பூஜை நடைபெறாததே பஞ்சம் வரக் காரணம். சுவாமிக்கு நித்ய பூஜை, அபிஷேகம்
ஆராதனை குறைவின்றி நடந்தால் பூமி செழிக்கும். கால்நடைகள் பெருகும். குடும்பங்கள் நலம் பெறும் என அசரீரி கேட்டது. இதன் பின்னர் கோயில் புதுப்பிக்கப்பட்டு பூஜைகள் நடத்தத்
தொடங்கினர். கோவிலின் கொடிமரத்தை தாண்டியதும் அமைதி தவழும் முகத்துடன் துவார பாலகர்கள் ஜயர், விஜயரைத
தரிசிக்கலாம். கோயில் விமானத்தில் கலியுக கண்ணன் இருக்கிறார். ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் ஸ்ரீனிவாசர் மூலவராக இருக்கிறார். இங்குள்ள தசாவதார குளத்தின் தீர்த்தம் இனிப்பாக உள்ளது. குளத்தின் நடுவே காளிங்க நர்த்தன கிருஷ்ணர் காட்சி தருகிறார். குளக்கரையில் 21 அடி உயர ஓரே
கல்லால் ஆன தசாவதாரக் கிருஷ்ணர் சிலை உள்ளது. இந்த ஒரே சிலையில் திருமாலின் 10 அவதாரங்களையும் குறிப்பிடும் வகையிலான அனைத்து அம்சங்களுடன் கூடியதாக உருவாக்கி இருக்கிறார்கள். கோயிலின் தென்புறத்தில் அஷ்டலட்சுமி சன்னதி உள்ளது. மது அருந்துபவர்கள் இங்கு விளக்கேற்றி வழிபட்டால் மனம்
திருந்துவர். வேப்பஞ்சேரி வந்தால் வேதனையில்லை. பொறுப்பு இல்லாத கணவரோ, மனைவியோ அமையப் பெற்றவர்கள் படும் வேதனையை விவரிக்க முடியாது. அவர்களைத் திருத்தி நல்வழிப்படுத்த காத்திருக்கிறார்லக்ஷ்மி நாராயணர். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழுமைகளில் நடக்கும் ராகுகால பூஜையில்
பங்கேற்றால் சுபவிஷயத்தில் குறுக்கிடும் தடைகள் விலகும். மகாலட்சுமியை மடி மீது அமர வைத்த நிலையில் லட்சுமி நாராயணரை தரிசிக்க பக்தர்கள் தவம் செய்திருக்க வேண்டும். இவரை தரிசித்தால் நல்ல மணவாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏾
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.