Prof.S.Venugopalan🇮🇳 (Modi kutumbam) Profile picture
I'm a Sanātani from TN. ब्राह्मणत्वस्य रक्षणेन हि रक्षित:स्यात् वैदिकोधर्म: Only by protection of Brahminhood can vaidika dharma be protected

Feb 21, 2022, 5 tweets

நான் இந்தியன். நான் தமிழன். தமிழ் எனது தாய்மொழி. ஸம்ஸ்க்ருதம் எனது தந்தைமொழி. அனைத்து இந்தியமொழிகளும் எனது ஸஹோதரமொழிகளே. இம்மொழிகளனைத்தும் எம் தாய்த்திருநாட்டின் மண்ணின் மாண்பையும், பண்புகளையும் மக்களின் மனதில் பதியவைக்கின்றன என்பதால் இவைகளிடையே ஒற்றுமை மட்டுமே உண்டு. பிரிவில்லை

இன்று தாய்மொழி நாள். "தந்தை தாய் பேண்" என்பது மூதுரை. தமிழும் ஸம்ஸ்க்ருதமும் நமக்கு இரு கண்கள். இவ்விரண்டும் சுதந்திரமான வளமான மொழிகளானாலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகள் அல்ல. தனது வளங்களை மற்றவருடன் பரிமாறிக்கொண்டு தனது குழந்தைகளின் உயர்விற்கு காரணமாய் அமைகின்றன.

மொழிகள் விஷயத்தில் நமக்கொரு நிதானம் தேவை. உலகியல் தேவைகளுக்கு அன்னிய மொழிகளை நாம் கற்றாலும், அதைத்தாண்டிய ஆன்மீகம்‌, சமூகம் முதலிய தேவைகளுக்கு இந்திய மொழிகளையே நாம் ஆதரிப்போம். பயன்படுத்துவோம். பயனுறுவோம்.
நமது பல தேவைகளை நிறைவேற்ற இந்திய மொழிகளுக்கு திறனுண்டு. அவைகளை கையாளுவோம்

#தாய்மொழிநாள் எனும் குறியீட்டுடன் இன்று சமூகவலைத்தளங்களில் நமது இந்திய மொழிகளின் சிறப்பை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வோம். முடிந்த வரை அதிக அளவில் நமது தாய்மொழியிலும், மற்ற இந்தியமொழிகளிலும் கீச்சுவோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே!👍

வீட்டில் குழந்தைகள் உட்பட அனைவருடனும் நமது தாய் மொழியிலேயே உரையாடுவோம். முடிந்தவரை மற்ற இந்திய மொழிகளைக்(குறைந்தபட்சம் ஒன்றாவது)கற்க முயற்சி செய்வோம்.
மொழிகள் தான் ஒரு நாட்டின் பண்பாட்டின் அடையாளம். அதை எப்போதும் காத்து நிற்போம். இந்திய பாரம்பரிய உடைகளுக்கும் இதில் பங்குண்டு.🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling