மீண்டும் சொல்கிறேன்
பொதுவுடைமை இயக்கம், மாண்பு மிக்கது!
இந்தியாவில் மட்டும்
சில சித்தாந்தச் சிக்கல்:
*திராவிடம்.. மானுடத்துக்காக, கொள்கையை Adjust செய்யும்!
*இந்தியப் பொதுவுடைமையில் சிலர்.. கொள்கைக்காக, மானுடத்தை Adjust செய்வர்:(
Russia, காசி அல்ல!
தவறே ஆயினும் தூக்கிச் சுமக்க!
America, தேவ தூதன் அல்ல!😂
அது செய்துள்ள மானுட மீறல்கள் பல!
ஆனால்,
Russia பொதுவுடைமை விளைந்த பூமி
என்ற ஒன்றே ஒன்றுக்காக..
அதையும் தேவதூதன் ஆக்கி விடாதீர்கள்!🙏
ஆதிக்கம் எனும் பார்ப்பனீயத்தை..
*பார்ப்பான் செய்தாலும் தீதே!
*இடைநிலைச் சாதிகள் செய்தாலும் தீதே!
திராவிடத் தெளிவு!
பக்கத்து வீட்டுப் பெண்
யாரைக் காதலிக்க வேண்டும்?
என்பது அவள் உரிமை!
அவள் காதலிப்பவனை
உனக்குப் பிடிக்க விட்டாலும்
நீ ’மூடிக் கொண்டு’ தான் இருக்கணும்!😂
உன் கட்டுப்பாடு,
உன் வீட்டோடு சரி!
அதுவும் கூட..
வளர்ந்த பிள்ளைகளிடம் அல்ல!
இதுவா பொதுவுடைமை? ஐயகோ!:(
*என் வீடு வசதியாக இருக்க வேண்டி
*பக்கத்து வீட்டைக் கட்டுக்குள் வைத்திரு!..
என்பது நவீன பார்ப்பனீயம்!
*எண்ணெய்க் குழாய்
*என் எதிரியோடு கொஞ்சாதே
*எனக்கு மட்டுமே நீ
இதான்.. ஆதிக்க மனநிலை!
நம் வசதியை, நாமே தேட வேண்டும்!
அடுத்தவரிடம் வலிந்து பெறுதல் அல்ல!
ஈழத்தில்
இந்தியப் பொதுவுடைமை
பிறழ்ந்து போனது எங்கே?
இது பற்றி, இப்போது பேசி
ஒற்றுமை குலைக்க விரும்பவில்லை!
ஆனால்.. இதோ 1 விஷத் துளி:(
India's Vietnam எண்டு சொன்ன பிறகும்
என் வீடு வசதியாக இருக்க
உன் வீட்டைப் பகடைக்காய் ஆக்கலாம்
எனும் பார்ப்பனீய மனோபாவம்..
திராவிடத் தெளிவு &
இந்தியப் பொதுவுடைமைச்
சித்தாந்தச் சிக்கல்
என்பது தனித்த ஆராய்ச்சி!
*தமிழ் x Sanskrit
*வரலாறு
*அரசியல்
*சமூகவியல்
என்று பல தளங்களில் ஒப்பு நோக்கவல்ல
ஈர் இயக்க ஆராய்ச்சி! பரிமாணம்!
ஆனால்..
*கொள்கைக்காக மக்களா?
*மக்களுக்காக கொள்கையா?
இங்கு தான் திராவிடத் தெளிவு!
பெரியார் ஈரோட்டில் பிறந்தார்
என்பதற்காக
ஈரோடு, புனிதம் ஆகிவிடாது!😂
பொதுவுடைமை Russia-வில் பிறந்தது
எனபதற்காக
Russia, புனிதம் ஆகிவிடாது!
*மானுடத்துக்காகவே, கொள்கை!
*கொள்கைக்காக, மானுடம் அல்ல!
இதான் திராவிடத் தெளிவு!
அறிஞர் அண்ணா காட்டிய தெளிவு!
பல்லாண்டுத் தமிழ்மரபின் தெளிவு!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.