KRS | கரச Profile picture
Dr. Kannabiran Ravishankar Author https://t.co/CSZ8edXLmL Editor https://t.co/y26UaTaac6 Translator https://t.co/5ssRAlrxpt…

Feb 24, 2022, 12 tweets

The 'REAL Reason' Putin is Invading Ukraine!

எந்த நாட்டுச் சார்பும் (America/Russia)
எந்தக் கருத்தியல் சார்பும் இல்லாது,
ஓர் அப்பட்டமான Practical பார்வை!

பார்வை மட்டுமல்ல..
பாடமும் (வரலாறு) கூட,
திராவிடம் & இந்தியப் பொதுவுடைமைக்கு!

Ex- Girl Friend/Boy Friend உவமை
சிரிப்பை வரவழைக்கலாம்:) ஆனால் உண்மை!

பிரிந்து போன பின்
மேனாள் காதலி & புதுக் காதலன் மேல்
பழையவனுக்கு உரிமையில்லை!😂

நிலம்.. உனக்குச் சொந்தம் ஒரு நூற்றாண்டில் என்றால்
உனக்கு முன் வேறொருவருக்குச் சொந்தம் வேறொரு நூற்றாண்டில்!

வரலாறு படிக்கலாம்!
வரலாற்றில் வாழ முடியாது!
நிகழ்காலத்தில் தான் வாழ்ந்தாகணும்!

தமிழை விட்டுப்
பிரிந்த மொழிகள், பிரிந்தவை தான்!

Sanskrit செத்தது, செத்தது தான்!

பாபர் மசூதி பின்னாள் என்றால்
ராமன் கோயிலும் பின்னாள் தான்!
அதற்கும் முன்பு.. ஆதிகுடிகளே!

Russia & Ukraine
பழைய நெருக்கமான மரபு உறவு என்றால்
Russia-வுக்கும் மூத்தது Ukraine, வரலாற்றில்!

எனவே Russia அதிகாரத்தை
Ukraine-இடம் கொடுப்பார்களா?😂

USSR என்பதே..
பல்வேறு இனக்குழுக்களை அடக்கி
வலிந்து உருவாக்கப்பட்ட கூட்டணி தான்!
அது முறிந்தது, முறிந்ததே!

USSR பொதுவுடைமையின் பிசகு
கொள்கை மட்டுமே போதும்..
எ. தத்துவ இறுமாப்பில் காலங்கழித்ததே!:(

பல்வேறு இனக் குழுக்களை ஒடுக்கி
செயற்கையான தேச பக்தியால்
பலநாள் ஒன்றுபடுத்தி வைக்க முடியாது!

நாடு என்பது Map அல்ல!
நாடு என்பது கொள்கை அல்ல!
நாடு என்பது மக்கள்!

மக்களை மதியாத நாடு, உடையும்!

பொதுவுடைமைக் கொள்கை
மிகச் சிறந்த கொள்கையே! வாழ்க!

ஆனால்..
*கொள்கைக்காக, மக்கள் அல்ல!
*மக்களுக்காகத் தான் கொள்கை!

கொள்கை காப்பாற்றப்பட்டால் போதும்
பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்வியல்
என்ன ஆனால் என்ன?
என்ற தத்துவ இறுமாப்பே..

Russia பொதுவுடைமையின் வீழ்ச்சி ஆகிற்று:(

திராவிடத் தெளிவு &
இந்தியப் பொதுவுடைமைச் சித்தாந்தச் சிக்கல்
இதான்! சமூக இயங்கியல்!

*கொள்கைக்காக மக்கள் அல்ல!
*மக்களுக்காகத் தான் கொள்கை!

USSR போலவே
இந்தியாவும் தனித்த 'நாடு' அல்ல!
Union of States!

தமிழ் உட்பட, இனக்குழுக்களின்
வாழ்வியலை மதியாது போனால்
செயற்கையான தேசம் உடையும்!

காவிப் பாவிகள்
அகண்ட பாரதம் எ. கூவினாலும்
அப்படியொன்று இல்லவே இல்லை!

ஹிந்து மதமே ஆதி மதம்!
என்பதெல்லாம் Dubakoor.

இசுலாம்/கிறித்துவம், 5th CE என்றால்
ஹிந்து, 5th BCE; அவ்வளவே!
அதற்கும் முன், ஆதிகுடி சமயம்
அதற்கும் முன், மனிதனே இல்லை!😂

நான் தான் முதல்
எனல் ஆகப்பெரும் மடத்தனம்!

வரலாற்றில், மக்கள் வாழ முடியாது!😂
இன்றைய வாழ்வியலே, மக்கள் வாழ்வு!

வரலாற்றில் பல நிலை உண்டு.

*உங்களுக்குப் பிடித்தமான நிலையே
மூத்த நிலை ஆகி விடாது!
*உங்களுக்கும் முன்பே.. வரலாற்றில்
வேறொரு மூத்த நிலை உண்டு!:)

ஒரே மதம்
ஒரே ஜாதி
ஒரே தேசம் யாவும்
USSR போல்
உடைபட வல்ல செயற்கையே!

India is a Union of States
என்பதே ‘நிதர்சன’ உண்மை!

தமிழ் உட்பட
இனக்குழுக்கள் வாழ்வியல்!

உங்கள் கொள்கை
சிறந்த தத்துவமாய் இருக்கலாம்!
ஆனால்
*கொள்கைக்காக மக்கள் அல்ல!
*மக்களுக்காகவே கொள்கை!

உணர்ந்து கொண்ட
இந்தியப் பொதுவுடைமையாளர்கள்
திராவிடம் போலவே
மக்களோடு மக்களாய் வாழ்வார்கள்!

ஏன் பொதுவுடைமை மிக்க நாடெல்லாம்
’சர்வாதிகாரம்’ கொண்டதாகவே உள்ளன?

அதிலும், சீனா போன்ற நாடுகள்..
பொதுவுடைமை நீர்த்துப் போய்
புது வடிவம் கண்டு விட்டது ஏன்?

தத்துவ இறுமாப்பில்
இனக்குழுத் தகைமை மறந்தால்
’கொள்கைக்காகவே மக்கள்’ என்றால்
தத்துவம் உடையும் நாள், வெகு அருகில்!:(

தயவு செய்து..
தத்துவம் விளைந்த பூமி என்பதால் Russiaவை
பார்ப்பனீயப் புனிதக் காசி ஆக்கிடாதீர்!🙏

தத்துவம் கடந்து..
மக்களைப் பாருங்கள்!

ஏனெனில்..
பொதுவுடைமையும், திராவிடமும்
தமிழ் மக்களுக்கு..
நெடுநாள் நிற்க வேண்டிய அரண்கள்!

*மக்களுக்காகவே, கொள்கை!
*கொள்கைக்காக, மக்கள் அல்ல!

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling