அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Mar 4, 2022, 14 tweets

#ஶ்ரீபார்த்தஸாரதிப்பெருமாள் பார்த்தனுக்கு சாரதியாக ஶ்ரீகிருஷ்ண பகவான் மகாபாரத போரின் போது இருந்த கோலத்தில் இங்கு நாம் இவரை தரிசித்துக் கொள்ளலாம். மூலவர் குடும்ப சகிதமாக உள்ளார். மகாபாரதப் போரின் போது அர்ஜுனனுக்காகவும் நமக்காகவும் ஸ்ரீமத் பகவத் கீதையை அருளிய அவர் போரின் போது

பீஷ்மரின் அம்புகளால் காயமடைந்ததால் இங்கு அவர் முகம் முழுவதும் தழும்புகளுடன் காட்சி
அளிக்கிறார். இந்தத் தலத்தில் மட்டும் தான் அவர் மீசையுடனும், தன் பிரதான ஆயுதமான சுதர்சன சக்கரம் இல்லாமலும் காட்சி தருகிறார். போரின் தொடக்கத்தில் இவர் எந்த ஆயுதமும் ஏந்தாமல் இருப்பதாக வாக்கு

கொடுத்ததால் போரின் தொடக்கம் மற்றும் முடிவினை தெரிவிக்கும் சங்கத்தை மட்டும் ஏந்தியுள்ளார். இங்கு உற்சவ மூர்த்தி தன் கதாயுதம் இல்லாமல் செங்கோலுடன் காட்சி தருகிறார்.
ஶ்ரீ அனந்தராம தீக்‌ஷிதர் #திருவல்லிக்கேணி_ஶ்ரீபார்த்தசாரதி மேல் இயற்றிய இந்த ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி இவ்வுலகில்

அனைத்து நலன்களும் பெற்று மோக்‌ஷத்தையும் அடையலாம்.

ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஹம்-பீத வஸ்த்ராதி பூஷம்
பஜே பக்தபோஷம் ஸ்ரீ பார்த்த ஸாரத் யவேஷம்

பொருள்: பீதாம்பரம் மற்றும் ஆபரணங்களை அணிந்தவரும், பக்தர்களைக் காப்பவரும், அர்ஜுனனுக்குத் தேரோட்டியவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.

1.ஸ்ரீகைரவிண்யாஸுதீரே-பத்ம
நேத்ரம் பவித்ரம் புராரேஸ்ஸுமித்ரம்
சந்த்ராப வக்த்ரம் ஸுதோத்ரம்-ருக்மிணீ
ஸத்யபாமா ஸமாச்லிஷ்டகாத்ரம் (ஸ்ரீ)

பொருள்: கைரவிணீ எனும் குளக்கரையில் இருப்பவர். தாமரை போன்ற கண்களை உடையவர், பக்தர்களைத் தூய்மைப்படுத்துபவர், முராரி, ஸ்ரீபரமேஸ்வரனின் நண்பர்,

சந்திரன் போல் முகம் உடையவர், ருக்மிணீ, சத்யபாமா இவர்களால் ஆலிங்கனம் செய்யப்பட்டவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.

2. பீஷ்மாதி பானணக்ஷதாஸ்யம்-புக்தி
முக்தியேகலாபாய பக்தைருபாத்யம்
பக்தார்த்தி ஹாரிஸ்மிதாஸ்யம்-பார்த்த
வாத்ஸல்ப ஸம்ப்ராப்த தௌத்யாதி தாஸ்யம் (ஸ்ரீ)

பொருள்: பீஷ்மர்

துரோணர் முதலிய மகான்களின் அம்புகளால் முகத்தில் வடுக்களை உடையவரும், சர்வபோகங்கள், மோஷம் ஆகியவற்றின் லாபத்திற்காகப் பக்தர்களால் உபாசிக்கத் தகுந்தவரும், பக்தர்களின் கஷ்டத்தை நீக்கும் புன்சிரிப்புடையவரும், அர்ஜுனனிடத்திலுள்ள அன்பால் தூது முதலிய வேலையைச் செய்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை

வணங்குகிறேன்.

3.லோகாவனாயாத்தலீலம் பூஜி
தானேக தேவேந்த்ர லோகைக பாலம்
ஸ்ரீ தேவகீ புண்யபாலம்-ஆஹ்ரு
தானேக கோபீ ஸுவர்ணாப சேலம்

பொருள்: உலகைக் காக்க பால லீலைகள் புரிந்தவரும், இந்திரன் முதலிய தேவர்களால் பூஜிக்கப்பட்டவரும், ஸ்ரீ தேவகியின் புண்ணியத்தால் குழந்தையாக வந்தவரும், கோபிகைகளின்

பல தங்கப் பட்டாடைகளைக் கவர்ந்தவருமான ஸ்ரீ பார்த்த சாரதியை பூஜிக்கிறேன்.

4. பா ஹுத்வயோபேததேஹம் -பாஞ்ச
ஜந்யாக்ய சங்க ஸ்புரத்தக்ஷ பாஹும்
ஸ்ரீகாருடஸ்வீயவாஹம்-புத்ர
பௌத்ராதி ஸம்பூர்ணதி வ்யஸ்வகேஹம் (ஸ்ரீ)

பொருள்: இரண்டு கைகளை உடைய கோலத்தில் இருப்பவரும், பாஞ்சஜன்யம் என்ற சங்கை வலது

கையில் உடையவரும், கருட வாகனம் கொண்டவரும், மகனான ப்ரத்யும்னன், பேரனான அனிருத்தன் ஆகியோர் சூழ, கோவில் கொண்ட ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.

5. வாமேகரே சாருசக்ரம்-வார
ணேந்த்ரார்த்த ஸஞ்சின்ன ஸம்சப்த நக்ரம்
காருண்யஸ்ம்பூர்ண நேத்ரம்-ஸ்வீய
ஸெளந்தர்ய ஸம்பூர்ண காமாக்ய புத்ரம் (ஸ்ரீ)

பொருள்: இடது கையில் சக்கரத்தை உடையவரும், கஜேந்திரனைக் காப்பதற்காக சாபத்தை அடைந்த முதலையை வதைத்தவரும், கருணைமிக்க கண்களை உடையவரும், அழகான மன்மதன் போன்ற ப்ரத்யும்னன் என்ற மகனை உடையவருமான ஸ்ரீபார்த்தசாரதியை வணங்குகிறேன்.

6. லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாத்யுபேதம்-ரங்க
நாதே தேவேன நித்யம் ஸமேதம்

பக்தைஸ்ஸதா ஸாதுகீதம்-ஸ்வீய
பக்தாய பார்த்தாய ஸம்ப்ரோக்த கீதம் (ஸ்ரீ)

பொருள்: ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரோடு கூடியவரும், தேவனான ஸ்ரீரங்கநாதனுடைய நித்யம் பிரகாசிப்பவரும், பக்தர்களால் என்றும் துதி செய்யப்பட்டவரும், அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தவருமான ஸ்ரீபார்த்தசாரதியை பூஜிக்கிறேன்.

7.பக்தயாக்ருதம் ஸதோத்ரரத்னம்-தீக்ஷி
தானந்தராமேண ஸர்வார்த்த ஸித்யை
நித்யம் படேத் பக்தி சாயீ-வாஸு
தேவ ப்ரஸாதோ பவேதேவ தஸ்ய (ஸ்ரீ)

பொருள்: விரும்பியவை சித்திக்கும் பொருட்டு ஸ்ரீஅனந்த ராம தீக்ஷிதரால் பக்தியுடன் இயற்றப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் பக்தியோடு படிப்பவருக்கு

ஸ்ரீபார்த்தசாரதியின் அருள் கிடைக்கும்.


ஸ்தோத்திரத்தை ராகத்துடன் பயில இந்தக் காணொளி உதவும்.
ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாளே உன் திருவடிகளே_சரணம்🙏
ஓம் நமோநாராயணாய
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling