அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Mar 12, 2022, 9 tweets

#விபூதி_உருவானது_எப்படி
பர்னநாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணைத் திறந்தான். அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு

இருந்தன. பசியால் முகம் வாடி இருந்தவனைக் கண்ட பறவைகள் பழங்களைப் பறித்து பர்னநாதன் முன் வைத்தன. இது ஈனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீர கனிகளை சாப்பிட்டு முடித்து மீண்டும் தவத்தை தொடர்ந்தான். இப்படியே பல வருடங்கள் கடந்தோடியது. தவத்தை முடித்து கொண்டு சிவ வழிபாட்டை தொடங்கினான். ஒரு

நாள் தர்ப்பை புல்லை அறுக்கும் போது அவன் கையில் கத்திபட்டு இரத்தம் கொட்டியது. ஆனால் அவனுக்கோ எந்த பதற்றமும் இல்லை. குழந்தைக்கு ஆபத்து என்றால் தாய் பதறுவதை போல பதறியது ஈசன் தான். சிவபெருமான் வேடன் உருவில் தோன்றி பர்னநாதன் கையை பிடித்து பார்த்தார். என்ன ஆச்சரியம்! இரத்தம் சொட்டிய

இடத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்தது. வந்தது தாயுமானவர் என்பதை அறிந்தான் பர்னநாதன். இரத்தத்தை நிறுத்தி சாம்பலை கொட்டச் செய்த தாங்கள் நான் வணங்கும் சர்வேஸ்வரன் என்பதை நான் அறிவேன். இந்த அடியேனுக்கு தங்கள் சுயஉருவத்தை காணும் பாக்கியம் இல்லையா என்று வேண்டினான் பர்னநாதன். ஈசன் தன்

சுயரூபத்தில் காட்சிக் கொடுத்தார். உனக்காகவே இந்த சாம்பலை உருவாக்கினேன். அதனால் இந்த சாம்பல் இன்று முதல் விபூதி என்று அழைக்கப்படட்டும். உன் நல்தவத்தால் விபூதி உருவானது.
அக்னியை எதுவும் நெருங்க முடியாததை போல இந்த விபூதியை பூசி அணிந்து கொள்பவர்களின் அருகில் துஷ்ட சக்திகள் எதுவும்

நெருங்காது. விபூதி என் ரூபம். அதற்கு நீயும் துணையாக இருந்த வா என்று ஆசி வழங்கினார் சிவபெருமான். விபூதியை கட்டை விரலாலும் மோதிர விரலாலும் சேர்த்து எடுத்து மோதிர விரலால் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். ஆனால் கட்டை விரலும் நடுவிரலும் சேர்ந்து விபூதியை எடுக்கக்கூடாது. கட்டை

விரலாலும் நெற்றியில் விபூதியை வைக்க கூடாது என்கிறது சிவபுராணம்.
விபூதியால் என்ன நன்மை என்று
ஸ்ரீ இராமர் அகத்திய முனிவரிடம் கேட்டார். பகை, தீராத வியாதி , மனநல பாதிப்பு, செய்வினை பாதிப்பு இப்படி எது இருந்தாலும் தொடர்ந்து விபூதியை அணிந்து வந்தால் அந்த பிரச்சனைகள் விலகும் என்று

அகத்திய முனிவர் ஸ்ரீ இராமருக்கு உபதேசம் செய்தார். ஸ்ரீ மகா லஷ்மிக்கு உகந்ததும் விபூதி. அதனை விரும்பி விபூதி கலந்த நீரில் தினமும் அவள் நீராடுகிறாள். திரு என்றால் மகாலஷ்மி. அதனால்தான் விபூதியை திருநீறு என அழைக்கிறோம்.
‘மந்திரம் ஆவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு

துதிக்கப் படுவது நீறு
வேதத்தில் உள்ளது நீறு
வெந்துயர் தீர்ப்பது நீறு
காண இனியது நீறு
கவினைத் தருவது நீறு
தேசம் புகழ்வது நீறு
திரு ஆலவாயான் திருநீறே’
ஓம் நமசிவாய🙏🏻
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling