ரொம்பநாளா எழுதனும்-னு நெனச்சுட்டு இருந்த த்ரெட்... #காமாட்சிவிளக்கு
இந்த விளக்கை சுத்தி ஏகப்பட்ட சடங்குகள் இருக்கு.
1. சாயங்காலம் கண்டிப்பா விளக்கு ஏத்தனும்
2. விளக்கு அணையாமல் பாத்துக்கனும்
3. கல்யாணம் ஆகி புருசன் வீட்டுக்கு புதுசா வர்ற பொண்ணு இந்த விளக்க ஏத்தனும்
இந்த விளக்கோடா சிறப்பு என்னன்னா, இது இந்துக்கள் வீடுகளோட மட்டும் நிக்காம கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் வீடுகள்லகூட பாக்க முடியும்ங்குறதுதான்.
விளக்கின் சடங்குகள் பற்றி தெரிஞ்சுக்குறதுக்கு முன்னாடி தீப்பெட்டி பத்தி தெரிஞ்சுக்குவோம்.
இந்திய வரலாற்றை அதிலும் குறிப்பா தமிழக வரலாற்றை இரண்டா பிரிக்கலாம்
1. தீப்பெட்டிக்கு முன்
2. தீப்பெட்டிக்குப் பின்
கி.பி.1920-க்கு முன்னாடி தமிழகத்துல தீப்பெட்டி-னு ஒன்னு இல்ல. அப்போ எப்டி சமையல் பண்ணிருப்பாங்க? முக்கியத்துவம் வாய்ந்த கமாட்சி விளக்க எப்டி ஏத்திருப்பாங்க? 🤔
இந்த கேள்விக்கான தேடல்தான் காமாட்சி விளக்கின் கதையும்.
ஊருல உள்ள ரொம்ப வயசானவங்க & தெரிஞ்ச தாத்தா பாட்டிகள்ட்டலாம் கேட்டு கிடைத்த பதில்..
முன்னாடிலாம், ஜமீன்தார்கள், ஊர் தலைவர்கள் (நாட்டாமை) உத்தரவுப்படி ஊருக்கு பொதுவா ஒரு இடத்துல நந்தா விளக்கும், தீ பந்தமும் ஏத்தி வெப்பாங்க.
அதுல இருந்து பொதுமக்கள் தங்கள் தேவைக்காக அரிக்கன் விளக்கு, வைக்கோல், காய்ந்த விறகுகளில் வீட்டுக்கு எடுத்துட்டு போவாங்க. பந்தம் மற்றும் நந்தா விளக்கு (கல் விளக்கு) ஏத்தி வைக்க அந்தந்த சர்க்கார்கள் தனியா பணியாளர்களைகூட நியமிச்சுருந்துருக்காங்க.
சரி இருக்கட்டும், அவங்களுக்கு மட்டும் எப்டி நெருப்பு கிடைச்சது தீப்பெட்டி இல்லாத காலத்துல??
-காட்டுவாசிகளாக மனிதன் வாழ்ந்த காலம் தொட்டே சிக்கி முக்கி கற்களை பயன்படுத்திதான் நெருப்பு உருவாக்கிருக்கான். நீண்ட நெடும் காலத்துக்கு இந்த முறைதான் பயன்பாட்டுல இருந்துருக்கு.
ரொம்ப பழைய வீடுகளை அலசி பார்த்தால் இன்றும் அது போன்ற கற்களை பார்க்க முடியும். அரண்மனைகளில் நெருப்பு அடிமைகளையும் நியமித்திருந்தனர் அவர்களின் பணி, கைப்பிடியுடன் கூடிய இரும்பு பட்டைகளை கல்லில் உரசி நெருப்பு உருவாக்குவது. இது இந்தியாவை விட, ஐரோப்பியாவில் பரவலாக இருந்த நடைமுறை.
பழைய அரண்மனைகள்ல இரவு பகல் பார்க்காமல் தொடர்ந்து நெருப்பு எரிக்கப்பட்டுச்சு. அதுல இருந்து பந்தங்கள் மூலமாக மக்களின் பயன்பாட்டுக்கும் குடுக்கப்பட்டுச்சு.
டேய்..ஒரு நிமிஷம் இரு! புத்தர் காலத்துக்கு முன்னாடி இருந்தே இந்தியாவுல யாகம் பண்றாங்களே. அவங்களுக்கு எப்டி நெருப்பு கிடைச்சது?
நெருப்பு இல்லாம எப்டி ஹோம குண்டம் வளர்த்து, யாகம் வளர்த்துருப்பாங்க? உங்களுக்கு வந்த அதே கேள்வி எனக்கும் வந்துச்சு...
விசாரிச்சு பாத்தப்பதான் தெரிஞ்சது, யாக நெருப்பை உருவாக்குறதுக்கு தனியா ஒரு கருவியை பயன்படுத்திருக்காங்க. அதுக்கு பேரு அரணி (அ) அக்னீ மந்தன்.
இந்த கருவியை வைத்து தயிர் கடைவது போல கயிறு கட்டி சுத்துவாங்க. அப்போ உருவாகுற வெப்பத்துல கங்கு உருவாக்கி அந்த கங்குல காத்து வீசி அத நெருப்பா மாத்துவாங்க. நாம பழைய காலத்துல ஊது குழல்வெச்சு நெருப்பு வர வைப்போம்ல அதே மாதிரிதான்.
மரக்கட்டையை உரசி நெருப்பு வர வைக்கும் முறை இந்தியாவை விட ஐரோப்பிய துணைக்கண்டத்தில்தான் அதிகளவில் பயன்பாட்டில் இருந்துள்ளது.அதனால்தான் சமஸ்கிருத வேதங்கள் இந்தியாவை சேர்ந்ததல்ல என பார்க்கப்படுகிறது.
இன்றும்கூட அங்கொன்ன்றும் இங்கொன்றுமாக யாகங்கள் அந்த முறையில்தான் செய்யப்படுகின்றன.
அந்த அளவுக்கு தீப்பெட்டி முக்கியமானதாகவும், அதன் வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்துள்ளது. நெருப்புக்காக அலைந்து கிடைக்காமல் இறந்து போன மாலையம்மன், மலட்டம்மன் போன்ற சாமிகளை சுமந்து கொண்டு நிற்கிறது தமிழக வரலாறு. இதுதான் தீப்பெட்டிக்கு முந்தைய தமிழ்நாடு...
தமிழகத்தில் பொதுவாகவே பழைய திருமணங்கள் வேலைக்கு சென்றுவந்து வீடு திரும்பிய மாலை வேளைகளிலோ அல்லது வேலைக்கு செல்வதற்கு முன்னாள் அதிகாலைப் பொழுதிலோ நடப்பதுதான் வழக்கம்.
அந்த இருட்டு நேரத்தில், வீட்டை ஒளிரச்செய்ய.. மணமகளை விட்டு விளக்கு ஏற்ற வைத்தனர்.
அவசரத் தேவைக்கு வெளியில் நெருப்பை கடன் கேட்க முடியாது. ஊருக்கு பொதுவான இடம் வரை இருட்டில் சென்று வர முடியாது, மாதம் மும்மாரி பெய்த காலங்களில் சொல்லவே தேவையில்லை! அந்த சிரமத்தை குறைக்கவே அந்த விளக்கு அனைந்துவிடாமல் பார்த்துக் கொண்டனர். இவ்வளவுதான் அந்த காமாட்சி விளக்கின் நோக்கம்.
ஒளியின் தேவை எல்லா மதத்தினருக்கும் பொதுவாக இருந்ததால், காமாட்சி விளக்கு மதம் கடந்து எல்லா வீடுகளிலும் புகுந்தது.
~அறிவியலின் உதவியால் இன்று பலவகை ஒளிர் விளக்குகள் வந்துவிட்டபோதிலும், இன்னும் காமாட்சி விளக்கை கட்டிக்கொண்டு அழுவது நம் மூடத்தனம்தான்🤦♂️
இலைதளை கட்டிகொண்டு வாழ்ந்தோம்! நாகரிகம் பிறந்தது கோட் சூட் அணிந்தோம்...
~பழமையை போற்றுவோம், முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்கிற போர்வையில் இலைதளையில் ஜிகினா வைத்து உடுத்துவேன், கோட் சூட் போட மாட்டேன் என்பது எவ்வளவு முட்டாள் தனமோ அவ்வளவு முட்டாள்தனம்தான் காமாட்சி விளக்கும் 😇
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
