Mr.Bai Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️25

Apr 1, 2022, 10 tweets

#Indigoairlines
பெங்களூரு மாநிலத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஆன நந்த குமார் பாட்னாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்ப இண்டிகோ விமானம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.பெங்களூரு வந்து சேர்ந்தவுடன் தனது Luggage எடுத்து கொண்டு தனது வீட்டிற்கு

சென்றுள்ளார்.அங்கு சென்றவுடன் தான் தெரிந்து இருக்கிறது இது தனது Luggage Bag இல்லை என்று பிறகு Indigo விமானத்தின் Customer Centre phone செய்து நடந்தவற்றை எல்லாம் எடுத்துக் கூறி அந்த Luggage Bagல் உள்ள Tag மூலம் அந்த பயணியின் தகவல்களை கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த Indigo விமான

நிறுவனம் பயணிகளின் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரமாட்டோம் என்று கூறியுள்ளனர் பிறகு அவர் அந்த நபரை தொடர்பு கொண்டு எனது Luggage பெற்று தருமாறு கேட்டுள்ளார். அதற்கு இண்டிகோ அந்த சகபயணியை தொடர்பு கொள்ள முடியவில்லை உங்களை மீண்டும் தொடர்பு கொள்கிறோம் என்று கூறியுள்ளனர். இவரும்

அவர்களிடம் இருந்து போன் வரும் என்று காத்திருந்துள்ளார் பிறகு போன் எதுவும் வரவேயில்லை. பிறகு அந்த Luggage Bag Tagல் உள்ள பண்ற கொண்டு எதாவது செய்ய முடியுமா என்று இண்டிகோ விமான நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் தேடியுள்ளார். பல முறை முயற்சித்தும் பயனளிக்காத நிலையில் அவர் அந்த

இணையதளத்தின் Developer Console பக்கத்திற்கு சென்றுள்ளார். இந்த பக்கத்தில் தான் ஒரு நிறுவனத்தின் இணையப்பக்கம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது போன்ற தகவல்கள் எல்லாம் இருக்கும் அதில் Network Logsல் அந்த PNR நம்பரை கொண்டு தேடும் பொது அந்நிறுவனத்திற்கு மட்டுமே தெரிந்து இருக்க வேண்டிய

பயனாளிகளின் தகவல்கள் எல்லாம் இவருக்கு தெரிந்து இருக்கிறது. அந்த சகபயணியின் தொடர்பு எண்ணும் இருந்திருக்கிறது. அந்த எண்ணை தொடர்பு அந்த நபரிடம் பேசி அவரது Luggage Bag பெற்றுள்ளார்.

இதை அப்படியே அவரது Twitter பக்கத்தில் பதிவிட்டு நடந்த சம்பவத்தை விளக்கமாக பதிவிட்டுள்ளார்,பின்னர்

இதற்கு பதிலளித்துள்ள இண்டிகோ நிறுவனம் தங்கள் இணையதள பக்கத்தில் உள்ள தவறுகளை சரி செய்வதாக கூறியுள்ளது. அதோடு சேர்த்து மற்றோரு எச்சரிக்கையும் பகிர்ந்துள்ளார் அந்த நபர் சாதாரணமா விமானத்தில் பயணம் செய்யும் போது நாம் நமது எதாவது சமூகவலைத்தள பக்கத்தில் நமது விமான டிக்கெட்டை புகைப்படம்

எடுத்து அதை பகிர்ந்து இருப்போம். அதை கொண்டு நமது தகவல்களையும் தெரிந்து கொள்ள முடியும் எனவே அப்படியான புகைப்படங்களை பகிர்வதை தவிருங்கள் என்று பதிவிட்டுள்ளார் அவர்.

Blogla படிச்சு Subscribe பண்ணி விடுங்க மக்களே.
link.medium.com/qIP8hGKARob

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling