#சிவனின்_பஞ்ச_ஆரண்ய_தலங்கள்
பஞ்ச ஆரண்ய தலங்கள் என்பவை ஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டுமுறையில் கலந்து கொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்களாகும்.
ஒரே நாளில் ஒவ்வொரு வேளை வழிபாட்டின்போதும் பஞ்ச ஆரண்ய தலங்களை தரிசிப்பதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி மறுபிறவி இல்லாத நிலையை அடையலாம்.
ஆரண்யம் என்றால் காடு எனப் பொருள்படும். பஞ்ச ஆரண்ய தலங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைக் காடு அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இத்திருத்தலங்களில் விடியற்காலை காலை உச்சிவேளை மாலை அர்த்தசாமம் என ஐந்து முறை வழிபாடு நடத்தப்படுகிறது.
தஞ்சைக்கு அருகில் பஞ்ச ஆரண்ய தலங்கள்
1.திருகருக்காவூர்-விடியற்காலை
2.அவளிவநல்லூர்-காலை
3.அரதைபெரும்பாழி-உச்சிவேளை
4.ஆலங்குடி-மாலை
5.திருக்கொள்ளம்புதூர்-அர்த்தசாமம்
திருஞானசம்பந்தர் தனது திருதலப் பயணத்தின்போது பஞ்ச ஆரண்ய தலங்களை முறைப்படி வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பஞ்சஆரண்ய தலங்கள் யாவும் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளன.
@JeevanAtma @Dharmicking @SSR_Sivaraj @jagadguru100 @MSivaRajan7 @Ramsamri @padman_economic @navaladimadhan @SaravananT_cbe
ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் ஒரு Code * Number உள்ளது. Google Map-ல் அதனை Type செய்தால் கோயிலை எளிதில் அடையலாம்.
திருக்கருகாவூர் முல்லைவனநாதர் - திருக்கோயில் (SCN018) > *(பதிவில்
முல்லைவனம் விடியற்கால
காணும் கோயில்) வழிபாட்டிற்குரியது கும்பகோணத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.
2.திருஅவளிவநல்லூர் - சாட்சிநாதசுவாமி திருக்கோயில் (SCN100)
பாதிரி வனம்-காலை வழிபாட்டிற்குரியது.
(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம் திருக்கருகாவூரிலிருந்து 11 கி.மீ
தொலைவில் உள்ளது.
ஹரித்துவாரமங்கலம்
(அரதைப்பெரும்பாழி) - பாதாளேஸ்வரர் திருக்கோயில் (SCN099) வன்னிவனம் - உச்சிக்கால வழிபாட்டிற்கு
உகந்தது.
(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.
திருஅவளிவணல்லூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் (SCN098)
பூளைவனம் - மாலை நேரத்து வழிபாட்டிற்கு
உகந்தது. (தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம்.
அரித்துவாரமங்கலத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது
திருக்கொள்ளம்புதூர் - வில்வவனநாதர்
திருக்கோயில் (SCN113)
வில்வவனம் - அர்த்தஜாம பூஜை
வழிபாட்டிற்குரியது.
(தேவாரப்பாடல் பெற்ற ஸ்தலம். ஆலங்குடியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.
அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம் போஸ்ட்- 612 802. வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்., +91-4374-264 586, 4374-275 441, 94421 75441.
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்-614 302. தஞ்சாவூர் மாவட்டம்.,
+9197891 60819
அருள்மிகு பாதாளேஸ்வரர் திருக்கோயில், அரித்துவாரமங்கலம் போஸ்ட்- 612 802. வலங்கைமான் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்., +91-4374-264 586, 4374-275 441, 94421 75441.
அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்-614 302. தஞ்சாவூர் மாவட்டம்., +9197891 60819
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.