அறிவோம்கடை Profile picture
உணவை தேடி ஒரு பயணம் !!! ⚠️உணவிற்கு ஜாதி-மதம் இல்லை ( Food has No Religion )⚠️ Travel Makes Your Life Beautiful எங்களிடம் சேர்ந்து நீங்களும் பயணியுங்கள்🏞🏖️🏕️

Apr 28, 2022, 16 tweets

#அறிவோம்கடை : Chin chin, Residency Towers,CBE
நான் நேத்து போஸ்ட் செஞ்ச பில் இங்க சாப்பிட்டது தான். இதுதான் முதல் முறையும் கூட.இது தான் கடைசி முறைனும் சொல்லலாம்.சில elite people கொடுத்த பில்ட்அப் எல்லாம் பார்த்து தான் இந்த ரெஸ்டரண்ட்க்கு போனேன்.சரி hypeக்கு worth ஆனு பார்க்கலாம்

இவங்க கிட்ட மெனு கார்டு கிடையாது.மெனுவை தெரிந்துகொள்ள இதோ கீழே படத்தில் உள்ளது போல் ஒரு QR கோட் இருக்கும் அதை ஸ்கேன் செய்தால் எல்லா dishes ம் விலையுடன் பார்த்து கொள்ளலாம்.நாங்க எல்லா dishesம் விலை பார்த்து தான் ஆர்டர் செய்தோம்.ஆனால் அளவு அதற்கு ஏற்றதாக இருந்ததா?வாங்க பார்க்கலாம்

Lung Fung Soup : 2.5/5
ரொம்ப சுமாரான சூப். ஒரு சூப் வாங்கி அதை 1 by 2 ஆக தர சொன்னோம்.
அளவு வகையில் இதை குறை சொல்ல முடியாது.. ஆனா டேஸ்ட் ரொம்ப சுமாராக தான் இருந்திச்சு. இதன் விலை : ₹300/-

Malaysian Butter Prawns : 3/5
டேஸ்ட் ரொம்பவே நல்லா இருந்திச்சு..ஆனா அளவை நீங்களே பாருங்கள்.. முழுசா 5 அல்லது 7 prawns தான் இருக்கும். மற்றது எல்லாமே crumps மாதிரி பொடி தான் இருந்திச்சு. இப்படி தான் இதை தயார் செய்வார்கள் ஆனால் நிச்சயம் ₹900 worth இல்லை.

Hong Kong Crispy Garlic Prawns : 3.5/5
மேல சாப்பிட்ட prawn காரம் இல்லாமல் subtle ஆக இருந்திச்சு.. இது கொஞ்சம் காரமாவும், crispy யாவும் இருந்திச்சு.. டேஸ்ட் அதை விட இது செமையா இருந்திச்சு👌 ஆனா அளவு ல இதுவும் குறைவு தான்😓

இதன் விலை : ₹ 900

Drums of Heaven : 4/5
வாங்குனதுல இது மட்டும் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருந்திச்சு..டேஸ்ட் மற்றும் quantity பரவால.இது ஒரு செமயான இந்தியன் சைனீஸ் cuisine.இதே டிஷ் சில வருடம் முன்னாடி நெய்தல்னு ஒரு கடைல சாப்பிட்டு இருக்கேன்.அங்க வெறும் ₹240 தான்..ஆனா இங்க rate ரொம்ப அதிகம் - ₹650

Chicken Momos : 2/5

வாங்குனதலையே இந்த டிஷ் ஓட விலை மட்டும் நிச்சயம் நியாய படுத்தவே முடியாது..
6 பீஸ் மோமோ வின் விலை ₹600
மற்ற டிஷ் ஆவது chef ஏதாவது கஷ்டப்பட்டு சமைச்சார் னு சொல்லலாம்..ஆனா இதெல்லாம் ரொம்ப அநியாயம்😓😓சிக்கன் momo மெனு கார்ட் ல இல்லை (May be in different name)

6 momos 600 ரூபாய் .. ஏண்டா என்னதான் ஸ்டார் ஹோட்டல் ஆ இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமாடா😢😢😢

Hokkien Chicken Noodles : 4.5/5
இங்க போனதல நடந்த நல்ல விஷயம்.. இதுவரை இப்படி ஒரு சுவையான நூடுல்ஸ் வாழ்க்கையில் சாப்பிட்டதே இல்லை..செம டேஸ்ட்👌 இதில் இருந்த சிக்கன் வேற லெவல்னு சொல்லலாம்
அளவான காரம்,quantity யும் இரண்டு பேர் நன்றாக சாப்பிடும் அளவிற்கு இருந்தது.

விலை: ₹550/-

Caramel Custard : 2.5/5
இதற்கு review எழுதுவதற்கு பதில்👎இந்த #caramelcustard எங்க செமையா இருக்கும் ன்னு சொல்றேன்...
Ramanathapuram நஞ்சுண்டாபுரம் ரோடு ல
#DinersPark னு ஒரு கடை இருக்கு..அங்க வெறும் ₹85 தான் ஆனா டேஸ்ட் வேற லெவல் ல இருக்கும்👌இங்க 400 ரூபாய் கொடுத்து waste😓

Fried Icecream : 3.5/5
உண்மைய சொல்லனும்னா மனைவி க்கு fried icecreamனா ரொம்ப பிடிக்கும்..அது கோவையில் ரொம்ப ரொம்ப rare..Cascade,மற்றும் சில சைனீஸ் ரெஸ்டரண்ட் ல மட்டும் தான் கிடைக்குது.அதை சாப்பிடனும் னு plan செஞ்சு தான் இங்கே வந்து இத்தனை செலவு செஞ்சிருக்கோம்🚶

நிச்சயம் பெஸ்ட் கிடையாது.. நீங்களே பார்க்கலாம்...cut செய்யவே அவ்ளோ hard ஆக இருக்கு. நிறைய பேர் fried icecream னா என்ன அது எப்படி இருக்கும்னு கேட்டிருந்தீங்க.. இப்படி தான் இருக்கும்👇👇👇

இது தான் அந்த பிரமாண்ட பில்👇
நிறைய பேர் சரியாகவே கணித்து இருந்தீர்கள்.. சில பேர் , இரண்டு பேருக்கு இவ்ளோ items ah என்று கேட்டிருந்தீர்கள். உண்மைய சொல்லனும்னா நூடுல்ஸ் மட்டும் தான் சாப்பிட்ட உணர்வு. மற்ற sides எல்லாம் எப்படி காலி ஆச்சுனு தெரியல.. ஸ்டார் ஹோட்டல் ல இப்படி தான் விலை

இருக்கும் ஆனா கொடுக்கிற காசுக்கு நிச்சயம் worth இல்லாத இடம் இந்த chin chin.. ஒரு foodie ஆக கண்டிப்பா இந்த கடைக்கு திரும்பி போக மாட்டேன்.. இதை விட குறைந்த விலைக்கு, இதை விட செமையா சாப்பிட்டிருக்கேன். இன்னொரு முக்கிய விஷயம் சொல்ல மறந்துட்டேன்.. இவங்க service🤦🤦🤦

ஒவ்வொரு டிஷ் ஆர்டர் செய்யவும்,கல்யாண வீட்ல பரிமாற கூப்பிடற மாதிரி கூப்பிட்டே இருக்கனும்.இந்த அழகுக்கு service chargeனு இவர்களே எடுத்துட்டாங்க Rs.239 +Tax🤦
Note:இது கட்டாயம் கிடையாது. நீங்க கொடுக்க விரும்பலனா, சொல்லி இதை கழித்து வேற பில் வாங்கலாம்.இது எல்லா கடைக்கும் பொருந்தும்

இதை review போட வேண்டாம் என்று தான் நினைத்தேன்..ஆனா ஏகப்பட்ட food groups ல இந்த chin chin க்கு பில்டப் கொடுத்து வெச்சிருக்காங்க..

காசு வெச்சுட்டு என்ன செய்யறது னு தெரியாம இருக்கீங்கனா..கண்டிப்பா இங்க போகலாம்..

ஆனா நான் :👇👇👇

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling