உணவை தேடி ஒரு பயணம் !!! ⚠️உணவிற்கு ஜாதி-மதம் இல்லை
( Food has No Religion )⚠️
Travel Makes Your Life Beautiful எங்களிடம் சேர்ந்து நீங்களும் பயணியுங்கள்🏞🏖️🏕️
Jul 22 • 9 tweets • 7 min read
Painting Ideas for Perfect Home Vibes
புது வீடு கட்ட போறீங்க ? அல்லது வீட்டில் Paint அடிக்கும் ஐடியா ல இருக்கீங்க என்றால் இந்த பதிவை Bookmark செஞ்சு வெச்சுக்கங்க . நான் இதை Facebook ல ஒரு பக்கத்துல (Credit : Homestitik) இருந்து save செஞ்சு வெச்சிருக்கேன்.
Set 1
Jul 19 • 12 tweets • 9 min read
#Arivom_Kumbakonam
இந்த ஊருக்கு போய்ட்டு வந்த உடனே எழுத வேண்டும் என்று தான் இருந்தேன் . ஆனா வேலை , வீட்டு சூழ்நிலை னு இவ்ளோ நாள் ஆகிடுச்சு . சரி இந்த இரண்டு நாள் பயணத்தில் நான் எந்த கோயிலுக்கு எல்லாம் போனேன் , அதன் சிறப்பு என்னனு இந்த thread ல பார்க்கலாம் .
நான் Family யா போகும் போது எவ்வளவுக்கு எவ்வளவு luxury ஆ trip plan செய்வனோ , Solo trip போகும் போது அவளுக்கு அவ்வளவு budget ல தான் plan செய்வேன் . இந்த கும்பகோணம் trip ம் பட்ஜெட் ல தான் போய்ட்டு வந்தேன் . சரி எதுல போனேன் , எங்க தங்கினேன் , எங்க எல்லாம் சாப்பிட்டேன் மொத்தம் எவ்ளோ செலவு ஆச்சு னு detail ஆ பார்ப்போம்.
நான் கோயம்பத்தூர் ல இருந்து Train ல தான் போகனும் னு முதலிலே முடிவு செஞ்சிட்டேன் . அதற்காக சில வாரங்களுக்கு முன்னையே காலை 7.15 க்கு தினமும் கோவையில் இருந்து கும்பகோணம் செல்லும் Mayiladuthurai Jan Shatabdi Express ல டிக்கெட் எடுத்துட்டேன் . டிக்கெட் விலை Rs.193/- .
இது second sitting என்பதால் அமர்ந்து செல்லும் chair seat தான் , Train உண்மையாகவே அவ்ளோ neat ஆ இருந்திச்சு . கிட்டத்தட்ட 5.30 மணி நேரம் பயணம் . ஜன்னல் சீட் தான் Book செஞ்சிருந்தேன் . போகும் போதும் வரும் போதும் மனதுக்கு தோன்றுவதை எல்லாம் எழுதினேன். அதையும் சீக்கிரம் கண்டிப்பா பதிவு செய்யறேன்.
Jul 1 • 11 tweets • 8 min read
Best Budget Pens
இதற்கு முன் ஒன்னு அல்லது இரண்டு பேனாக்களை பற்றி எழுதி இருக்கேன் . . கூடவே ஒரு நல்ல தரமான பேனாவை #Giveaway ஆகவும் கொடுத்து இருக்கோம். சமீபத்தில் தான் பயன்படுத்தி ரொம்ப நல்லா இருக்கு னு சமூக வலைத்தளங்களில் பதிவு செய்த பேனாக்களை எல்லாம் Collect செஞ்சு இந்த பதிவுல கொடுத்து இருக்கேன். Students, Office goers, Journal lovers, Business People னு யாருக்கு எந்த வகையான பேனா சிறந்ததா இருக்கும் என்றும் சொல்லி இருக்கேன் . மறக்காமல் இந்த பதிவை Bookmark செஞ்சு வெச்சுக்கங்க. கண்டிப்பா உங்களுக்கு பயனுள்ளதா இருக்கும். #Arivom_Pen1. Pentonic Gel Pen
நிறைய பேர் விரும்பி வாங்கும் Budget பேனா ல இது கண்டிப்பா இருக்கும். Pilot ink மாதிரி ரொம்ப soft ஆ எல்லாம் இருக்காது , ஆனா எழுத ரொம்ப நல்லா இருக்கும். வேகமா எழுத நினைக்கும் நண்பர்கள் இதை தேர்வு செய்யலாம் .
Ultra-Smooth Ink Flow – Writes effortlessly, no smudges, perfect for fast writing.
Useful Bike and Car Accessories - #ArivomGreatSummerSale
பைக் மற்றும் கார் வைத்திருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதா இருக்கும் இந்த thread. நம்ம வாகனங்களை நல்ல முறையில் பராமரிக்க , பாதுகாப்பா வண்டி ஓட்ட தேவைப்படும் பொருட்கள் எல்லாம் இந்த பதிவுல இருக்கும் . அதிலும் இந்த #AmazonGreatSummerSale ல நல்ல offer ல கிடைக்கும் பொருட்கள் எல்லாம் கொடுத்து இருக்கேன் . தேவைப்படும் நண்பர்கள் மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.1. Car Vacuum cleaner - #ArivomGreatSummerSale
Car க்கு நல்ல suction power உடன் இருக்கும் நல்ல vacuum cleaner வாங்க நினைத்தால் கண்டிப்பா இந்த 3 options consider செய்யலாம்.
🔅TUSA (Rs.2999) : amzn.to/3YprUtx
🔅Woscherr 2in1 Tyre Inflator & Car Vacuum Cleaner (Offer Price : Rs.1899 | Normal Price: Rs.2199) : amzn.to/42L6XeR
🔅YEARWIN 4 in 1 - Wet/Dry Use (Offer Price: Rs.2655 | Normal Price: Rs.2745) : amzn.to/44qWtm3
Mar 25 • 11 tweets • 9 min read
Home Ceiling Fan Buying Guide
போன வருடம் எப்படி ஒரு AC வாங்க வேண்டும் ? வாங்கும் போது என்ன எல்லாம் கவனிக்க வேண்டும் என்று விரிவாக எழுதி இருந்தேன் . அதே மாதிரி இந்த வருடம் Ceiling Fan வாங்கும் போது எதை எல்லாம் மனதில் வைத்து தேர்வு செய்ய வேண்டும் என்று தான் இந்த பதிவு . Fan வாங்கும் ஐடியா ல இருக்கீங்க இல்லை புது வீடு கட்டி அதில் ceiling fan போடனும் னு இருக்கீங்க என்றால் மறக்காமல் இந்த பதிவை Bookmark செஞ்சு வெச்சுக்கங்க . இந்த Thread முடிவுல சில நல்ல ceiling fans options கொடுத்து இருக்கேன் . அதனால் கடைசி வரை படியுங்கள்.
Size of Blade :
முதலில் நாம் எந்த size fan வாங்கனும் என்பதை தான் தெரிந்து கொள்ள வேண்டும் . Fan Size என்பது அதன் Blade size வைத்து தான் முடிவு செய்யறாங்க.
Most Common Size 1200 mm / 47 Inches :
இது சின்ன size ல இருந்து medium size rooms க்கு செட் ஆகும். உதாரணத்துக்கு சின்ன size bedroom , Study room ல எல்லாம் இந்த size fan தேர்வு செய்யலாம் .
1400 mm / 55 Inches :
உங்க Living Room/Hall அல்லது Master Bedroomக்கு Fan வாங்க நினைத்தால் கண்டிப்பா இந்த size fan வாங்குங்க. இது தான் அதிக range cover செய்யும்.
1200 mm / 47 Inches :
சிலர் வீடு கட்டும் போதே Kitchen பக்கத்துல Living + Dining னு common area ஆக partition கொடுத்து கட்டி இருப்பாங்க. அவர்களுக்கு இரண்டையும் சேர்த்தி cover செய்ய ஒரு Fan போதாது . . அவர்கள் இரண்டு Fan 1200mm ல தேர்வு செஞ்சுக்கலாம் . அல்லது சின்ன area தான் ஒரு Fan மாட்ட தான் provision இருக்கு என்றால் மேல சொன்ன 1400 mm / 55 Inches Fan தேர்வு செஞ்சுக்கலாம் .
900 mm / 35 Inches :
நிறைய பேர் கேட்கும் ஒரு suggestion , அம்மாக்கு அல்லது மனைவிக்கு kitchen ல வேலை செய்யும் போது வியர்க்காமல் இருக்க ஒரு நல்ல Fan சொல்லுங்க என்று தான் . அவர்கள் இந்த size தேர்வு செய்தால் போதும்.
Mar 5 • 17 tweets • 21 min read
Summer Essentials For Adults - Part 1 :
ஏற்கனவே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது . இனி மார்ச் , ஏப்ரல் , மே மாதம் எல்லாம் என்ன ஆக போறமோனு தெரியல. முடிந்த அளவு மதியம் வெளிய போகும்படி எந்த வேலையும் வெச்சுக்காதீங்க , தண்ணீர் முடிந்த அளவு எவ்ளவு குடிக்க முடியுமோ அவ்ளோ குடிங்க . . இந்த Summer சமாளிக்க தேவைப்படும் பயனுள்ள products இந்த thread ல கொடுத்து இருக்கேன் . எது உங்களுக்கு தேவைப்படுமோ அதை வாங்கிக்கங்க . மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க .1. Sunscreen (Premium):
இந்த Summer க்கு மிக முக்கிய product என்றால் Sunscreen தான் . இந்த மாதிரி உயர்ரக sunscreen வாங்கி பயன்படுத்துங்கள்..
#AmazonGreatRepublicDaySale - DAY 3 - #ArivomRepublic
இந்த முறை TWS, Water Heater எல்லாம் வாங்காதீங்க , விலையை எல்லாம் இஷ்டத்துக்கு உயர்த்தி வெச்சிருக்காங்க. இந்த பதிவுல உண்மையாகவே நல்ல offer ல கிடைக்கும் பயன் உள்ள products ஒரு thread ஆ கொடுத்து இருக்கேன். உங்களுக்கு தேவையானதை வாங்கிக்கங்க.1. Large Reversible Baby Play Mat #ArivomRepublic
இந்த MAT ஏற்கனவே நிறைய முறை suggest செஞ்சிருக்கேன். முன்ன இதன் விலை Rs. 999 இருந்திச்சு. இப்போ #AmazonGreatRepublicDaySale ல Rs.899 க்கு கிடைக்குது. உண்மையாகவே நல்ல offer. உங்க வீட்டில் குழந்தைகள் இருந்தால், நண்பர்கள் குழந்தைக்கு பயன் உள்ள gift கொடுக்க நினைத்தால் கண்டிப்பா இதை consider செய்யலாம். தேவைப்படும் நண்பர்கள் வாங்கிக்கங்க.
Arivom Dubai - Day 2:
என்னுடைய துபாய் பயணம் Day 1 பற்றி எழுதிய பதிவு நிறைய பேர் Bookmark செஞ்சு வெச்சிருக்கீங்க. இன்னும் அதை படிக்காதவங்க, அதை படித்துவிட்டு இதை தொடருங்கள். இந்த பதிவையும் மறக்காமல் bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
நாங்க Trip plan செய்யும் போதே. பெரியவர்களுக்கு தனி schedule, குழந்தைகளுக்கு தனி schedule... common ஆக எல்லாரும் போகும் இடத்திற்கு தனி schedule னு தெளிவா பிரித்து கொண்டோம். காரணம் - தேவை இல்லாமல் பணத்தையும் நேரத்தையும் வீண் அடிக்க கூடாது என்று தான். உதாரணத்துக்கு , வயதானவர்களால் இந்த Desert safari செய்ய இயலாது. கூடவே ATV rides, Camel ride எல்லாம் போக மாட்டாங்க.. அதனால் அவ்வளவு தூரம் travel செஞ்சு கூட்டிட்டு போவது not advisable. நீங்க போவதாக இருந்தாலும், இதே அட்வைஸ் தான். வயதானவர்களை கூட்டி சென்று அவதி பட வேண்டாம்.
இரண்டாம் நாள், மாலை தான் நாங்க Desert Safari போகனும் என்பதால்.. ஒரு batch காலை தங்கம் வாங்க போயிட்டோம், இன்னொரு batch Dolphinarium போயிட்டாங்க. முதலில் இந்த தங்கம் வாங்குவது பற்றி எழுதிடறேன். ஏன் என்றால் நான் துபாய் ல இருக்கும் போதே நிறைய பேர் சீக்கிரம் பகிருங்கள் னு கேட்டு இருந்தீங்க.
Location : Gold Souk
துபாய் ல தங்கம் வாங்குவதால் என்ன லாபம்?
முதலில் இதை புரிந்து கொண்டாலே துபாய் போனால் தங்கம் வாங்கலாமா வேண்டாமா என்று நீங்க முடிவு செஞ்சுக்கலாம்.
1. Tax Benefits:
நீங்க வாங்கும் தங்கத்தின் VAT திரும்ப பெற்று கொள்ளலாம் (At Airport VAT REFUND COUNTER). அதனால் எந்த காரணத்துக்காகவும் Bill இல்லாமல் தங்கம் வாங்க வேண்டாம்.
One of the primary advantages of buying gold in Dubai is the absence of Value Added Tax (VAT) on gold transactions. While tourists can get a VAT refund in Dubai, in India, gold purchases are subject to a Goods and Services Tax (GST), which is currently at 3% for gold.
2. Lower Gold Prices:
இது எல்லா கடைகளுக்கும் , எல்லா நகைகளுக்கும் பொருத்துமா என்று கேட்டால்? இல்லை என்பது தான் பதில். ஆனா பொதுவான கருத்து என்னனா ? இந்தியாவின் விலையை விட துபாயில் தங்கத்தின் விலை குறைவு என்பது தான்.
3. No Making Charges or Less Making Charges:
இது தான் மிக முக்கிய காரணம் என்று நான் சொல்லுவேன். எல்லா கடைகளிலும் "No Making Charges For Selective Designs" னு போட்டு வெச்சிருப்பாங்க. அதாவது எல்லா நகைகளுக்கும் பொருந்தாது.. ஒரு சில collections க்கு மட்டும் கொடுத்து இருப்பாங்க. ஒரு சில கடைகளில் மட்டும் எந்த நகை வாங்கினாலும் No Making Charges. அப்படிப்பட்ட ஒரு கடை தான் "ANWAR LUXURY" இந்த கடை திறப்பதற்கு முன்னையே கூட்டமா மக்கள் queue ல நிற்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த கடையில் நாங்களும் தங்கம் வாங்கினோம்.. ஆனா இங்க இருக்கும் collections எல்லாம் அவ்ளோ நல்லா இல்லை.. விலை குறைவாக, Making charges இல்லாமல் கிடைத்தது என்று மட்டும் வாங்கிட்டோம்.
இது இல்லாமல் நிறைய Reputed Gold Shops இருக்கு. Thangals , Joyalukkas, Damas, and Malabar Gold & Diamonds னு நிறைய நல்ல கடைகள் இருக்கு. இங்க collections எல்லாம் ரொம்ப நல்லா இருந்திச்சு. ஆனா நீங்க மறக்காமல் செய்ய வேண்டியது "Bargaining to reduce wastage Charges"கண்டிப்பா செய்வாங்க.
Dec 21, 2024 • 16 tweets • 9 min read
Kids Educational Games and Toys Collections :
நிறைய பேர் கேட்ட suggestion னு கூட சொல்லாம் . குழந்தைகள் நிறைய நேரம் mobile பயன்படுத்தறாங்க.. அவர்களை engage செய்ய நல்ல Educational board games நிறைய suggest செய்யுங்கனு . இந்த thread முழுவதும் படியுங்கள்.. உங்க குழந்தைகளின் வயதிற்கு ஏற்ற board games வாங்கி கொடுங்க.. குறிப்பா வாங்கி கொடுத்து அவர்களுடன் நேரம் ஒதுக்கி விளையாடுங்க. மறக்காமல் இந்த பதிவை Bookmark ல kids னு save செஞ்சு வெச்சுக்கங்க.
1.Creative Fun with Words | 3 Letter Words (Age :4+ Years)
How to Play : Build 3-letter words by assembling beautifully illustrated pictures of objects relating to child’s immediate environment.
Skills Developed : Letter recognition, Letter sounds, Spelling Reading
Dubai - My Family Trip Experience #arivomdubai
#dubaitrip #Dubai
என்னுடைய துபாய் பயணம் நிறைய பேருக்கு தெரியும். இதை பற்றி விரிவாக எழுத வேண்டும் என்பதற்காக தான் இவ்ளோ நாட்கள் எடுத்துட்டேன். 5 நாட்கள் பற்றி ஒரே பதிவில் சொல்ல முடியாது என்பதால், ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பதிவாக செய்கிறேன். முடிந்த அளவு இந்த thread உங்களுக்கு முழு தகவல்கள் கொடுக்கும் , நீங்க துபாய் போகும் ஐடியா ல இருந்தா இந்த பதிவு கண்டிப்பா பயன் உள்ளதா இருக்கும் னு நம்பறேன் . அதனால் மறக்காமல் Bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
In this Post :
🔅Ticket and VISA processing
🔅Insurance
🔅Stay/Accommodation
🔅Day 1 Dubai Experience: Miracle Garden and Global Village1. Flight Tickets and VISA processing:
The best time to visit Dubai is from November to March.
துபாய் போவது என்று முடிவு செய்துவிட்டால் முதலில் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் Ticket book செஞ்சிடுங்க. நாங்க actual ஆ டிசம்பர் மாதம் தான் போகலாம் என்று plan செஞ்சு வெச்சிருந்தோம். ஆனா November மாதமே போக மிக முக்கிய காரணம்
1. Cost Cutting 2. To Avoid Rush or long waiting time in all sight seeing places
இந்த இரண்டுமே நான் சரியாக கணித்த மாதிரியே கை கொடுத்தது.
Flight Ticket விலை, தங்கும் hotel விலை னு எல்லாமே நல்ல discount கிடைத்தது. கூடவே எதிர்பார்த்த மாதிரி எந்த sight seeing places லையும் அதிக நேரம் காத்திருக்கவில்லை.
நாங்க family ஆ 16 பேர் போயிருந்தோம். அதனால் Indigo Flight ல Group Ticket Book செஞ்சிட்டோம் . இதற்கு நாங்க எப்ப foreign trip போனாலும் organize செய்து கொடுக்கும் E-Routes நிறுவனம் தான் book செஞ்சு கொடுத்தாங்க. நீங்க airport போனால் அங்க indigo office இருக்கும், அங்கு உங்க location area manager number வாங்கினால் நீங்களே கூட book செஞ்சுக்கலாம்.
What is Group Booking and its benefits?
It is a process of reserving a set number of seats on one or more flights for a group of people traveling together.
Number of Travelers: Typically, a group booking involves a minimum number of passengers, which can vary by airline but often starts around 10 people. Some airlines might set this threshold higher, like 15 or even 20.
Discounts: One of the primary advantages of group bookings is the potential for discounted fares. Airlines offer special rates for groups because it guarantees them a block of seats, which can be more profitable than selling those seats individually over time.
Flexibility:Payment: Group bookings often come with flexible payment options, allowing you to pay in installments or have a different payment schedule compared to individual bookings. Names: There's usually more leeway with name changes or cancellations within the group than with individual tickets, although this varies by airline.
Flight Ticket Cost : Rs.23,000/Person
To : Coimbatore to Mumbai - Mumbai to Abu Dhabi
From : Abu Dhabi To Coimbatore
//போகும் போது கடைசி நேரத்தில் Flight cancel செஞ்சுட்டாங்க , அதனால் தான் Connecting flight ல வேற date ல book செஞ்சு போனோம்.
VISA PROCESS :
VISA apply செய்ய உங்களுக்கு கீழ கொடுத்து இருக்கும் format ல புகைப்படம் தேவை. அருகில் இருக்கும் ஸ்டுடியோ போனால் அவங்களே எடுத்து கொடுத்துருவாங்க.
🔅Size: The photo should be 4.3 cm x 5.5 cm (43 mm x 55 mm) in size. For digital submissions, the photo size should be 300 pixels wide by 369 pixels high.
🔅Background: The background must be plain white or off-white without any patterns, shadows, or distractions.
Required Documents:
🔅A valid passport with at least six months validity. 🔅A recent passport-sized photo as described above. Proof of accommodation (hotel booking or a letter from your host).
🔅Travel itinerary or flight tickets.
🔅Proof of financial means or employment.
VISA COST : Rs.7500/-
Points To Remember :
🔅 Check all possible destination ticket fair before confirming . Example : Check Coimbatore to Abu Dhabi, Coimbatore to Dubai, Coimbatore to Sharjah. அப்ப தான் குறைந்த விலை ticket எடுக்க முடியும். இந்த மூன்றில் எங்கு கிடைத்தாலும் ticket book செஞ்சிடுங்க.
Dec 6, 2024 • 7 tweets • 8 min read
HOW TO CHOOSE BEST WATER HEATER FOR YOUR HOME - A COMPLETE BUYING GUIDANCE ( உங்க வீட்டிற்கு சிறந்த Water Heater தேர்வு செய்வது எப்படி ) #waterheater #geyser
நிறைய பேர் தொடர்ந்து கேட்கும் ஒரு suggestion என்றால், வீட்டிற்கு நல்ல water heater சொல்லுங்க? இதை நான் போன வருடமே AC, Dishwasher , RO பற்றி எல்லாம் எழுதும் போதே water heater பற்றியும் எழுத வேண்டும் என்று இருந்தேன். முடியாமல் போனது. இப்போ தொடர்ந்து நிறைய பேர் Water Heater suggestion கேட்பதால் சரி இதை பற்றி detail ஆக எழுதலாம் என்று இந்த பதிவு.
நீங்க உங்க வீட்டுக்கு Water Heater வாங்குவது என்று முடிவு செய்துவிட்டால். முதலில் மனதில் வைக்க வேண்டியது இந்த மூன்று விஷயங்கள் தான். 1. Type 2. Size 3. Safety Features
Type :
முதலில் எந்த மாதிரி heaters எல்லாம் இருக்கு னு பார்ப்போம். இதை தெரிந்து கொண்டாலே யாருக்கு என்ன type heater set ஆகும் னு தெரிஞ்சிக்கலாம்.
1. Instant Water Heater :
இதை Tankless water heater னு கூட சொல்லலாம். இது சின்ன size bathroom , kitchen ல பயன்படுத்தலாம். உடனடியா சுடு தண்ணி கிடைக்கும் ஆனா இதில் இருக்கும் மிக பெரிய பிரச்சனை என்னனா குறைந்த அளவில் தான் சுடு தண்ணீர் கிடைக்கும்.. அதன் பிறகு 1௦ நிமிடங்களில் இருந்து 15 நிமிடம் வரை break கொடுக்கனும்.
2. Storage Geyser :
இது 1௦ லிட்டர் ல இருந்து 25 லிட்டர் capacity வரைக்கும் இருக்கு. உங்க வீட்டில் எத்தனை பேர் இருக்கீங்க, என்ன மாதிரி bathroom setup செஞ்சிருக்கீங்க என்பதை பொருத்து தேர்வு செய்யவேண்டும். உதாரணத்துக்கு உங்க வீட்டில் 5 ல இருந்து 8 பேர் வரைக்கும் இருக்கீங்க கூடவே வீட்டில் Bath Tub இருக்கு அல்லது எப்பவுமே shower ல தான் குளிப்பீர்கள் என்றால் கண்டிப்பா 25 litre capacity இருக்கும் heater தேவைப்படும். அளவான குடும்பம், தினமும் பக்கெட் தான் பயன்படுத்துவீங்க என்றால் 15 litre water heater போதுமானது.
Sep 29, 2024 • 24 tweets • 12 min read
Useful Products Under 500 to buy in #AmazonGreatIndianFestival2024 #ArivimGreatIndian
Check all the products in this thread. Totally 23 Products shared in this post.
1.Super Soft (40x60 cm) Microfibre 2000 GSM Bath Mat Super Absorbent Anti-Skid Door Mats
HOMEDECOR PRODUCTS COLLECTIONS – WEDDING AND HOUSEWARMING SPECIAL GIFTS COLLECTIONS - PART 1
நிறைய பேர் சொந்த வீட்டை decorate செய்யவும் , நண்பர்கள் கல்யாணம் அல்லது புதுமனை புகுவிழாக்கு கொடுக்க நல்ல gift suggest செய்யுங்கனு கேட்டுட்டே இருப்பீங்க. அதற்காக தான் இந்த thread. இதுல நிறைய பயன் உள்ளதாகவும் , அழகான gift products நல்ல reviews இருக்கறதா கண்டு பிடிச்சு இந்த தொகுப்பு ல கொடுத்து இருக்கேன். உங்களுக்கு எப்ப யாருக்கு gift கொடுக்க வேண்டும் என்றாலும் இந்த பதிவு பயன் உள்ளதா இருக்கும். அதனால் மறக்காமல் bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
யானை ஆசிர்வாதம் செய்வது போல் வீட்டில் அல்லது கடையில் வைப்பது நிறைய பேருக்கு செண்டிமெண்ட் ஆக பிடிக்கும். ஒரு இடத்தில் யானை இருந்தால் ஒரு மாதிரி positive ஆ feel ஆகும். நானும் என்னுடைய workspace பக்கத்தில் ஒரு யானை போட்டோ மாட்டி வெச்சிருக்கேன். இப்போ சமீபத்தில் என் அக்கா ஒரு fitness studio தொடங்கியதற்கு வாழ்த்து தெரிவித்து இந்த Blessing Elephants தான் வாங்கி கொடுத்தேன். உங்களுக்கும் உங்க வீட்டில் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில் இந்த யானையை வைக்க விரும்பினால் மறக்காமல் வாங்கிக்கங்க. இதுல 3 materials options கொடுத்து இருக்கேன்.
Eden Woods Resorts & Spa | Luxury Five Star Resort in Munnar,Kerala
நான் மூனார் போனது உண்மையாகவே பிளான் செய்யாத sudden trip தான். நான் இதற்குமுன் மூனார் போகனும் னு note செஞ்சு வெச்சிருந்த resort எல்லாம் கடைசி நேரம் என்பதால் rooms கிடைக்கல (அது இதை விட costly) அதனால் இந்த resort தேர்வு செஞ்சோம்.
இந்த பதிவு ல முடிஞ்ச அளவு photos மற்றும் குட்டி குட்டி videos போஸ்ட் செஞ்சு கூடவே அதற்கான விளக்கம் short ஆ எழுதறேன்.
Coimbatore ல இருந்து 170 KM வரும். கிட்டதட்ட 5 மணி நேரம் ஆகும் (காரில் சென்றால்). நாங்க
கோவை - பொள்ளாச்சி - உடுமலைப்பேட்டை ரோடு வழியாக மறையூர் பின் மூனார் சென்று அடைந்தோம்.
இந்த resort மூனார் ல இருந்து 17 km தள்ளி outer ல இருக்கு. மூனார் ல இருந்து resort போகும் வழி தான் இது. Google Map சரியாக கூட்டி சென்று விடும்.
Useful products for children to use during rainy season - மழை காலங்களில் பயன்படுத்த குழந்தைகளுக்கு தேவையான பயன் உள்ள பொருட்கள். PART - 1 #arivomkids
நான் இதை மழை காலங்களில் எழுதலாம் னு இருந்தேன். ஆனா இப்பவே நிறைய பேர் கேட்க தொடங்கி விட்டனர். Climate கூட இப்போ தொடர்ந்து மழை வந்துட்டே இருக்கு. இனி பள்ளிகள் திறந்தால் வீட்டில் இருந்து பள்ளிகள் வரை செல்வதற்குள் ஒரு வழி ஆகிடும். முடிந்த அளவு குழந்தைகளுக்கு பயன் உள்ள பொருட்களாக இங்க பதிவு செய்யறேன். உங்களுக்கு எது தேவைப்படுதோ அதை மட்டும் வாங்கிகங்க.1. Raincoat for kids - #arivomkids
Kids Waterproof Nylon Double Coating Reversible Ankle Length Raincoat With Hood And Reflector Logo At Back. Set Of Top And Bottom. Printed Plastic Pouch.
Age Group : 5 to 7 years
நீங்க 2 wheeler அல்லது 4 wheeler எதுல பயணம் செய்தாலும் குழந்தைகளின் raincoat மறக்காமல் வெச்சுக்கங்க.
பள்ளிக்கு செல்ல தேவையான பயனுள்ள பொருட்கள் – Useful Products for Kids - Part 1
இன்னும் சில நாட்களில் பள்ளிகள் ஆரம்பம் ஆக போகுது . இப்போ இருந்தே பள்ளிக்கு செல்ல தேவையான பொருட்கள் வாங்க ஆரம்பித்து இருப்பீர்கள். அதற்கு தகுந்த மாதிரி தான் ஒரு வாரமா பள்ளிகள் சமந்தமான பொருட்களையே நிறைய பேர் கேட்டுட்டும் இருந்தீர்கள். அதற்காக தான் இந்த பதிவு.
இந்த பதிவுல பள்ளிக்கு செல்ல தேவையான பயன் உள்ள பொருட்களை ஒரு தொகுப்பா வழங்க முயற்சி செய்யறேன். என் பையனுக்கு ஏற்கனவே நிறைய பொருட்கள் வாங்கியாச்சு. அதையும் இந்த பதிவுல சொல்றேன். முடிந்த அளவு சீக்கிரம் வாங்கிடுங்க, ஜூன் முதல் வாரம் நிறைய பொருட்கள் Out of stock ஆகிடும். அப்ப என்ன இருக்கோ அதை மட்டுமே தேர்வு செய்யற மாதிரி ஆகிடும். இல்லை இப்போ Vacation ல இருக்கேன், இன்னும் சில நாட்கள் கழித்து தான் வாங்க முடியும் என்றால் இப்போதைக்கு Bookmark செஞ்சு வெச்சுக்கங்க #arivomschool
இந்த பதிவுல Part - 1 மட்டும் தான் போட முடிந்தது.. அடுத்த part இன்று காலை 11 மணிக்கு வெளியாகும்.1. Lunch Box : #arivomschool
இருப்பதலையே கஷ்டமான வேலை இந்த குழந்தைகளுக்கு நல்ல Lunch Box தேர்வு செய்வது தான். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு மாடல் செட் ஆகும்.. அது குழந்தைகளின் உணவு முறையை பொருத்து வேறுபடும் . இங்க பொதுவா மார்கெட் ல இருக்கும் தரமான Lunch Box Collections மட்டும் கொடுத்து இருக்கேன். உங்கள் குழந்தைகளுக்கு எது செட் ஆகுமோ அதை தேர்வு செஞ்சுக்கங்க .
CELLO Max Fresh Click Lunch Box Set with Bag
3 Containers, 300ml மாடல் கொடுத்து இருக்கேன். இதுலயே 5 container மாடல் கூட இருக்கு. உங்கள் தேவைக்கு தகுந்த மாதிரி தேர்வு செஞ்சுக்கங்க. #arivomschool
நானும் திருப்பதி பற்றி எழுதலாம் எழுதலாம் னு draft செஞ்சிட்டே இருந்தேன். தொடர்ந்து எழுத முடியல.. இந்த பதிவை தொடங்கும் முன்னையே சொல்லிடறேன். என்ன ஒரு religion பற்றி மட்டும் எழுதறீங்க னு நினைக்க வேண்டாம். நாளைக்கே வேளாங்கண்ணி போனா அந்த travel journey பற்றியும் எழுதுவேன்.. இது எல்லா Religion trip க்கும் பொருந்தும்.
திருப்பதி க்கு நான் எப்போ போனாலும் ஒரே pattern தான் follow செய்வேன். அதாவது Train ல போயிட்டு, முதல் நாள் கீழ் திருப்பதி, இரண்டாம் நாள் மேல் திருப்பதி . அதே நாள் இரவு train ல return. இதே தான் இந்த முறையும் பின்பற்றினேன். நான் தனியா போறேன் என்றால் பெருசா பிளான் எல்லாம் செய்ய மாட்டேன். திடீர் னு கிளம்பி போயிடுவேன். அதுவே வயதானவர்களை கூட கூட்டிட்டு போறேன் என்றால் 3 மாதம் முன்னையே பிளான் செஞ்சிடுவேன். இந்த முறை பெரியவர்கள் உடன் தான் சென்றோம். நான் என்ன எல்லாம் செஞ்சேன் னு ஒவ்வொரு thread ஆ பதிவு செய்யறேன்.
Darshan Ticket :
Train டிக்கெட் க்கு முன்னாடி நாம் புக் செய்ய வேண்டியது இந்த தர்ஷன் டிக்கெட் தான். Free Darshan போறீங்கனா எந்த கவலையும் இல்லை. ஆனா வயதானவர்களை கூட்டிட்டு போறீங்கனா இந்த website ல முன்பதிவு செஞ்சு எதாவது ஒரு தர்ஷன் டிக்கெட் வாங்கிடுங்க. அது தான் சிறந்தது.
Link to Book Darshan Tickets and Accomodation :
நான் இந்த முறை Srivari Arjitha Sevas தான் புக் செஞ்சிருந்தேன். ஒரு டிக்கெட் விலை Rs. 500 . இதை புக் செய்ய இந்த website தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். slot open ஆகும் போது உடனே புக் செய்ய வேண்டும். Book செய்ய போறீங்கனா , திருப்பதி போகும் நபர்களின் ஆதார்களை எல்லாம் தயாராக வெச்சுக்கங்க. மட மட னு புக் ஆகிடும். நல்ல internet கிடைக்கும் இடத்தில் அமர்ந்து முயற்சி செய்வது advisable. இதில் மிக முக்கியமான விஷயம் ஒரு ID பயன் படுத்தி இரண்டு டிக்கெட் தான் எடுக்க முடியும். சீக்கிரம் சீக்கிரமா புக் செய்தால் தான் அனைவர்க்கும் ஒரே சேவா கிடைக்கும்.
Arjitha Seva என்றால் மதியம் 2.30 மணிக்கு தொடங்கும். தனி மண்டபத்தில் சாமிக்கு தீபாராதனை எல்லாம் காட்டி ஒரு 30 நிமிடம் நடக்கும்.
Important Rules to follow in Arjitha Seva :
ஆண்கள் வேஷ்டி சட்டையும், பெண்கள் சுடிதார் அல்லது புடவை மட்டும் தான் கட்டி இருக்க வேண்டும்.
Arjitha Sev முடிந்த பிறகு Special Darshan line க்கு அனுப்பி வெச்சிடுவாங்க. அங்க போய் line ல நின்னா கூட்டத்தை பொருத்து சாமி தரிசனம் நேரம் மாறும். நாங்கள் போன time குறைவான கூட்டம் தான். 1.15 மணி நேரத்தில் சாமி தரிசனம் செஞ்சிட்டு வெளிய வந்திட்டோம். இதில் வேற எதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. சொல்றேன்.
#Moisturizer #Feb27
ரொம்ப நாளா ரொம்ப பேர் கேட்டுட்டு இருக்கற ஒரு Personal care product னா Moisturizer மற்றும் Sunscreen. இந்த பதிவுல Moisturizer பற்றி மட்டும் பார்ப்போம். Suggestion தொடங்கும் முன்னையே சொல்லிடறேன், நான் Skin டாக்டரோ , expert எல்லாம் கிடையாது. நான் எனக்கு ஒரு நல்ல Moisturizer தேர்ந்தெடுத்தால் , எதை எல்லாம் கவனித்து வாங்குவேன் என்பதை மட்டும் தான் இங்க சொல்ல போறேன். உங்களுக்கு தெரிந்த Dermatologist யாராவது இருந்தால், அவங்க கிட்ட ஆலோசனை கேட்டு இது உங்க Skin க்கு செட் ஆகுமா என்பதை தெளிவு படுத்திட்டு பிறகு கூட வாங்கிக்கங்க .
Moisturizer எதற்கு?
சோப்பு போட்டு முகம் கழுவும் போது, தனியா Moisturizer னு எதற்கு வாங்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். நம்ம skin ல Moisture ரை ( ஈரபதம் ) தக்க வைத்து , நம்ம skin dry ஆகாமல் தடுக்க பயன்படுத்தும் ஒரு product தான் Moisturizer .
யார் Moisturizer பயன் படுத்தலாம் ?
Skin Allergy இல்லாதவங்க அனைவரும் இந்த Moisturizer பயன் படுத்தலாம். ஆனா நீங்க வாங்கும் Moisturizer உங்க Skin type க்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டும்.
நான் Follow செய்யற சின்ன trick/ method ?
நான் புதுசா என்ன cream , Moisturizer , soap , sun screen எது வாங்கினாலும் முதலில் முகத்தில் போட மாட்டேன். முதல் இரண்டு நாள் என் கை ரிஸ்ட் (மணிக்கட்டு) பக்கத்தில் தான் போடுவேன். இது எதற்குனா ? என் Skin க்கு அந்த cream/product செட் ஆகுதானு check செய்யத்தான். நீங்களும் இதை follow செய்யலாம்.
ஒரு Moisturizer வாங்கும் போது அந்த LABEL ல என்ன எல்லாம் கவனிக்கனும் ?
1. Light Gel Based : நீங்க வாங்கும் Moisturizer முடிஞ்ச அளவு Gel format ல வாங்கிக்கங்க (Gel cream னு mention செஞ்சிருப்பாங்க) 2. Water Based 3. Oil Free 4. Non Comedogenic (இந்த Comedogenic இருந்தா Blackheads வரும் னு சொல்லுவாங்க ) 5. Select Correct skin type – For Oily Skin, Dry Skin
Note : Mostly don’t prefer cream based or Lotion based Moisturizer. It can cause Greasy Feeling or Dullness on your skin.
எந்த Moisturizer நீங்க Avoid செய்ய வேண்டும் ?
உங்க Moisturizer ல பின்னாடி திருப்பி பார்த்தா, ingredients கொடுத்திருப்பாங்க . அதுல Occlusive Ingredients like Liquid Paraffin,Mineral oil, Petroleum Jelly போன்றவற்றை தவிர்க்க பாருங்கள் .
Will Moisturizer 100% Works?
நீங்க இங்க நான் suggestion ல சொல்ல போகும் Moisturizer வாங்கி பயன் படுத்தினாலும் சரி, இதை விட விலை அதிகமா லட்ச கணக்குல செலவு செய்து Moisturizer வாங்கி பயன் படுத்தினாலும் சரி.. கீழ சொல்ற விசயங்களில் அக்கறை இல்லை என்றால் எந்த Moisturizer வாங்கினாலும் உங்க முகத்தை பொலிவு அடைய செய்யாது என்பதை கவனத்தில் சொல்லுங்கள்.
1. Should go to bed before 9.30 PM and wakeup at 5AM (Don’t Eat any food after 8pm) 2. Dehydration: Main reason for skin problem is lack of water in your body. Take at least 4 to 5 liters of water daily. 3. If you smoke or drink – Please don’t waste your money on these skin care products.. because it never and ever help you L 4. Healthy Food Diet : Take sunflower seeds, walnuts,Fish (salmon), Egg white, Dry Grapes, Soya, Groundnut, Dates,Dark chocolates, Avacados, Water melon, Orange , Carrot, Spinach . 5. Avoid 2 things: Sugar and Oil fried foods. 6. Weekly once or twice Oil Bath | If Possible pls do 10 minutes massage to your face using Olive oil or Almond oil. 7. Finally 1 hour home based exercises.
சரி மார்க்கெட் ல இருக்கற 10 நல்ல moisturizer என்ன னு சொல்றேன். நான் சொல்ல போகும் எல்லா Moisturizer களும் Occlusive Ingredients இல்லாதது. இதன் விலை Premium and Budget இரண்டுலையும் கலந்து சொல்றேன். உங்க budget க்கு ஏற்ற moisturizer வாங்கிக்கங்க1. Neutrogena Hydro Boost Hyaluronic Acid Moisturizer | 5x Hydration | Water Gel Infused with 9 Amino Acids | For All Skin Types | For Men & Women 50g
இது எல்லா வகையான Skin க்கும் செட் ஆகும். குறிப்பா Oily Skin இருபவர்களுக்கு இந்த Moisturizer நல்லா இருக்கும். இது நாம் apply செஞ்சதும், நம்ம face ல apply செஞ்ச மாதிரியே இருக்காது. அவ்ளோ light ஆ இருக்கும். இன்னொரு முக்கியமான விசயம் இது Unscented – அதாவது எந்த வகையான நறுமணம் இருக்காது.
Price : Rs.1012
Reviews : 4.3 * | 15,182 Ratings
இது கொஞ்சம் costly moisturizer ஆனா worth. தேவை படும் நபர்கள் மட்டும் வாங்கிக்கங்க .
Link to buy this Quality Moisturizer with good customer feedback : amzn.to/3T9h6xb
Feb 19, 2024 • 16 tweets • 21 min read
#Airconditioner #AC #Feb19
Summer தொடங்கும் முன்னையே டிசம்பர் மாதம் முதலே நல்ல AC suggest செய்யுங்கனு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க . அதுவும் ஒரு விதத்தில் சரி தான் கோடைகாலத்தில் AC விலை எல்லாம் fixed ஆ இருக்கும். பெரிய discount அல்லது offer எல்லாம் கிடைக்காது.
முதலில் நான் AC Expert எல்லாம் இல்லை என்பதை முதல் வரியிலேயே சொல்லிடறேன். இந்த பதிவு முழுக்க முழுக்க என் சொந்த அனுபவத்தில் மட்டுமே எழுதறேன். எங்களுக்கு இரண்டு வீடு இருக்கு, அதில் நாங்க இதுவரைக்கும் பயன் படுத்திய AC (Lloyd, Bluestar, LG), இன்னும் பயன் படுத்திட்டு இருக்கும் AC ( Carrier, Onida, Hitachi and Samsung ) , மற்றும் எங்க Commercial பில்டிங் ல ஒரு IT company இருக்கு, இதில் 7 AC புதியதாக வாங்கி பயன் படுத்திட்டு இருக்காங்க (Voltas,Panasonic and Daikin) ... இவை எல்லாம் சேர்ந்து கொடுத்த அனுபவத்தை வைத்து தான் இந்த பதிவு
Types of AC :
இந்த படத்தை பார்த்தால் இங்க மார்க்கெட் ல என்ன மாதிரி AC எல்லாம் இருக்கு னு புரியும். இது இல்லாமல் Ceiling , Floor Mounted, Portable னு நிறைய category இருக்கு. ரொம்ப confuse ஆகாமல், நாம் இன்னிக்கு பார்க்க போறது split AC மட்டும் தான்.
Feb 8, 2024 • 10 tweets • 14 min read
#Waterpurifier #RO #Feb8
ரொம்ப நாளா ரொம்ப பேர் கேட்டுட்டு இருக்கற ஒரு suggestion இந்த RO . நான் collect செஞ்ச எல்லாவற்றையும் சேர்த்தி தொகுத்து எழுதி இருக்கேன் . கொஞ்சம் பெரிய பதிவு தான் ஆனா கண்டிப்பா பயன் உள்ளதா இருக்கும்னு நம்பறேன் .
முதலில் நாம் RO பற்றி பார்க்கும் முன் இந்த TDS னா என்னனு தெரிஞ்சிக்குவோம் . அப்போ தான் இந்த RO உங்களுக்கு தேவை படுமா தேவைபடாதானு தெரியும் .
TDS என்றால் என்ன ?
· Total Dissolved Solids (TDS) are all the good and bad elements in your drinking water.
· These can be organic and inorganic substances such as minerals, salts, metals, cations, or anions dissolved in water.
· The TDS level is measured in parts per million (PPM) and milligrams per liter (mg/L).
சரி அப்ப TDS எவ்ளோ இருந்தா நாம் குடிக்கும் தண்ணீர் safe ?
World Health Organization (WHO) என்ன சொல்றாங்கனா TDS value 300க்கு குறைவா இருந்தா தான் அது குடிப்பதற்கு உகந்தத தண்ணீர் னு சொல்றாங்க .
What is a good level of TDS in water?
Between 50-150 -------------- Excellent for Drinking
Between 150 – 250 ------------- Good
Between 250 – 300 ------------- Fair
Between 300 – 500 ------------- Poor
Above 1200 ---------------------- Unacceptable
உங்க வீட்டில் இருக்கும் தண்ணீர் TDS எவ்ளோ இருக்குனு முதலில் தெரிந்து கொள்ளுங்கள் . அப்போ தான் உங்களுக்கு எந்த product போதுமானது னு தெரியும் . இந்த TDS கணக்கிட ஒரு product ஏற்கனவே நான் பதிவு செஞ்சிருக்கேன் . தேவை படும் நபர்கள் வாங்கிக்கங்க