சங்ககாலத்தில் பயிர்த்தொழிற் கருவிகள்!
நீர் வளமும், நில வளமும் மிக்க தமிழ் நாட்டில் பண்டைக் காலந்தொட்டே நிலத்தின் தன்மைக்கேற்பப் பயிர்களைத் தேர்ந்தெடுத்து, செய்வனயாவும் செவ்வனே செய்து நல்ல வருவாய் பெற்று வளமுடன் வாழ்ந்தனர்.
பயிர்த்தொழிலுக்கு வேண்டிய கருவிகளான கொழு, கணிச்சி, கோடரி, அரிவாள், உளிவாய்ப் பாரை ஆகியவற்றைக் கொல்லர்கள் வடித்துக் கொடுத்தனர்.
▪︎ கொழு:
உழவுத்தொழிலில் நன்கு பயின்ற பெரிய எருதுகளை நுகத்தில் பூட்டி உழவர்கள் உழச்சென்றனர். பெண் யானையின் துதிக்கை போன்று வளைந்த வாயை உடைய...
கலப்பையில் பொருத்தப்பட்ட, உடும்பு முகத்தை ஒத்த #கொழு, நிலத்தில் முழுவதும் ஆழ அழுந்துமாறு உழுதனர்.
புன்செய் நிலத்தில் வித்திட வேண்டி வலிமையான கைகளை உழவர்கள் கடாக்களை நுகத்தில் பூட்டி உழுதனர்.
நிலத்தில் கலப்பையின் #கொழு சென்ற படைச்சாலெங்கும் ஒளிவிளங்கும் மணிகளைக் கொண்ட கதிர்கள் விளைந்தன.
புன்செய் நிலத்தை உழுத கொழுப்போல, எம் பற்கள் இரவும் பகலும் இறைச்சியைத் தின்றதால் முனை மழுங்கியது.
▪︎ கணிச்சி (#குந்தாலி):
பாறைப் பகுதியைத் தோண்டி நீர் பெறுதற்கும், கற்கள் நிரம்பிய இடங்களைச் சமன் செய்யவும், பரற்கற்கள் உள்ள பகுதியில் பள்ளம் தோண்டவும் பயன்படும் கருவி #கணிச்சி.
இதனைக் #குந்தாலி, #கூந்தாலம் எனவும் ஆங்கிலத்தில் Pick-Axe எனவும் கூறுவர்.
காட்டைச் சார்த்த இடத்தே, குந்தாலியால் பாறைகளை உடைத்துத் தோண்டப் பெற்ற கிணற்றுள் மிக்க ஆழத்தில் நீர் ஊறிக்கிடக்கும்.
வெயிலின் வெம்மையால் கொதிப்புற்ற பரற்கற்களை உடைய பள்ளங்களில், கணிச்சியால் குழிதோண்டி உருவாக்கிய கிணறுகளில் பசுக்கூட்டத்தை மேய்க்கும் #ஆயர்கள் நீரைக் காணாராகி...
அவ்விடத்தே மேலும் தோண்டி ஊறிவரும் நீரைத் தாமும் குடித்து ஆனிரையின் விடாயும் தீர்ப்பர்.
▪︎ நவியம் (கோடரி)
இக்கருவி #கோடாலி என்றும் அழைக்கப்பெறும். இக்கருவி மரங்களை வெட்டுதற்குப் பயன்படுவது. வடித்தலினால் செய்யப்பட்ட #கோடரி வெட்டுவதனால்...
ஊர் தோறுமுள்ள காவல் மரங்கள் உள்ள சோலைகள் நிலை குலைந்தன.
நெடிய காம்புகளை உடைய கோடரி பாய்தலால் மணமிகு பூக்கள் உள்ள, நெடுங்கிளைகள் முறிந்து தனியே கிடப்பவும், சோலைகள் தோறும் உள்ள காவல் மரங்கள் வெட்டப்படுகின்றன.
▪︎ அரிவாள்:
நன்கு விளைந்த நெல், வரகு முதலிய கதிர்களைக் கூரிய அரிவாளால் அறுத்து, கட்டாகக் கட்டி, களத்து மேட்டிற்கு எடுத்துச்செல்வர்.
நெற்கதிரை அரிகின்ற உழவரது கூரிய #அரிவாள் பற்றி #நற்றிணை கூறுகிறது.
நெற்கதிர்களை அறுவடை செய்யும் உழவர்கள், தம் அரிவாள்கள் கூர் மழுங்கின், மீண்டும் அவை வலிமையுடன் கதிர் அறுக்க, தீட்டும் கல் #அரியக்கல் என்று அழைக்கப்படுவதைப் புறம் சுட்டுகிறது.
குயம், இரும்பு ஆகிய சொற்கள் கதிர், அரிவாள் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளன.
குனிந்து நின்று அரிவாளின் வாயாலே நெற்கதிரை அறுத்து,
அரிவாளால் அரிதலுற்றன பெரிய புனத்திலுள்ள வரகுக் கதிர்கள்.
▪︎ உளிவாய்ப் பாரை:
இக்காலத்து #பாரை என்று வழங்கும் கருவி போன்றது.
ஆனால் #பாரை போலல்லாது ஒரு பக்கம் உளிபோன்று கூர்மையான அமைப்பும், மற்றொரு பக்கம் கருங்காலி மரம் போன்ற வலிமையான மரங்களாலான பிடியும் கொண்டது.
இப்பிடியின் தலையில் #இரும்புப்பூண் கட்டப்பட்டிருக்கும்.
இக்கருவி கரிய கரம்பு நிலத்தைக் குத்திக்கிளரப் பயன்பட்டது.
இரும்பாலான பூண் தலையிலே கட்டப்பட்டுத் திரட்சி உடைய மரத்தாலான கைப்பிடி உடையதும், உளி போலும் வாயை உடைய பாரைகளாலே கட்டிகள் கீழ் மேலாக வரும்படி குத்திக் கிண்டினர்.
- நன்று.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.