அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jun 3, 2022, 14 tweets

#காஞ்சிகாமாட்சிஅம்மன்
அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன் அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி. காம என்றால் அன்பு, கருணை. அட்ச

என்றால் கண். எனவே, காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள். அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைக் கொண்டது. அன்னை பராசக்தி தேவியின் அருள் நிறைந்து விளங்கும் முக்கிய திருத்தலங்கள் மூன்று.

அவை:
காஞ்சி காமாட்சி,
மதுரை மீனாட்சி,
காசி விசாலாட்சி திருக்கோவில்களே. அவற்றில் காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது. புண்ணிய பூமியான பாரத தேசத்தில் உள்ள ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள், காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது.

ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப சொரூபிணியாகத் திகழ்வது, அன்னை காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஒன்று தான். அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள். திருக்கோவில் காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில், ஐந்து நிலைகளைக் கொண்ட அழகிய

ராஜகோபுரத்துடன் ஓர் அழகிய, கம்பீரமான ஆலயமாக அமைந்துள்ளது. காமாட்சி அம்மன் திருக்கோவிலில் ஸ்தூலம், சூட்சுமம், காரணம் எனும் மூவகை வடிவிலும் அமைந்து அருள் புரிகின்றாள். பெரும்பாலான கோவில்களில் இவற்றில் ஒன்றிரண்டு வடிவில் தான் அன்னை காட்சியளிப்பாள். அந்த மூவகை வடிவங்களாவன:
காமகோடி

காமாட்சி (ஸ்தூல வடிவம்)
(மூல விக்கிரக உருவில்).
அஞ்சன காமாட்சி (அரூப லட்சுமி) (சூட்சும வடிவம்).
காமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம் (காரண வடிவம்).
காமாட்சி அன்னைக்கு மகாதேவி,
திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு.

காஞ்சிபுரம் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை. அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சி அளிக்கின்றனர். மூல

மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சி அளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது. ஆனால் இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப்

பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள். தந்திர சூடாமணியின்படி இத்தலம் 51 சக்தி பீடங்களில் தேவியின் இடுப்பு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோவிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும்

உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார். இக்கோவிலில் காமாட்சி அம்மன் இரண்டு கால்களையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு

கையிலும் கொண்டுள்ளார். காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை ஏற்படுத்துமாம். அயோத்தியின் தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோவிலில் ’புத்திர காமேஷ்டி’ யாகம் செய்தார். இது மார்கண்டேய புராணத்தில் உள்ள தகவல் ஆகும். 70 கிலோ

தங்கத்தில் கருவறை விமானம் அமைந்துள்ளது. பராசக்தியாய் எழுந்தருளி இருக்கும் காமாட்சி அம்மன் திருக்கோவில் 1841, 1944, 1976, 1995, 2017 ஆகிய வருடங்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. கோவிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோவில் 5 ஏக்கர்

பரப்பளவில் அமைந்துள்ளது.
வெளிப் பிரகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம். காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிற்குக் போனால் அனைத்து அம்பாள் சன்னதிக்கும் போன பலன் நமக்கு கிடைக்கும். அந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்த அம்மன். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ள

இத்திருக்கோவிலில் கள்வர் பெருமாள் உள்ளது குறிப்பிடத் தக்கது. நகரங்களில் சிறந்தது காஞ்சி என்பது முதுமொழி. ஏராளமான புண்ணியம் தரும் கோவில்களை கொண்ட இந்த நகருக்கு தினந்தோறும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வணங்கி செல்கின்றனர்.

ௐம் சக்தி பராசக்தி
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling