#மப்பேடு #சிங்கீஸ்வரர்_கோவில் #வீனை_வாசிக்கும்_அனுமன் திருவாலங்காட்டில் இறைவன் ஆனந்த தாண்டவ நர்த்தனம் ஆடியபோது சிங்கி என்ற நந்தி மிருதங்கம் இசைப்பதில் ஆழ்ந்திருந்ததால் அந்த நடனத்தை ரசிக்கத் தவறிவிட்டார். இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனைத்தைக்
காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்தினுள் மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார்.
நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன்தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார்.
சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு #சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பஜாம்பாள் என்றும், பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். இங்கு விசேஷமாக ஆஞ்சனேயர் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில்
பிறந்தவர். கலைமகளாகிய சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலமே. இவள் ஒரு மூல நட்சத்திரத்தன்று ஆஞ்சநேயரின் நாவில் வெண்தாமரை தண்டினால், சிங்கநாத பீஜாட்சர சக்திகளை பொறித்தாள். இதனால் இவர் பேச்சு தெளிவானதாகவும், உயிர்களைக் காப்பாற்றும் விதத்திலும், சமயோசிதமாகவும் இருந்தது. சொல்லின் செல்வர்
என்ற பட்டமும் கிடைத்தது. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது பிறந்த நட்சத்திரத்தன்று இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் கல்வியிலும், பேச்சிலும் சிறந்து விளங்குவார்கள். சிவன் சன்னதியின் முன் #வீணை_வாசிக்கும்_ஆஞ்சநேயர் உள்ளார். சீதையை தேடிக்கொண்டு அனுமன் தென்திசை சென்றபோது,
இந்த தலத்திற்கு வந்ததாகவும், அப்போது மழையின்றி வரட்சியுடன் காணப்பட்ட இந்த பகுதி செழிக்க அருள் புரியுமாறு இப்பகுதி மக்கள் வேண்டிக் கொண்டதால் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க, ஆஞ்சநேயர் அமிர்தவர்ஷினி ராகத்தை இசைத்து பாடினார் என்றும் அதன் தொடர்ச்சியாக பெரும் மழை பெய்தது என்றும் சொல்லப்
படுகிறது. இசைத்துறையில் பிரகாசிக்க விரும்புவோர் இவரை வணங்கினால் சிறப்பாக விளங்குவார்கள். வீரபாண்டியன் தலை கொண்டவன் என்ற பெயர் கொண்ட சோழ மன்னனான இரண்டாம் ஆதித்திய கரிகாலனால் கி.பி.976ல் கோவில் கட்டப்பட்டது. இவன் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனின் தகப்பனார். பின்னர் இதே
கிராமத்தில் பிறந்த அரியநாத முதலியார் கிருஷ்ண தேவராயர் மதுரையை ஆண்ட காலத்தில் தளவாயாக இருந்ததால் அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி கி.பி.1501ல் கோவில் ராஜ கோபுரம், மதில் சுவர் மற்றும் 16 கால் மண்டபத்தை கட்டி வைத்தார்.
முகவரி: அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோவில், மப்பேடு – 631 403
(பேரம்பாக்கம் வழி), திருவள்ளூர் மாவட்டம்
திறக்கும் நேரம்: காலை 6.00 – 9.00 AM மாலை 5.30 – 7.30 PM . ஃபோன்: 94447 70579,
94432 25093
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.