சார்பெழுத்துக்கள் யாவை?
1. உயிர்மெய் எழுத்துக்கள் (216)
2. ஆய்த எழுத்து
3. குற்றியலுகரம்
4. குற்றியலிகரம்
5. உயிரளபெடை
6. ஒற்றளபெடை
7. ஐகாரக் குறுக்கம்
8. ஒளகாரக் குறுக்கம்
9. மகரக் குறுக்கம்
10. ஆய்தக் குறுக்கம்
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் 30 மட்டுமே!😍
tamil.oneindia.com/news/thiruvall…
தமிழ் எழுத்துக்கள், 30 மட்டுமே!
247 என்று சொல்லிக்
குழந்தைகட்கு அச்சமூட்டாதீர்!🙏
எழுத்து எனப் படுப
அகரம் முதல் -னகர இறுவாய்
முப்பஃது என்ப (தொல்காப்பியம்)
உயிர்= 12
மெய்= 18
மொத்தம்= 30
பிற எல்லாமே ’சார்பு’ எழுத்துக்கள் தான்!
அவை எண்ணிக்கையில் வாரா!
உலகமெங்கும் இதுவே நடைமுறை!
Sanskrit எழுத்துக்கள், மொத்தம் 46-52 தான்!
*swarah (Vowels)= 13-16
*vyanjanaani (Consonants)= 33-36
क (ka) எழுத்தை மட்டுமே எண்ணுவார்கள்!
का (kaa), कि (ki), की (kee), कु (ku), कू (koo)
என்றெல்லாம் எண்ண மாட்டார்கள்!
அப்படி எண்ணினால்.. மொத்த
Sanskrit எழுத்து= 429-576 வந்துரும்!😂
*ஏன் தமிழில் மட்டும்
கா, கி, கீ.. எண்ணி விட்டு
*Sanskrit-இல் மட்டும்
का, कि, की.. எண்ணுவதில்லை?
தமிழ் மிகவும் கடினம்
247 எழுத்துக்கள்..
என்று வேண்டுமென்றே வலிந்து பரப்பிய
பழைய பாப்பார வாத்திகளின் சூழ்ச்சி!
அன்று, கல்வி அதிகாரம்
அவாளிடம் இருந்தது!
ஒன்றும் செய்ய முடியலை!:(
உலகெங்கும்.. French, Spanish, German
”சார்பு” எழுத்து எண்ணுவதே இல்லை!
Àà, Ââ, Ææ, Çç, Ôô, Œœ..
எண்ண மாட்டார்கள்!
சம்ஸ்கிருத பாஷையிலும் அப்படியே!
का, कि, की.. எண்ணுவதில்லை!
ஆனால் தமிழில் மட்டும்..
ஐயன் தொல்காப்பியரை மீறி
வேண்டுமென்றே 247 என்று
கடினம் பரப்பி வைத்தார்கள்!:(
அறிக: தமிழ் எழுத்து= 12+18 = 30 மட்டுமே!
தொல்காப்பியமே, அதான் சொல்கிறது!
ஆய்த எழுத்து
ஃ தனி வடிவம் இருந்தாலும்
குற்றியலுகரம்
தனி வடிவம் இல்லாவிட்டாலும்
அவையெல்லாம் ஓசை நுணுக்கங்களே!
உயிர்மெய்= 12*18= 216 ’சார்’பெழுத்துக்களே!
எண்ணிக்கையில் ஏறாது!
உலகெங்கும்... இதுவே நடைமுறை!
இனிய & எளிய தமிழ்மொழி!
ஆதி இலக்கணத் தொல்காப்பியர் முதல்
இன்று மாண்புமிகு @mkstalin வரை!
மொழி புதிதாகக் கற்கும்
*குழந்தைகளுக்கும்
*அயலக மக்களுக்கும்
247 எழுத்துக்கள் என்று
எடுத்த எடுப்பிலேயே சொல்லி
அச்சம் ஊட்டாதீர்கள்!
*ஆங்கிலம்= 26
*தமிழ்= 30
என்றே சொல்லி, எளிமை பழகுங்கள்!
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.