ஹோட்டல் டுபாக்கூர் Profile picture
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥

Jul 3, 2022, 6 tweets

யார் இந்த வீரபாண்டி ஆறுமுகம்?

திமுக வரலாற்றை பொன்னெழுத்துக்களால் பொரித்துக்கொண்டு இருக்கும் போது ஒரு பெயரை பொரிக்கும் போது அதிக தங்கக்கூழ் செலவாகும்.ஆம், அந்த பெயர்தான் #வீரபாண்டி_ஆறுமுகம்... கலைஞரின் வீரபாகு, திராவிடத்தின் வித்து, பஞ்சாயத்தில் தருமன் என அடுக்கிக் கொண்டே போகலாம்

இந்த மன்னவனின் வரலாற்றை.. MGR இந்திராகாந்தி காலில் விழுந்து கொண்டிருந்த காலம். எமர்ஜென்சியின் போது தனது மகளின் திருமணத்தை முடித்த வீரபாண்டியார், மகளை மருவீட்டிற்கு அனுப்பவிருந்த வீரபாண்டியாரை காவல்துறை தரதரவென இழுத்துச் சென்றது.. ஆம், மிசாவில் கைது செய்யப்பட்ட வீரபாண்டியாரை

கலைஞர் மீது குற்றச்சாட்டை சுமத்த வேண்டும் எனச் சொல்லி நகத்தில் ஊசியை குத்தி சித்திரைவதை செய்தது காவல்துறை, தன் தாயின் தலையில் கள்ளச்சாரயத்தை வைத்து 5 கிலோமீட்டர் வரை நடக்கச் செய்து அவமானப்படுத்தியது காவல்துறை..புதியதாக திருமணமான தனது மகளையும் மருமகனையும் கைதுசெய்து கொடுமை செய்தது

காவல்துறை... எல்லா துயரங்களையும் அனுபவித்த வுரபாண்டியார் கடைசி வரை கலைஞரின் மீது எள்ளளவு குற்றச்சாட்டை வைத்ததுமில்லை... சேலம் மாம்பழத்திற்கு மட்டும் பெயர்பெற்றது அல்ல, அங்கே பெரியார் பல்கலைக்கழகம் கொண்டு வந்த அமெரிக்க வெள்ளை மாளிகை போல் மாற்றினார் வீரபாண்டியார், அவர் திமுகவின்

விவசாயத்துறை மந்திரியாக மூன்று முறை இருந்துள்ளார்.. பாமக ராமதாசின் சிம்மசொப்பனமாக வீரபாண்டியார் திகழ்ந்தார்.. ஜெயாவின் அடக்குமுறையால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே தனது உயிரை விட்டார்.ஒரு தொண்டன் மறைவிற்கு ஒரு கட்சி தலைவன் குலுங்கி அழுத வரலாறு திமுக தலைவர் கலைஞரைத் தவிர எந்த

கட்சியாலும் அதை செய்திட முடியாது!! வீரபாண்டியார் மரணம் சேலத்தையே சோகக்கணலாக்கியது... தனது வாழ்வை இந்த இயக்கத்திற்காகவே செலவழித்த அய்யா வீரபாண்டியார் புகழ் போற்றுவோம்!!

#வீரபாண்டியார் 🙏🙏🙏 💐💐💐💐

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling