சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான்
சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥
Feb 17 • 8 tweets • 3 min read
கண்ணாரமுத கடலே போற்றி..!
1996 நவம்பர் 6 தமிழகமெங்கும் ஒரு கொலை குற்ற வழக்கு அனலடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஆம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாமாண்டு மருத்துவம் படிக்கும் மாணவன் பொன். நாவரசு தனது சீனியர் மாணவன் டேவிட்டால் துண்டு துண்டாக கொலை செய்யப்பட்டு கொள்ளிடம்
ஆற்றில் வீசப்பட்டான். ஆதிக்க வெறி சாதியர்களின் புத்திரன்கள் பல்கலைகழகம் முதல் பாடசாலை வரை தங்களின் ஆதிக்கத்தை கோலோட்சிய காலம் என்றே சொல்லலாம். சரியாக எம் தலைவர் கலைஞர் முதல்வராக பதவியேற்று ஆறு மாத காலம். அதாவது ஜெயலலிதா பஞ்சாயத்துகளில் தொலைக்காட்சி வாங்குவதில் ஊழல் செய்ததாக
1972ல் கலைஞர் தலைமையிலான திமுக அரசு தனக்கு எந்த பதவியும் கொடுக்கவில்லை என்ற விரக்தியில் அடுக்கடுக்காய் அபாண்டங்களை அடுக்கினார் அன்றைய திமுக பொருளாளர் எம்.ஜி.ஆர்.. சரியாக 4-11-1972ல் தலைவர் கலைஞர் மீது ஒரு அபாண்ட குற்றச்சாட்டை அன்றைய பிரதமர் இந்திராவுக்கு
அனுப்பினார் எம்.ஜி.ஆர்.. அவரைத் தொடர்ந்து 6-11-1972ல் இந்திய கம்யூன்ஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் திரு எம். கல்யாணசுந்திரம், அக்கட்சியின் MLA திரு KTK தங்கமணி அவர்களோடு 5 கம்யூனிஸ்ட் தலைவர்களும் தலைவர் கலைஞர் மீது அபாண்டங்களை வரிசைப்படுத்தி குடியரசு அலுவலகத்திற்கு அனுப்பினார்கள்...
தலைவர் கலைஞர் அவர்களின் வைரவேல் யாத்திரை என்பது திருச்செந்தூர் முருகப்பெருமான் சன்னிதியில் உள்ள உண்டியலை 1980ல் கோவில் நிர்வாக அதிகாரி திரு. சுப்பிரமணியப்பிள்ளை வருவதற்கு முன்பே கோவில் அறங்காவல் குழு உறுப்பினரும், 1980-ல் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான
திரு. சி. கேசவஆதித்தன் திறந்து அதில் உள்ள காணிக்கையை எண்ணிக் கொண்டிருந்தார். தட்டிக்கேட்ட கோவில் நிர்வாக அதிகாரி திரு. சுப்பிரமணியன் சரியாக நவம்பர் 26 1980ல் மர்மமான முறையில் கோவில் பிரகாரத்தில் இறந்து கிடந்தார். அத்தோடு மட்டுமில்லாமல் முருகப்பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தப்ப-
Feb 5, 2023 • 10 tweets • 4 min read
கருணாநிதி நினைவாக பேனாவுக்கு பதில் ஏர்கூலரை வைத்தால் பொருத்தமாக இருக்கும் -டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி!
என்ன Mr. @DrShyamKK முழுக்க முழுக்க சாதியை மட்டுமே வைத்து பிழப்பு நடத்தும் நீங்களெல்லாம் சமூகநீதிக்கு சாரம்சத்தை வழங்கிய சரித்திர தலைவனாம் கலைஞரை வசைபடுவது மலையை பார்த்து நாய்
குரைப்பது போலல்லவோ! என் தலைவர் கலைஞர் சமூகநீதி என்னும் உருவத்தை எழுப்பும் போதெல்லாம் சாதி என்னும் பேர்வழியில் ஒரு சாட்டையடி விழத்தான் செய்கிறது. 23-7-1999ல் மாஞ்சோலையிலும் அப்படித்தான்.சில அரசியல் ஆதயவாதிகளின் செயலால் தன்மீது கறைபடியாத ஒரு குற்றத்தை தன்வாழ்நாள் முழுவதும் சுமந்த
Oct 28, 2022 • 7 tweets • 3 min read
ஆறடி நிலம் கூட நீ தந்ததாக இருக்கக் கூடாது. நான் போராடி பெற்றதாக இருக்க வேண்டும்.. ஆம், உலகில் எந்த தலைவனுக்கும் நடந்திடாத கொடுமை ஒரு தலைவனுக்கு மட்டுமே நடந்தது என்றால் அது தலைவர் கலைஞருக்கு மட்டுமே...
இந்திரா காந்தி நாடு முழுவதும் #எமர்ஜென்சியை பிரகடனப்படுத்திய காலகட்டம் அது
தலைவர் கலைஞர் மீது குற்றம் சுமத்தி எப்படியாவது ஆட்சியை கலைக்க MGR காலில் கங்கணம் கட்டி அலைந்து கொண்டிருந்த காலமும் கூட.. அப்போது, இந்திராகாந்தி முன்பொரு நாளில் எம்.ஜி.ஆரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் கொடுத்த பொய் வழக்கை சரியாக அந்த சமயத்தில் வழக்கு விசாரணையை தூசி தட்டி
Oct 20, 2022 • 18 tweets • 7 min read
கலைஞர் ஏன் தான் போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியே கண்டதில்லை?
காமராஜர், அண்ணா கூட தோற்றுப் போனது வரலாறு.
இவரிடம் என்ன சிறப்பு?
Determination & Perseverance எதையும் செய்ய முடியும் என்ற உறுதியும் வெற்றிக்கு அவர் மேற்கொள்ளும் விடாமுயற்சியும் கூடுதல் பலம்.
1957 ஆம் ஆண்டு தனது
முதல் தேர்தலில் குளித்தலை எம்எல்ஏவாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்.
சிறந்த முறையில் பணியாற்றி கொண்டிருந்த காலகட்டம்...
1959 தஞ்சையில் காங்கிரஸ் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது...
காமராஜர் தலைமையில் தஞ்சை காங்கிரஸ் தளகர்த்தா பெரும் செல்வந்தரான
Oct 18, 2022 • 7 tweets • 3 min read
ஆறுமுகசாமி ஆணையம் என்னை தவறாக சித்தரித்துள்ளது...
- விஜயபாஸ்கர் பரபரப்பு
என்ன Mr.விஜயபாஸ்கர் கதறல் அதிகமாக இருக்கு..
2013 மார்ச் 19 இந்த தேதியை நினைவிருக்கிறதா?
உலகத் தமிழினத் தலைவர் கலைஞரை "தள்ளுவண்டி தாத்தா" என நீங்கள் விமர்சித்ததை திமுக தொண்டன் மறந்திடுவானா?
அவ்வாறு நீங்கள் விமர்சித்த போது உங்கள் நாரசத்தை அடக்காமல் ஒட்டுமொத்த அடிமைக் கூட்டமும், அந்த கூட்டத்தின் தலைவி ஜெயலலிதாவும் குலுங்க குலுங்க சிரித்து சட்டசபையின் மேசையைத் தட்டி ஆரவாரம் கொடுத்ததை எங்களால் எளிதாக கடந்து செல்ல முடியாது.. அவர் வயதிற்காவது நீ மரியாதை கொடுத்திருக்கலாம்
Sep 30, 2022 • 7 tweets • 4 min read
திமுக ஆட்சி எப்போதெல்லாம் இருக்கிறதோ பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை, சட்ட ஒழுங்கும் சந்தி சிரிக்கின்றது!
- எடப்பாடி பழனிசாமி
Mr.பழனிசாமி #சிதம்பரம்_பத்மினி யை நினைவிருக்கின்றதா? 1992 ஜெயாவின் காண்டுமிராண்டி ஆட்சியின் போது தன் கணவன் கண்ணெதிரே கற்பழிக்கப்பட்ட ஒரு
அப்பாவி பெண்.. அந்த வழக்கில் நீதிமன்றம் வரைச் சென்று நீதியை நிலைநாட்டியவர்கள் திமுகவினர் தான்.. அத்தோடு மட்டும் நின்றிடாமல் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது 1992களில் #வச்சாத்தி கிராமத்தில் புகுந்து பெண்களை மானபங்கம் படுத்தி, பாலியல் வன்புணர்வுகளை நிகழ்த்தியதும் அந்த ஆட்சியில் தானே!
Sep 23, 2022 • 7 tweets • 4 min read
மாநில சுயாட்சியை பற்றி பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது?
-பாஜக தலைவர் ஜே.பி.நட்டா!!
Mr.@JPNadda அவர்களே! இந்த படத்தில் உள்ளவரை யார் என்று தெரியுமா? தெரியவில்லை யெனில் அறிமுகப்படுத்துகிறேன்! இவர் பெயர் #பி_வி_ராஜமன்னார் சுதந்திர இந்தியாவின் முதல் நீதிபதி..ஆம், இன்றும்
மாநில சுயாட்சிக்கு பங்கம் நேரும் போதெல்லாம், ஒன்றிய அரசின் ஆணவத்தை அடக்க பயன்படுத்தக்கூடிய வார்த்தை #ராஜமன்னார்_குழு.. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் எந்த மாநில அரசும் சாதிக்காததை சாதித்துக் காட்டியவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள். 1969 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜமன்னார்
Sep 19, 2022 • 17 tweets • 6 min read
‘பொதுவாழ்வுக்கு வந்துவிட்டால் அவமானங்களுக்கு அஞ்சாதே’.. பெரியார்
2010 நவம்பர் சமர்ப்பித்த அறிக்கையில் 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டால் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தது.இது பெரும் பூதாகரமாக்கப்பட்டது.
நாடாளுமன்றம் கொந்தளித்தது.
ஆ.ராசா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக வற்புறுத்தினர். அப்போதைய ஆளுங்கட்சியான காங்கிரசில் இருந்தும் திமுக மீது கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
தனது தலைவர் கலைஞரிடம் பேசினார் ஆ.ராசா.
//‘உன்னை நம்புகிறேன். நீ ராஜினாமா செய்து விட்டு வா
Sep 17, 2022 • 7 tweets • 3 min read
சமூகநீதிக் காவலன் ஆவடி.சா.மு.நாசரின் கதை!!
வாரிசு அரசியல் பிரச்சனை திமுகவின் மீது உள்ள பிரதான குற்றச்சாட்டு. தன் மகனை மேயராக்க சொந்த கட்சிகாரர்களே நெருக்கடி கொடுத்த போதும் அதற்கு சற்றும் செவிசாய்க்காத அமைச்சர் நாசர். தலைமையிடம் நேரடியாகவே பேசி ஆவடியை ஆதிதிராவிடர்களுக்கு
ஒதுக்க சொல்லியிருக்கிறார்! பின்னர், ஆவடி மாநகராட்சி எஸ்.சி(பொது) விற்கு ஒதுக்கப்பட்டது! 48 வார்டூகளை கொண்ட ஆவடி மாநகராட்சியில் 9வார்டில் வெற்றி பெற்ற தினக்கூலித் தொழிலாளி ஜி.உதயக்குமார் என்பவரை மேயராக தேர்வு செய்தார் சா.மு.நாசர் அவர்கள்... அந்த மேயர் பதவிக்கு சுமார் 20 கோடிவரை
Sep 16, 2022 • 8 tweets • 3 min read
எனக்கு புத்தகத்தை கொடுத்த புண்ணியவான் தந்தை பெரியார்!!
சுமார் 2000ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் மாட்டுத் தோலில் மேளம் கட்டி வாசிப்பது!
சுமார் 1500ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் பிணத்தை எரிப்பது!
சுமார் 1000ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில்
மலம் அல்லுவதும், சாக்கடை சுத்தம் செய்வதும் தான்!
சுமார் 500 ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் செருப்பை தைப்பது!
சுமார் 300 ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில் ஆண்டான் அடிமை/கொத்தடிமை வேலை செய்து தான்!
சுமார் 150 ஆண்டுகளாக என் குடும்பத்தின் பிரதான தொழில்
Sep 12, 2022 • 7 tweets • 3 min read
என்ன செய்தது அந்த பேனா? ஏன் அதற்கு 80 கோடியில் சிலை?
- சீமான் கேள்வி!!
Mr.சீமான் இந்த பெண்ணை நினைவிருக்கிறாதா? ஞாபகமில்லையெனில் நினைவு படுத்துகிறேன்! இந்த பெண்ணின் பெயர் #சாரிகா_ஷா சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் படித்துவந்தவர்! 1998-ஜீலை மாதம் இந்த பெண்னை
சில சமூக விரோதிகள் வழிமறித்து அவரின் மீதும் சக தோழியான கவிதா என்ற பெண்மீதும் வாட்டர் பாக்கெட்டை பீய்த்து அடித்து ரகளையில் ஈடுபட்டனர்.அதில் மதுபோதையில் இருந்த ஒருவன் தனது சமநிலையை இழந்து சாரிகாவை கட்டியணைக்க முற்படும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் அந்த பெண்
Sep 10, 2022 • 7 tweets • 3 min read
சீமான் என்னும் "சாக்கடைக்கு"
மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் பெண் பிள்ளையை பிச்சையெடுக்க வைக்கும் என்று அபத்தமாக கூறுகிறார்! எப்பேற்பட்ட திட்டத்தையும் பாஜகவோடு சேர்ந்து சிறுமைபடுத்துவது சீமானுக்கு புதிதன்று..
திராவிடம் கிழித்ததை ஒரு வரலாற்றின் மூலம் அவருக்கு
தெரியப்படுத்துகிறேன்! 1800 காலகட்டத்தில் தற்போது நீங்கள் பாஜகவின் பேச்சை கேட்பது போல் அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானமும் நம்பூதிரிகளின் பேச்சை கேட்டு பெண்களுக்கு முலைவரி போட்டது.பார்ப்பனர்களின் முன்னாள் அவர்கள் சொன்ன குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் யாரும் மேலாடை"Upper Cloth "
லண்டன் பக்கிங்காம் அரண்மனை முதலாம் மாடியில் ராணியின் படுக்கையறையில், இருதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் கணிக்கும் கருவிகள் பொருத்தப் பட்ட நிலையில் கட்டிலில் படுத்திருக்கிறார்...
அவரைச்சுற்றி
இங்கிலாந்தின் சிறந்த வைத்தியர்கள் குழு ஒன்று அவரின் உடலின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தபடி இருக்கின்றார்கள்...
இளவரசர் சார்லஸ் சோகமாக மனைவி கமீலாவின் கைகளை பற்றியபடி நின்றிருக்க, அப்போது உள்ளே வந்த அவரின் மகன் வில்லியம்...
"அப்பா...தம்பி ஹென்றிக்கு தகவல் சொல்லியாச்சா.."
Sep 7, 2022 • 7 tweets • 3 min read
சாதிக்கு சமாதி கட்டிய ஒரு பேனாவின் சிலையை எப்போது அமைக்கிப்போகிறாய் தமிழ்நாடு அரசே?
தமிழ்நாட்டில் பிராமிண சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கியது அன்றைய எம்.ஜீ.ஆர் அரசு! அது தொடங்கி ஊர் தோறும் சாதி சங்கங்கள் உருவாகியது. MGR முதல்வராக இருந்த போது போக்குவரத்துக்கழங்களுக்கும்
மாவடங்களுக்கும் சில தலைவர்களின் பேர்களை சூட்டி மகிழ்ந்தார்.. அவ்வாறான காலகட்டத்தில் தான் தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்திற்கு அண்ணா மாவட்டம் என்ற பெயரையும் சூட்டினார் MGR.. தலைவர் கலைஞர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் காஞ்சி சங்கரமடத்தின் பேச்சைக் கேட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு
Sep 6, 2022 • 8 tweets • 3 min read
எந்த ஒரு கொம்பனும் என்னை விட தமிழ்பற்று கொண்டவன் இல்லை - சீமான்!!
Mr.சீமான் இந்த படம் நினைவில் இருக்கிறாதா? உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் நினைவுப்படம்... பேரலை நெருங்கும் போதும் வள்ளுவன் மூன்று விரல்களை காட்டி கம்பீரமாக நிற்கின்றான்! கீழே! "பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்"
என்று எழுதப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பல கொம்பன்களின் மூத்த கொம்பன் என் தலைவன் கலைஞர் என்பதை மறந்திட வேண்டாம்! திருக்குறளை உன்னைப் போன்ற பொய்களை வாரி தூற்றும் கழிசடைகளுக்காகவே அவர் எல்லாப் பேருந்துகளிலும் "யாகாவாராயினும் நாகாக்க " எனும் உலகின் தாரக மந்திரத்தை பிரசுரிப்பு செய்ய
Sep 4, 2022 • 6 tweets • 3 min read
எவ்வளவு தூரம் சென்றாய் தலைவா?
இன்று ஏதோ ஆசிரியர் தினமாம், என் ஆசிரியரை இழந்து இன்றோடு நான்கு வருடங்கள் ஆகிறது..என் ஆசிரியர் எப்பேர்பட்டவர் தெரியுமா? என் வாழ்க்கையை நான் சீர்படுத்தும் முன்னால் செதுக்கியவர் தோழர்களே!! அங்கன் வாடி போனேன் என் மெல்லியப்பாதமும், அடிமாடாய் உழைக்கும்
என் தாயின் இடுப்பும் நோகுமென்று உள்ளூரிலேயே அமைத்துக் கொடுத்தவர் என் ஆசிரியர்.. நான் தொடக்கப்பள்ளி போன போது எனக்கு காலணிகளை இலவசமாக கொடுத்தவர் என் ஆசிரியர். நான் நடுநிலைப்பள்ளியில் அடியெடுத்து வைக்கும் போது எனக்கு இலவச பஸ்பாஸை வழங்கியவர் என் ஆசிரியர்.. நான் உயர்கல்வியை நெருங்கும்
Sep 3, 2022 • 7 tweets • 3 min read
யார் இந்த சிட்டிபாபு??
திருட்டு குற்றத்தை ஒத்துக்ககொள்ள சொல்லி "ஜெய்பீம்" படத்தில் ராஜாகண்ணுவை காட்டுமிராண்டி தனமாக தாக்கும் காவல் துறையை பார்த்திருப்போம்! ஆனால், நிஜத்தில் திமுகவை விட்டு விலகச் சொல்லி கொடுமைபடுத்தியும் மரணத்தின் நொடிவரை திமுகவின் கொள்கையை நெஞ்சிலேந்திய
ஒரு ராஜாகண்ணுவை பார்த்திருக்க மாட்டோம்! ஆம், அந்த ராஜாகண்ணு வேருயாருமில்லை "சிட்டி பாபு".. திமுகவின் தூண்களில் இவரின் ரத்தம் குழைத்து கட்டப்பட்டிருக்கும். கொண்ட கொள்கையில் உறுதியானவர்.. 1975-ல் மிசாவில் கைது செய்யப்பட்டார். இன்றைய திமுக தலைவர் தளபதி, சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி
Sep 2, 2022 • 7 tweets • 3 min read
தமிழன்னை குடிகொண்ட குடிலின் கதை!!
இந்திய அரசியல் அதிகாலை முதலே பரபரப்புடன் காணப்படும்! எப்போதும் ஊடகங்களின் மையப்பகுதி தென் திசையை நோக்கியே இருக்கும்.. ஆம், அது தமிழ்த்தாய் தவமிருந்து பெற்ற தலைவர் கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் தான் அந்த குடில்.. கோபாலபுரத்தின் நான்காவது தெருவை
தவிர்த்து தமிழக வரலாற்றை எழுத எந்த கொம்பனாலும் முடியாத ஒன்று.. பல ஆணவக்காரர்களை அடக்கியது அந்த நான்காது தெரு. தமிழர்களின் வாழ்வியலோடு கலந்தது கோபாலபுரத்து வீடு..1955- புதயல் என்னும் திரைப்படத்தில் வசனம் எழுதிய தலைவர் கலைஞருக்கு 45,000 கிடைத்த வருமானத்தில் சரபேஷ்வரா ஐயரிடம்
Sep 1, 2022 • 7 tweets • 3 min read
யார் இந்த ஜெ.அன்பழகன்??
திமுக வரலாற்றை சுவடுகளாக வெளியிடும் போது அதில் அரை பத்திச் சுவடுகள் மட்டும் ஒருவனின் புகழைப் பாடிக் கொண்டே இருக்கும். ஆம், அந்த பெயர் தான் ஜெ.அன்பழகன்.. அச்சத்தை அகராதியில் வைக்காத ஒரு திமுககாரன், திமுகவின் சுவாசக்காற்றை இறுதி வரை சுவாசித்த மாவீரன்,
தலைவர் கலைஞரின் முரட்டு பக்தன், திமுக தொண்டர்களின் கடைசி நம்பிக்கை, தி நகர் தொகுதி மக்களின் நிரந்தர MLA, பழக்கடை அய்யா ஜெயராமனாரின் தவப்புதல்வன், பயத்திடமே பயத்தை காட்டும் பயமறியாச் சுடரொலி என்றெல்லாம் புகப்படக்கூடியவர் தான் அண்ணன் ஜெ.அன்பழகன் அவர்கள். ஜீன் மாதம் பிறந்தால் போதும்