ஹோட்டல் டுபாக்கூர் Profile picture
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥

Jul 13, 2022, 6 tweets

யாரு இந்த மா.சுப்பிரமணியன்??

சைதாப்பேட்டை சென்று ஒரு குழந்தையை அழைத்து சுப்பிரமணியன் யார் என்றால் திருதிருவென விழிக்கும்.ஆனால், மாசு யாரென்றால் மாசாக சொல்லும் இந்த மாநகரத் தந்தையை!! கல்லங்கபடம் இல்லை வெள்ளைமனக்காரன் தான் இந்த மா.சுப்பிரமணியன்.. சைதை திமுகவின் சரித்திரம் தான்

மாசு அவர்கள்.. திமுகவின் ஆரம்ப கால விசுவாசி, கலைஞரின் சென்னை மாநகரத் தளபதியில் ஒருவர், தளதியின் வாக்கிங் பார்ட்னர், சிங்காரச் சென்னை 2.0 வின் என்ற சொல்லுக்குச் சொந்த காரர்.. ஒரு விபத்தில் தனது கால் 5 துண்டாக உடைந்தது, இனி நடக்க கூட முடியாது என மருத்துவர்களின் கூற்றை பொய்யாக்கி

5 ஆண்டுகளில் 100 மாரத்தான் ஓடிய கால்களுக்குச் சொந்தகாரர்.
முற்றிலும் கடவுள் நம்பிக்கை இழந்தவர் தான் அய்யா மாசு அவர்கள்.. மாசுவின் வரலாற்றுப் பயணங்களை எழுதும் போது சைதையின் ஏழைத் தொண்டனும் அந்த வரலாற்றில் பற்றிக்கொண்டு உடன் வருவான் என்பதே நிதர்சன உண்மை.. ஒவ்வொரு குடும்பமும் இவரின்

பெயர்ச் சொல்லும் அளவிற்கு உழைத்துள்ளார் என்பதே மாசுவின் உழைப்பிற்கு சாட்சி!! கலைஞர் தனது தேர்தல் பிரச்சாரத்தை சைதை பகுதியிலிருந்தே தொடங்குவார் என்பதே நிதர்சன உண்மை.. மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சாரன பின்பு தான் செல்லும் வழியில் அரசு மருத்துவமனை முதல் ஆரம்ப சுகாதர நிலையம் வரை

சோதனை செய்து அதிரடி காட்டுவார்...ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அவர் வாழ்க்கையை உளுக்கியது ஆம், அவரின் இளைய மகன் அன்பழகன் கொரோனா தொற்றால் காலமானார்.அப்போதும் கூட #நீட் தேர்வுக்கு எதிரான ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற பின் கண்ணீரோடு தன் மகனை பற்றிக்கொண்டு உள்ளக்கதறினார்.

வாழ்க்கையின் முடிவில் கூட தன் கட்சி,மக்கள்,தொண்டன் அதன்பிறகு குடும்பத்தை மதிக்கும் கடமை உணர்வாளனை நாம் தூக்கிக் கொண்டாடவில்லையெனில் வேறு யார் கொண்டாடுவார்...

வாழ்க உம் கொள்கை! சிறக்கட்டும் உங்கள் பணி!! 💐💐💐
@Subramanian_ma 🖤❤️

💥💥💥💥

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling