நினைத்ததை நிறைவேற்றும் #துளசி_பூஜை :
அலங்கார பிரியரான திருமாலுக்கு உகந்தது துளசி.
திருமாலின் திருமார்பில், மாலையாக மகிழ்வோடு காட்சி தருபவள் துளசி தேவி.
துளசி என்ற சொல்லுக்கு தன்னிகரற்றது என்று பொருளாகும்.
துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால், பல ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த ஆனந்தமடைவேன் என்று மகாவிஷ்ணுவே கூறியுள்ளார்.
*துளசி பூஜை :*
கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசித்தாய் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன.
அன்று துளசித்தாய்க்கு விரதமிருந்து பூஜை செய்வது மிகுந்த பலனை தரும்.
துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.
துளசி இலை பட்ட தண்ணீர், கங்கை நீருக்கு சமமானதாக கருதப்படுகிறது.
துளசி பூஜை செய்வதால் எட்டு வகை செல்வங்களும் கிட்டும்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும்.
துளசி திருமாலுக்கும், திருமகளுக்கும் மிகவும் பிடித்தமானது.
துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு நிறைந்து இருப்பார் என்பது ஐதீகம்.
கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டார்.
அந்த நாளை பிருந்தாவன துளசி அல்லது #துளசிக்கல்யாணம் எனக் கொண்டாடுவார்கள்.
அன்று காலை சுமங்கலிப் பெண்கள் குளித்துவிட்டு, விரதமிருந்து துளசி மாடத்தை சுற்றி மெழுகி, கோலமிட்டு காவி பூச வேண்டும். சாதம், பால் பாயாசம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழங்கள், தேங்காய் வைத்து பூஜை செய்ய வேண்டும்.
இரு விளக்கு திரியை நெய்யில் வைத்து, தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.