M.SivaRajan Profile picture
| ஓம் நமசிவாய 🕉 | | என்றும் பொன்னம்பலத்தாரின் திருவடி நிழலில் அடியேன் 🙏 | | Temple Priest 🕉 ஜோதிடர் 🙏 | #சிவவழிபாடு #ஜோதிடம்அறிவோம்
அழகரசன் Profile picture Selva Profile picture 2 subscribed
Feb 21 55 tweets 6 min read
#கோடி_அர்ச்சனை

மிக முக்கியமான பதிவு.

மிக நீண்ட பதிவு.

பொறுமையாக படித்து அருள் பெற வேண்டுகிறேன்.

*1,00,000,00 (ஒரு கோடி)* அர்ச்சனையின் நிறைவான,
*1,00,000 (ஒரு லட்சம்) ஹோமம்,*
*1008 + 1008 = 2016 கலசங்கள்,*
*108 தீட்சிதர்கள்,*
*9 யாக குண்டங்கள்,* Image *2 (ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ சிவகாமி) பொற்குடங்கள்* அமையவுள்ள
*ஒரு யாகசாலை* பொன்மயமாக மின்னுகிறது.

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலயத்தின் கிழக்கு கோபுரத்திற்கும், ஆயிரங்கால் மண்டபத்திற்கும் அருகில் அழகுமிகு யாகசாலை அமைந்துள்ளது.
Feb 13 5 tweets 1 min read
#பீஜ_மந்திரங்கள்

12 இராசிகளுக்கான மகா சக்தி பெற்ற பீஜ மந்திரங்கள் :

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு பீஜ மந்திரங்கள் உண்டு.

அவற்றை முறையாக ஜெபம் செய்தால் வாழ்வில் பல நற்பலன்களை பெறலாம். Image இந்த பதிவில் 12 ராசிகளுக்கும் உரிய பீஜ மந்திரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

பீஜ மந்திரங்களை தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து விட்டு,

வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கேற்றி,

இறைவன் முன்பு தங்களால் இயன்ற அளவு ஏதேனும் ஒரு நிவேதனம் வைத்து,
Jan 28 14 tweets 2 min read
#பைரவர்_மந்திரம்

பன்னிரண்டு இராசி அன்பர்களே!

இன்று முதல் தினமும் பைரவ மந்திரம் எழுதுங்கள்.

10 - 02 - 2024 முதல் 10 - 06 - 2024 வரை ஒவ்வொருவருக்கும் சில பல துயரங்கள், இழப்புகள், நஷ்டங்கள் வரும் சூழ்நிலை உருவாக உள்ளது. Image அசைவம் சாப்பிடாமல்,

மது அருந்தாமல்,

கர்ம வினைகளை வேகமாக நீக்கும் பைரவ மந்திரம் எழுதி வருவது நல்லது.

கடன் தீர்ந்து விட்டால்,நோய் குணமடைந்து விட்டால்,

போதிய அளவில் வருமானம் கிடைத்து விட்டால் நிம்மதி வந்து விடும்.
Jan 12 7 tweets 1 min read
#திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி - பாடல் - 07.

அது பழச்சுவையென அமுதென
அறிதற்கு அரிதென எளிதென அமரரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும் Image மதுவளர்பொழில் திருவுத்தரகோசமங்கை உள்ளாய்
திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப்பணி கொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!
Jan 12 8 tweets 1 min read
#திருப்பாவை

திருப்பாவை - பாடல் - 27.

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே Image பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
Jan 11 7 tweets 1 min read
#திருப்பாவை

திருப்பாவை - பாடல் - 26.

மாலே மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே Image போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்.
Jan 11 8 tweets 1 min read
#குபேர_அமாவாசை

இன்று குபேர அமாவாசை :

இன்று மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் விசேஷமான நாளாகும்.

இந்த நாளை தவற விடாமல் சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்தால் குபேர யோகம் அமையும். Image மார்கழி அமாவாசை என்பது அனுமான் அவதரித்த நாளாகும்.

அனுமான், வெற்றிக்கு உரிய தெய்வமாகும்.

அதனால் அவர் அவதரித்த நாள் மிக முக்கியமான நாளாகும்.

மார்கழி அமாவாசை தினமான இன்று வழக்கம் போல் வீட்டை சுத்தம் செய்து,

பித்ரு தர்ப்பணம் கொடுத்த பிறகு வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள்.
Jan 3 17 tweets 2 min read
#ஸ்ரீ_ராமலிங்க_ஸ்வாமி

*ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அருகன்குளம் பழைய ராமேசுவரம்*

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அருகன்குளம்.

இங்குள்ள பழைய கிராமத்தில் ‘பழைய ராமேசுவரம்’ என்று போற்றப்படும் ராமலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. Image இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று தல வரலாறு சொல்கிறது.

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஊரில், அருகம்புல் அதிகம் கொண்ட குளம் இருக்கிறது.

இதனால் இந்தப் பகுதி ‘அருகன் குளம்’ என்று அழைக்கப்படுகிறது.
Dec 31, 2023 20 tweets 3 min read
#அரையர்_சேவை

வைணவக் கோயில்களில் நடைபெறும் ஒரு வகை நடனம் அரையர் சேவை.

இது எல்லா வைணவக் கோயில்களிலும் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், தற்போது ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார்திருநகரி ஆகிய ஊர்களில் மட்டும் நடைபெறுகிறது.

இருப்பினும், இது இன்று மருகி வருகிறது. Image நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களை இசையோடு பாடி, அபிநயம் பிடித்து விளக்கம் சொல்லும் ஆட்டம் இது.

இதனை இயல், இசை, நாடகம் ஆகியன கலந்த ஆட்டம் என்று கூறுவர்.

நாலாயிர திவ்யப் பிரபந்த ஏடுகளை மிகுந்த சிரமத்தின் பேரில் கண்டெடுத்தவர் நாதமுனிகள் என்ற வைணவப் பெரியார்.
Dec 31, 2023 6 tweets 1 min read
#திருவெம்பாவை

திருவெம்பாவை - பாடல் - 15.

ஓரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள் Image பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
Dec 31, 2023 9 tweets 1 min read
#திருப்பாவை

திருப்பாவை - பாடல் - 15.

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் Image உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.
Dec 25, 2023 7 tweets 1 min read
#திருப்பாவை

திருப்பாவை - பாடல் - 9.

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ? Image ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.
Dec 24, 2023 7 tweets 1 min read
#திருப்பாவை

திருப்பாவை - பாடல் - 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய Image பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
Dec 23, 2023 12 tweets 2 min read
#அமலனாதிபிரான்

வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பு :

பூலோக வைகுண்டம் திருவரங்கம்.

திருவரங்க நாதர் மீது
திருப்பாணாழ்வார் அருளிச் செய்த பாசுரம் :

அனைத்து வேதங்களின் சாரமும் இந்த பாசுரத்தில் உள்ளது.

பெருமாள் அடியார்கள் தினமும் சேவிக்க வேண்டிய பாசுரம். Image #அமலனாதிபிரான்_பாசுரம்

அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமலபாதம் வந்து என் கண்ணினுள வொக்கின்றதே.
Dec 23, 2023 7 tweets 1 min read
#திருப்பாவை

திருப்பாவை - பாடல் - 7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் Image ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.
Dec 23, 2023 16 tweets 2 min read
#வைகுண்ட_ஏகாதசி

`வைகுண்ட பதவி’ தரும் ஏகாதசி தோன்றிய கதை!

'மாதங்களில் நான் மார்கழி' என்பது கீதாசார்யனின் அமுதமொழி.

வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி. Image ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில் தான்.

#ஏகாதசி_புராணம் :

கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான்.

தேவர்கள் உட்பட அனைவரையும் துன்புறுத்தினான்.

தேவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார்.
Dec 22, 2023 8 tweets 1 min read
#திருப்பாவை

திருப்பாவை - பாடல் - 6.

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி Image வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
Dec 21, 2023 7 tweets 1 min read
#திருவெம்பாவை

திருவெம்பாவை - பாடல் - 5.

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான் Image கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்.
Dec 13, 2023 16 tweets 2 min read
#மூர்க்க_நாயனார்_குருபூஜை

பண்டைய தொண்டை நாட்டில் பாலாற்றின் வடக்குக் கரையில் அமைந்திருந்தது திருவேற்காடு என்னும் தலம்.

அங்கிருந்த வேளாளர்களில் ஒருவர் சிறந்த சிவனடியாராகத் திகழ்ந்தார். Image திருநீற்றை தன்னுடைய பெருஞ்செல்வமாகக் கருதிய அவர் சிவபிரானிடத்தும் அவர்தம் அடியார்களிடத்தும் பேரன்பு கொண்டிருந்தார்.

நாள்தோறும் சிவனடியார்களுக்கு அறுசுவையுடன் திருவமுது படைத்து பின்னர் தான் உண்ணும் வழக்கத்தை மேற்கொண்டு வந்தார்.
Dec 3, 2023 14 tweets 2 min read
#கோரக்கர்_சித்தர்_ஜெயந்தி

இன்று கார்த்திகை - ஆயில்யம்.

கோரக்கர் சித்தர் ஜெயந்தி.

இன்று 03 - 12 - 2023 ஞாயிற்றுக்கிழமை.

கோரக்கர் அவதரித்த நாள் கோரக்கர் ஜெயந்தியாக (கார்த்திகை மாதம் - ஆயில்ய நட்சத்திரம்) கொண்டாடப்படுகிறது. Image சிவனருளால் பிறந்த மச்சேந்திரர், பல இடங்களுக்கும் சென்ற போது, ஒரு பெண் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார்.

சுவாமி ! நான் குழந்தையின்றி இருக்கிறேன்.

ஊராரும் என் குடும்பத்தாரும் என்னை மலடி என திட்டுகின்றனர்.
Dec 2, 2023 14 tweets 2 min read
#ஸ்ரீ_பிரகாசம்_சுவாமிகள்

*சுவாமி மலையில் வாழும் சித்தர்*

*பிரகாசம் சுவாமிகள்*

*யாழ்ப்பாணம் சித்தர் சுவாமிகளின் சீடர் இவர்*

*சுவாமிகள் நிறைய பேரின் கர்மாவை தனது ஓரக்கண் பார்வையாலேயே கரைத்து விடும் சக்திப் பெற்றவர்* Image அடியேன் கர்ம வினைகளை பார்வையாலேயே கரைத்த *மௌன குரு*
பேசுவது கிடையாது.

அனைத்தும் பார்வையாலேயே தான்.