அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Jul 28, 2022, 12 tweets

#கோவிலில்_வழிபடும்_முறை நம் இந்து மதத்தில் தான் இறைவனை நம் உள்ளப்படி எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம் என்றிருக்கிறது. வழிபட முக்கிய தேவை பக்தியும் பணிவும் தான். ஆனால் கோவிலுக்குச் சென்று வழிபடும்போது நாம் சிலவற்றை கடைபிடிக்க வேண்டும். கோயிலுக்கு செல்லும்போது உடல், ஆடை, மனம் ஆகியவை

தூய்மையாக இருக்க வேண்டும். குளித்து விட்டு துவைத்த துணிகளை அணிந்து (கோவிலுக்கு உகந்த வேட்டி சட்டை, புடைவை) செல்ல வேண்டும். ஆண்கள் நெற்றியில் திருநீறு, சந்தனம், திருமண் காப்பு ஏதாவது ஒன்றை தரித்திருக்க வேண்டும். பெண்கள் குங்குமம் அல்லது சந்தனம், அல்லது திருநீறு இல்லாமல் வழிபடக்

கூடாது. வெறும் கைகளோடு கோவிலுக்கு செல்லாமல், நம்மால் இயன்றவரை இறைவனுக்கு பூக்கள், பழங்கள் அல்லது ஒரு கற்பூரமாவது எடுத்துச் செல்ல வேண்டும். சிவனுக்கு வில்வ இலையையும், பெருமாளுக்கு துளசியையும் அர்ச்சனைக்கு வாங்கி செல்வது இன்னும் சிறப்பு. கோவில் வாயிலில் நுழையும் போது தண்ணீரால் கை,

கால்களை கழுவிக் கொள்வது நல்லது. கோவிலுக்கு உள்ளே செல்லும் முன்பு கோபுரத்தை இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கி வணங்க வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அடுத்து கொடி மரம். நம் வேண்டுதல்களை கொடிமரத்தின் முன் நின்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு நமஸ்காரம் செய்து கொள்ள

வேண்டும். மேற்கு திசையில் தலையும் தெற்கு திசையில் கால் இருக்கும் படி நமஸ்காரம் செய்வது நல்லது. பிறகு பலிபீடத்துக்கு அருகில் சென்று நம்மிடமுள்ள தீய குணங்களை பலி கொடுத்ததாக வணங்க வேண்டும். கோவிலில் விநாயகர் இருப்பின் அவரை அடுத்து வணங்க வேண்டும். விநாயகரை வணங்குகையில் தோப்புக்கரணம்

போட வேண்டும். நெற்றி பொட்டுகளில் லேசாக குட்டிக் கொள்ள வேண்டும். விநாயகரை ஒரு முறையும் சூரியனை இரண்டு முறையும், அம்பாள், விஷ்ணுவை நான்கு முறையும், ஆஞ்சநேயரை ஐந்து முறையும் பிரதக்ஷ்ணம் செய்ய வேண்டும். முதியவர்கள் மற்றும் உடல் நலம் சரியில்லாதவர்களாக இருந்தால் ஒரு முறை மட்டும்

பிரதக்ஷ்ணம் செய்தால் போதும். கோயிலுக்குள் சென்ற பிறகு யாரிடமும் பேசாமல், இறைவனை மட்டும் மனதில் பிரார்த்தனை செய்ய வேண்டும். கோயிலுக்குள் சுற்றும் போது வேகமாக நடக்காமல் மெதுவாக நடக்க வேண்டும். கருவறை மண்டபத்துக்குள் நுழைந்து இறைவனை தரிசிக்கும் போது அர்ச்சனைகள் செய்து ஆரத்தி

காட்டும் போது கண் குளிர இறைவனை தரிசித்துக் கொள்ள வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு அப்போது பிரார்த்தனை செய்யக் கூடாது. மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் சமயத்திலும், நைவேத்தியம் செய்யப்படும் பொழுதும் பிரகாரத்தை பிரதக்ஷ்ணம் செய்யக் கூடாது. அபிஷேகத்தை பார்த்தால், அலங்காரத்தையும், தீப

ஆராதனையையும் பார்த்து விட்டு தான் வீடு திரும்ப வேண்டும். சனி பகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக் கூடாது. சற்று தள்ளி நின்று தான் கும்பிட வேண்டும். ஆலயத்தின் உள்ளே நம்மை விட மூத்தவர்களாக இருந்தாலும் சரி, கடவுளை தவிர வேறு யாருடைய காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க கூடாது.

சண்டிகேஸ்வரர் கோவிலில் கை தட்டி கும்பிடக் கூடாது. “சிவனின் அருளை தவிர நான் வேறு எதையும் எடுத்து செல்லவில்லை” என்று மனதில் நினைத்துக் கொண்டு வணங்கி வரவேண்டும். சிவன் கோவிலில் கால பைரவரையும், பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷங்கள் நம்மை அண்டாது. பின்பு

கோயிலில் அனுமார் இருப்பின் அவரை தரிசிக்க வேண்டும். சிறிது நேரம் கோயிலில் உட்கார்ந்து கண்மூடி பகவானை நினைத்துக் கொள்ள வேண்டும். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் போது வீட்டுக்குத் தான் வர வேண்டும். வேறு யார் வீட்டிற்கும் செல்லக் கூடாது. இவ்வாறு இறைவனை முழு மனதுடன் வழிபட்டால் நம்

கஷ்டங்கள் அனைத்தும் விரைவாகவே குறைய ஆரம்பித்துவிடும். ஒரு கோவிலில் வழிபடும் போது, இது போன்ற சில வரைமுறையை  கடைபிடித்தால்தான் அந்த வழிபாடு முழுமை அடைகிறது. சிறு வயது முதலே குழந்தைகளை கோவிலுக்கு அழைத்து சென்று வழிபட வைப்போம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling