#உலகசெஸ்போட்டியும்_அதன்பின்னர்_நிகழ்ந்தவையும்
மிகச் சரியாக கணித்திருக்கிறது பகைமை
அதனால்தான் Stalin is more dangerous than karunanidhi என கதற முடிந்தது.
மிக துல்லியமாக நுட்பமான அரசியல் செய்கிறார்.. வெறும் வாய்சவடால்கள் இல்லை பகட்டு இல்லை ..ஜாலவித்தைகள் இல்லை
ஆனால் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பாசிசத்தை கதறவைக்கிறது
செஸ்
சாதாரணமாக இதெல்லாம் இவ்வளவு பிரமாதபடுத்த முடியுமா என நினைத்தவர்கள் தலைவரின் தனித்திறனால் நிர்வாக திறமையால் எதை எப்படி நேர்த்தியாக செய்யவேண்டுமென்று அனைவரும் வியக்கும் வண்ணம் செய்துகாட்டியதோடு அழைத்துவந்து
"எங்கள் பெருமையை பார் " என பாடம் நடத்தி நாங்கள் திராவிடர்கள் அறிவார்ந்த சமூகம் என விளக்கம் தந்து அனுப்பியிருக்கிறார் ..
"மோடி" யின் படமில்லை என்றவர்களுக்கு நீதிமன்றத்தை வைத்தே குட்டுவைத்து .. நாங்கள் சரியான பாதையில் செல்கிறோமென உணர்த்தியிருக்கிறார்..
மோடி வருவதற்கு முன்பே
விழா தொடங்கியதும் தமிழன் பெருமையை கீழடியாய் தந்ததும், கருப்பை முன்னிலைபடுத்தியதும் பிரதமர் நமஸ்தே என்ற போது நிசப்தமாய் அரங்கிருந்ததும், கவர்னரை பொம்மையாக்கியதும், கருப்புகாய்களை தந்து திராவிட இனத்தின் நிறத்தை உணர்த்தி வரலாற்று நிகழ்வை நடத்திக்காட்டியிருக்கிறார்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திராவிட மாடல் குறித்து பிரதமரை வைத்துக்கொண்டே கவர்னருக்கு அறிவுரை கூறி கல்விதான் நமக்கான சொத்து என பொட்டில் அடித்திருக்கிறார்.
அதோடு விட்டாரா மலையாள மனோரமா விழாவில் ஒரே மொழி ஒரே தேசம் என்பவர்கள் நாட்டின் எதிரிகள் என வெளிச்சம் போட்டுகாட்டி..
ஆளுநரை கொண்டு இரட்டை ஆட்சி நடத்த நினைக்கிறதென
முகமூடியை கிழித்தெறிந்திருக்கிறார்..
கலைஞர் பதில் சொல்லியே நகர்த்துவார்.. தளபதி பேசுவதில்லை செயல்தான் ..
சொல்லி அடிப்பது கலைஞர் .. சொல்லாமலேயே அடித்தமர்த்துவது தளபதிக்கு கைவந்தகலை.. எதிரிகள் தீர்மானிப்பதற்கு முன்பு அடிவிழுகிறது.
சிலரை போல வலைதளத்திலோ,கத்திகூச்சலிட்டோ, பெருமைபேசியோ காய்களை நகர்த்துவதில்லை .. ஆனால் தளபதி காய்களை நகர்த்தினால் டெல்லிக்கே ராசாவானாலும் குப்புறவிழ வேண்டியதுதான் ..
தளபதி ஆடும் "அரசியல் சதுரங்கம்" நவீன கோமாளிக்கு ஒவ்வாமையை தரும் .
நல்ல தலைவனை தமிழ்நாடு பெற்றிருக்கிறது ..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் வலிமையான தலைவர் .. இந்திய ஒன்றியத்தை வழிநடத்தும் ஆற்றலும் திறனும் தகுதியும் மிக்க தலைவர்
மூலக் கட்டுரை : #ஆலஞ்சியார்
இது எதையுமே பற்றி கவலை படாமல் அடுத்த நாளே துவக்கி வைத்தார் பாருங்க காலை உணவு திட்டம், அதைப் பற்றி நாளை எழுதுகிறேன்..
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.