Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்
Mar 13, 2023 10 tweets 7 min read
#தமிழ்நாட்டு_கலவரங்கள்_வெகுஜன_ஊடகம்

#மொழிப்போர்_1965
மத்திய அரசு கொண்டு வந்த ஆட்சி மொழி சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டம் எழுந்தது .
மாணவர்கள் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 100 க்கும் மேற்பட்டவர் கொல்லப் பட்டனர் .
அப்பொழுது முதல்வர் #பக்தவச்சலம் . ImageImage சுட்டுக் கொல்ல ஆணையிட்ட போலிஸ் மந்திரி #கக்கன் இறந்தவர்கள் எல்லா சாதியினரும் உண்டு.
இது சாதி போராட்டம் இல்லை.

#விவசாயிகள்போராட்டம்_1978
மின் கட்டண உயர்வை எதிர்த்து 77 ல் ஆரம்பித்த விவசாயிகள் போராட்டத்தின் தொடர்ச்சியில் 40 விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
#எம்ஜிஆர் முதல்வர் Image
Mar 7, 2023 17 tweets 5 min read
#போலிதகவல்_கூலிப்படை 2
21 ம் நூற்றாண்டு அறியாமையின் நூற்றாண்டு. ஒரு பக்கம் மனிதகுலம் இதுவரை சந்தித்திராத தொழில்நுட்ப வளர்ச்சி. இன்னொரு பக்கம் பல நூறு ஆண்டு பழமைத்தனங்களோடு மனிதர்கள். அவர்கள் கைகளுக்கு செயற்கை நுண்ணறிவுடன் இயங்கக்கூடிய அதிஉயர் சாதனம் வந்துவிடுகிறது, இந்த அதி உயர் சாதனங்களை கையாள்வது குறித்து அதில் வரும் தகவல்களின் நிதானமாக நுங்குவதற்கான நேரமும் வாய்ப்பும் அவர்களுக்கு மறுக்கப்பட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள் எப்போதுமே ஒருவிதப் பதட்டத்தோடு ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வில் நின்று நிதானமாக தர்க பூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும் நிலை இல்லை.
Mar 6, 2023 22 tweets 10 min read
#போலிதகவல்_கூலிப்படை 3
பீகார் சம்பவத்தை தொடர்ந்து ஒரு வழியாக சமூக ஊடக போலி தகவல் மெர்சனரி (கூலிப்படைகள்) குறித்த பேச்சு மையத்திற்கு வரத் தொடங்கி இருக்கிறது. வலதுசாரிகள் இந்த விஷயத்தில் எவ்வளவு அட்வான்ஸ்ட்டாக இருக்கிறார்கள் என்பதற்கு இப்போது அமெரிக்க நிறுவனம் வெளியிட்டிருக்கும் 40,000 டிவிட்டர் அக்கவுண்ட் பற்றிய தகவல்களே சாட்சி..

சமூக ஊடகங்களை பல நாடுகளில் தேர்தல்களுக்கும் வலதுசாரிகளின் நலன்களுக்கும் பயன்படுத்த சர்வதேச அளவிலான நிறுவனங்கள் வந்துவிட்டது குறித்து கார்டியன் இதழ் செய்திருந்த stink ஆபரேஷன் குறித்து ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருந்தோம்.
Mar 4, 2023 19 tweets 8 min read
#நிழல்_யுத்தம்
பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பீகாரில் பல போலி வீடியோக்களை பரப்பி இருக்கிறார்கள்.

இங்கு அவர்கள் தமிழர்களை தாக்குவதாக தொடர்ந்து வீடியோக்களை பரப்புகிறார்கள் இதெல்லாம் தற்செயலாக நடப்பதா?

ஒரு கற்பனையாக 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சில Image வட மாநில தொழிலாளர்கள் சேர்ந்து ஒரு தமிழ் பெண்ணை சீண்டுவது போல ஒரு வீடியோ வருகிறது என்று வைத்துக் கொள்வோம் அது அந்தத் தேர்தலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

இப்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரேசில் நடைபெற்ற தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு Image
Mar 3, 2023 18 tweets 6 min read
#ராஜராஜேந்திரன் திமுகவின் வெற்றி குறித்து நேற்று வெளியிட்ட கட்டுரை @malarvili1998 மூலம் ட்விட்டரில் காண நேரிட்டது. அப்போதுதான் அறிந்தேன் அவர்
முகநூல்களில் மிகவும் பிரபலமான திராவிட எழுத்தாளர் என. இந்தக் கட்டுரை சீமானின் இருப்பு குறித்து அவர் வெளியிட்ட துல்லியமான கணிப்பு #Passing_Clouds

சீமானைக் கடந்த 13 வருடங்களாக தொடர்ந்து பார்த்து, கேட்டு வருகிறேன்.
மக்களாட்சியின் கருஞ்சாபம் அவர்.
தேர்தலில் ஏன் போட்டியிட வேண்டும் ?

வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக அல்லது தோற்று எதிர்கட்சியாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்களுக்கானது தேர்தல்
Feb 26, 2023 21 tweets 8 min read
#விஞ்ஞான_ஊழல்
1970களில் நிரூபிக்கப்படாமலே ஊத்தி மூடப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையைத் தூக்கிக்கொண்டு 50 ஆண்டாக எம்சியார், ஜெயலலிதா, பன்னீர், எடப்பாடி செய்த ஊழல்களை ஒன்னும் இல்லாதது போல் ஆக்கி கலைஞர் செய்யாத ஊழலா என பரப்பி வருகின்றனர்?
உண்மையில் விஞ்ஞான ஊழல் எது தெரியுமா? 2011ல் ஜெயலலிதா பதவியேற்ற நாள் முதலாகவே.. வசூல், வசூல்,வசூல். மாத வசூல் கிடையாது.வார வசூல். ஒவ்வொரு அமைச்சருக்கும், அவரது துறைக்கு ஏற்றார்ப்போல, டார்கெட் கொடுக்கப்பட்டிருக்கும். அவர்கள் வாரந்தோறும் பணத்தை வசூல் செய்து, கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்படும்
Feb 24, 2023 13 tweets 3 min read
#என்நிம்மதிக்கு_வந்தசோதனை

"இப்படித்தான் என்னையும் மிரட்டினார்கள்.. தியானத்தில் இருக்கும் ஓபிஎஸ் இன் மணக் குமுறல் புரிகிறது

- கங்கை அமரன் பேட்டி

ஓபிஎஸ் சசி கும்பலால் விரட்டப்பட்டு தர்மயுத்தம் நடத்தும் வரை கங்கை அமரனுக்கு நிகழ்ந்த கொடுமை வெளியுலகத்திற்கு தெரியாமலே இருந்தது Image பையனூர் பங்களாவை அபகரிக்க நினைத்த சசிகலா தரப்பு, முதலில் அதுதொடர்பாக என்னிடம் பேசவில்லை. மாறாக அ.தி.மு.க.வின் குழும தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்த என்னை நிர்ப்பந்தித்தார்கள். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அப்போது, முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அவரது அலுவலகத்திலிருந்து என்னுடைய
Feb 21, 2023 24 tweets 7 min read
#Vachathi_Humanhunt

1992 June 20,
Vachathi Village, Arur, Dharmapuri dis., TN
Mrs.Gandhimati was working in her fields
Suddenly a police battalion came down in a truck & started to beat her with no reason. They took her into the village & made her sit under a banyan tree Image That's when she realized that this cruelty was not only for her but for all the people in the village. Around 250 cottages and 655 people live in this nature-rich village inhabited by tribal people. The nearby Chitheri hills are rich in superior sandalwood trees. Image
Feb 20, 2023 27 tweets 8 min read
#வாச்சாத்🔥
1992 ஜூன் 20,
தர்மபுரி மாவட்டம் அரூர், வாச்சாத்தி மலைக்கிராமம்

தன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் காந்திமதி அம்மா.

லாரியில் வந்து இறங்கிய போலீஸ் பட்டாலியன் என்ன ஏது? என்று கூட கேட்கலை அடிக்க ஆரம்பித்தது. ஊருக்குள் கொண்டுபோய், ஆலமரத்தடியில் உட்காரவைத்தது அப்பதான் தெரிந்தது இந்த கொடுமை அவருக்கு மட்டும் இல்லை ஊரில் உள்ள அத்தனை பேருக்கும்னு.
ஏறத்தாழ 250 குடிசை வீடுகள் 655 பேர் கொண்ட இந்த இயற்கை வளம் சூழ்ந்த கிராமத்தில் பழங்குடி இனமக்கள் வசித்து வந்தனர். அருகில் இருக்கும் சித்தேரி மலைப்பகுதியில் உயர்ந்தவகை சந்தன மரங்கள் அதிகம்
Feb 19, 2023 16 tweets 6 min read
#கஞ்சாகேஸ்_அறிமுகம்
91 ல் #டான்சிராணி ஆட்சியில் அந்த பெயரை சொல்லவே பயந்து எம்.என். என்று மரியாதையாக அழைப்பார்கள்.
அவர்..
சசிகலா கணவர் எம் நடராஜன்
ஆசிட் வீச்சில் முகம் சிதைந்த பெண் IAS சந்திரலேகாவுடன் நடராஜனின் அறிமுகத்திலிருந்து ஆரம்பித்தது தமிழ்நாட்டின் அரசியல் சீரழிவு செய்தி பிரிவு அதிகாரியாக கலைஞரால் நியமிக்கப்பட்ட நடராஜன் மனைவி சசிகலாவை சந்திரலேகா உதவியுடன் ஜெயாவுக்கு அறிமுகம் செய்தார். எம்ஜிஆரின் அடாவடியால் ஆண் நண்பர்களை சந்திக்க முடியாமல் தவித்த ஜெயாவுக்கு சசியின் வருகை ஆறுதலாக இருந்தது. வீடியோ கேசட் கொடுக்க வந்தவள் உடன்பிறவா சகோதரி ஆனார்
Feb 18, 2023 27 tweets 7 min read
"குடந்தைக்குப் பெயர் மாற்றுங்கள்
மகாபலிபுரம் என்று"
இப்படி ஒரு ஹைக்கூவை இப்போது படித்தால் யாருக்கும் புரியாது. 1992-ம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று நடந்த விபரீதத்துக்குப் பின் எழுதப்பட்ட ஹைக்கூ இது.
ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வரலாறு உண்டு. ஒரு சில நாள்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கடந்த காலத்திலிருந்து அள்ளித் தரும். ஒரு சில நாள்கள், தீராத சோகத்தையும் ஆராத ரணத்தையும் நினைவுபடுத்தும். இன்றைய நாளுக்கு அப்படியொரு துயர வரலாறு உண்டு.31 ஆண்டுகளுக்கு முன், இதேநாளில் பெரும் மக்கள் கூட்டம் மரண ஓலத்தோடு திக்குத் தெரியாமல் முட்டி மோதி பல உயிரிழப்புகளைச் சந்தித்தது.
Feb 17, 2023 12 tweets 4 min read
இந்தியனே, இந்தியனைச் சுரண்ட நினைத்தால் என்னாகும்
~ #ராஜராஜேந்திரன்

வரலாறு என்ன சொல்கிறது ??

பார்ப்பனீயப் பாம்பு ஆட்சியாளர்களின் கால்களை இறுகப் பிடித்து, கழுத்துவரை கவ்விவிட்டபின், நாட்டில் மதத்தின், இனத்தின் பெயரால் சக மனிதர்களையே இழிவுபடுத்தும் கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறின. கஜினி, கோரி என கொள்ளையடிக்க வந்தவர்களிடம், இராமன் ஆண்டாலும், இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்ல என்று பாடினார்கள் சாமானியர்கள்.

எளிதாக ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியது அடிமை வம்சம்.

ஐநூறு ஆண்டுகளுக்குப் பின் அவனும் பழைய குருடி கதவைத் திறடி கதையாய், உல்லாச வாழ்வில் அலங்கோலமான
Feb 16, 2023 12 tweets 3 min read
#நெஞ்சுக்குநீதி_பாகம்1
#9_தமிழ்மாணவர்மன்றம்
பிரிட்டிஷ் ஆட்சியில கம்யூனிஸ்டுகள் மீது பல சதி வழக்குகள் புனையப்பட்டிருந்தது
கதர் சட்டை பார்த்து காங்கிரஸ் என நம்பி கம்யூனிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்த கலைஞர் உண்மை அறிந்து தன் தலைமையில் உருவான மாணவர் சம்மேளனத்தை கலைக்க முடிவு செய்தார். Image இனி கலைஞர் வார்த்தைகளில்..
கதர்ச் சட்டைக்காரர் வந்து சம்மேளன நிர்வாகிகள் தேர்தல் நடத்தி, என்னையே மாணவர் கிளையின் செயலாளராகவும் ஆக்கினார்.

என் நண்பர் எஸ். பி. சிதம்பரம் பொருளாளராகவும் ஆக்கப் பட்டார்.

நிர்வாகி தேர்தல் நடந்ததிலிருந்து என் மனம் குழப்பமாகவே ஆகி விட்டது.
Feb 15, 2023 22 tweets 5 min read
#சின்னங்களின்_வரலாறு
#கை
1950 ல அம்பேத்கர் இயற்றிய அரசியல் சட்டம் ஏற்கப்பட்டது. இந்தியா குடியரசு நாடாகியது. அதன்பிறகு 1951 ஆம் ஆண்டு விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில்தான் கட்சிகள் குறிப்பிட்ட சின்னங்களில் தேர்தலை சந்திக்கத் தொடங்கின. முதல் தேர்தலில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் இரட்டை காளைச் சின்னத்தில் போட்டியிட்டது. மொத்தம் உள்ள 489 இடங்களில் 479 இடங்களுக்கு போட்டியிட்டு 364 இடங்களைக் கைப்பற்றியது. சுயேச்சைகள் 37 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 16, சோசலிஸ்ட் கட்சி 12 இடங்களையும் வென்றன.
Feb 13, 2023 11 tweets 3 min read
#நெஞ்சுக்குநீதி_பாகம்1
8. சுதந்திர போராட்டம்
1939ல் விடுதலை கனல் தகித்து கொண்டு இருந்தது.
காந்தி இர்வின், ஒப்பந்தம், நேதாஜியின் ஆசாத் ஹிந்து ஃபவுஸ், ஜின்னாவின் தனிநாடு கோரிக்கை இந்தியாவில் தென் மூலையில் திருவாரூரில் படித்துக் கொண்டிருந்த 15 வயது பையன் கருணாநிதியையும் பாதித்தது Image இனி கலைஞர் வார்த்தைகளில்:

அப்படிப் பட்ட முயற்சிகளில் ஈடுபட்ட ஒருவர் என்னைச் சந்திக்க விரும்பினார்.
அவர் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார், கருணாநிதி என்றால் கிட்டத்தட்ட அவரைப் போன்ற வயதுடையவன், உருவமுடையவன் என்றெல்லாம்;15 வயது இளைஞனாக மெலிந்த உருவினனாக நான் போய் எதிரே நின்றேன். Image
Jan 30, 2023 17 tweets 7 min read
#இந்தியபாசிச_வரலாறு 1

இந்திய பாசிச முகமூடிகளை வெளிப்படுத்த இன்று போல் ஒரு கெட்ட நாள் அமையாது.

தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழில் பார்த்துக் கொண்டிருந்தவரை, விதி ஒரு மத வெறி பிடித்த நூலிபானின் குண்டுக்கு பலியாக இந்தியாவிற்கு அழைத்து வந்தது

அவர் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி காந்திக்கு முன்பே காங்கிரஸ் இயக்கம் ஆலன் ஆக்டோவியன் ஹுமால் ஆரம்பிக்கப்பட்டது

தாங்கள் அந்நியரால் ஆளப்படுகிறோம் என்பதை இந்திய மக்கள் உணராதபடி செய்ய தாதாபாய் நௌரோஜி ஃபிரோஜ் சா மேத்தா போன்ற மேல்தட்டு பார்சி தொழிலதிபர்கள் உள்ளே இழுத்துப் போடப்பட்டார்கள்
கூடவே சில நூலிபான்களும்
Jan 29, 2023 8 tweets 3 min read
#இந்தியபாசிசத்தின்_எழுச்சி
பாசிசம் என்ற சொல் பொதுவாக அதிகாரத்தை கைப்பற்றிய ஒரு குழு அதனை தக்க வைக்க பிற குழுக்களை அடக்கி ஒடுக்கி அதிகாரத்தை தன்னிடமே என்றென்றும் வைத்துக்கொள்ள முயல்வதை குறிக்கிறது. இந்தியாவில் நிகழ்வதை குறிக்க வேறு சொல் இல்லாததால் நாமும் பாசிசம் என்றே கூறுவோம் பாசிசம் என்பது தனி நபர் அல்ல. அது ஒரு அமைப்பு அதன் முகமூடிகள் காலாவதி ஆனவுடன் மாற்றப்படும். சில பல வார்த்தை மாறுதலுக்கு பின் புதிய மொந்தையில் பழைய கள்ளை வழங்கி மாற்றம் நிகழ்ந்து விட்டது இனி எல்லாம் சுகமே என்ற மயக்கத்திலேயே மக்களை நம்பச் செய்து என்றும் அடிமையாக வைத்திருப்பது
Jan 28, 2023 14 tweets 3 min read
ஒவ்வொரு வயதிலும் ஒருவிதமான பிரமிப்பு நமக்கு எழும்.
1947 முதல் 70 ஆண்டு காலம் இந்தியா என்ற கட்டுமானம் சிறிது சிறிதாக நேரு முதல் மன்மோகன் வரை எழுப்பப்பட்டது.
2000 ல் அடிப்படை வரலாற்று அறிவோ,பகுத்தறியும் திறனற்ற சமூக ஊடகங்களில் அன்றாட நிகழ்வை தெரிந்து கொள்ளும் புதிய தலைமுறை உருவானது முறையாக வரலாற்றை கற்பிக்க தவறிய காங்கிரஸ் அரசு இத்தலைமுறையில் மனப்போக்கை கவனிக்க தவறிவிட்டது.
விளைவு?
மோடி என்ற மூடன் மாபெரும் அவதார புருஷனாக குஜராத் பரிசோதனை சாலையில் கட்டமைக்கப்பட்டது.
அண்ணா ஹசாரே, போபால் என்ற ஓரங்க நாடகம் டெல்லியில் நிகழ்ந்தது.
மன்மோகன் சிங் செய்த
Jan 27, 2023 7 tweets 2 min read
இடுப்பு பிரச்சனை இருக்கும் @pudugaiabdulla ஊன்றுகோல் உதவியுடன் அரசின் குடியரசு தின விழாவிற்கு வருகிறார்

அவரால் அதிக நேரம் அமர்ந்து இருக்க முடியாத உடல்நலன் சார்ந்த பிரச்சனை

மரியாதைக்கு சிறிது நேரம் இருந்து விட்டு, தன் நிலையை விழா அமைப்பாளர்களிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். ஒரு முன்னணி ஊடக நிருபர் அவர் காரில் ஏறுவதை பார்க்கிறார்!

போட்டோ எடுக்கிறார்!

எம்பியிடம் சென்று ஏன் விரைவாக கிளம்புகிறீர்கள் என கேட்கும் சூழல் இருந்தும் கேட்கவில்லை.

அந்த காரில் ஏறும் போட்டோவை ஊடகத்தின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்புகிறார்,

”சரியான இருக்கை இல்லாதால்
Jan 26, 2023 9 tweets 5 min read
பி.பி. சி விஷயத்தை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டது போல தெரியவில்லை.
பாசிஸ்டுகளை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கு கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் வீணடிக்க கூடாது

உலகின் மிக முக்கியமான ஊடகம் குசராத் படுகொலையில் மோடிக்கு இருக்கும்
#ButcherofGujarat Image தொடர்பை அம்பலப்படுத்தி இருக்கிறது, பயந்த பாரதிய ஜனதா இந்தியாவில் அதை தடை செய்திருக்கிறது
இந்தியா முழுவதும் இருக்கும் அரசியல் எதிர்க்கட்சிகள் இதை கேள்வி எழுப்பியதாக தெரியவில்லை, கம்யூனிஸ்டுகள் மட்டுமே இந்த விஷயத்தை பேசுகிறார்கள் அவர்கள் பலம் பெற்று இருக்கக்கூடிய
#ButcherofGujarat Image
Jan 22, 2023 17 tweets 5 min read
நாச்சியாள் நிறுவ நினைத்தது

1) சிதம்பரம் என்ற கவுன்சிலர் திமுகவைச் சார்ந்தவர். அவருக்கும், அதிமுக ஒன்றியத் தலைவரின் கணவருக்கும் இருந்த பகையால், தங்களைச் சந்திக்க பயந்த திமுகவின் சிதம்பரம்தான் குற்றவாளி
ஆனால் சிதம்பரமம் அதிமுகவைச் சேர்ந்தவர் என கரிகாலனிடம் உண்மையை உளறிவிட்டார் Image திட்டம் போட்டு ரெட்பிக்ஸ், ழகரத்திடம் திமுக மீது அவதூறைச் சொன்னவர், அதைப் பல லட்சம் பேர் பார்த்தபின் கரிகாலனிடம் சிக்கி அதை டங் ஸ்லிப் என்கிறார். காமிராவை ஆஃப் பண்ணு, ஏ நீ திமுககாரன்தான, பெரியாரிஸ்ட்தான, என்கிறார் ஃபேஸ்புக் வந்து, அவரை விமர்சிப்பவர்கள் சாதி வெறியர் என்கிறார் Image