Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Aug 5, 2022, 11 tweets

#டான்_அசோக்_பதிவு

2G ஏலத்தின்போது 1,76,000 கோடி என தினமலர் பல பூஜ்ஜியங்களோடு எழுதியது. 1,76,000 கோடி ரூபாயை நீளவாக்கில் அடுக்கினால் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை அடுக்கலாம் எனவும் எழுதியது.சமூகவலைதள புரோக்கர் ஒன்று "ஆண்டிமுத்து (ஆ.ராசாவின் தந்தை) மட்டும் இரவு ஆட்டத்திற்கு

போயிருந்தால் இந்தியாவுக்கு 176000 கோடி நட்டம் ஏற்பட்டிருக்காது," என நாகரீகம் பொங்க எழுதியது. இவ்வளவு பெரிய ஊழலுக்கு நிஜமாகவே சாத்தியம் உண்டா? அதன் மூலம் என்ன? அது ஒரு மதிப்புதானே தவிர நிஜ பணம் அல்ல என்பதையெல்லாம் பற்றி யாரும் கவலைப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால்

"திமுகவை அடிக்க கிடைச்சுச்சுடா ஒரு நல்ல ஆயுதம்," என்ற வெறி மட்டும்தான் அவர்களின் ஒரே நோக்கம். பள்ளி, கல்லூரி, அலுவலகம் முதல் பஜ்ஜி கடை, டீ கடை வரை 2G மெகா ஊழல் என கொண்டு போய் சேர்த்தார்கள்.

வினோத் ராய் எனும் சங்கி மூலம் செய்யப்பட்ட இந்த மாபெரும் அயோக்கியத்தனத்தை

"ஒரு மாநிலக் கட்சியின் பெயர் கெட்டால் நமக்கென்ன?" என காங்கிரஸ் அப்போது அமைதியாக வேடிக்கை பார்த்தது. (இன்றுவரை அதற்கான தண்டனையை அது அனுபவிப்பது வேறு விஷயம்)

இப்படியாக 2ஜி தீ போல பரப்பப்பட்டதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.

1) திமுகவை அழிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு

அவப்பெயர் ஏற்படுத்தி ஊழல் முத்திரை குத்த வேண்டும்.

2) ஆ.ராசா அட்டவணை சாதியைச் சேர்ந்தவர் என்பதால் ஈசி டார்கெட். இதை கலைஞர் சொன்னபோது "சாதி அரசியல் செய்கிறார். சாதியைக் காட்டி தப்பிக்க பார்க்கிறார்," என்றார்கள்.

இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள் சில உண்டு.

1) இப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டை ஆ.ராசா உயர்சாதிக்காரர் என்றால் அவர் மீது சுமத்தி இருப்பார்களா?

2) அன்று பொங்கி எழுந்து கண்டபடி தலைப்புகளையும் அட்டைப்படங்களையும் போட்ட விகடன், தினமலர் போன்ற ஊடகங்கள் 5ஜி ஏலத்தில் ஏன் அமைதியாக உள்ளன? அப்படியென்றால் ஊடகங்களுக்கும் பூணூல் உண்டா?

3) ஒரு மாநிலத்தின் மிகப்பெரிய கட்சி சார்பில் ஒரு மத்திய அமைச்சர். அவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவரைக் கூட இந்த ஊடகங்களும், அமைப்பும், பூணூல்களும் நினைத்தால் பொய்க்குற்றச்சாட்டு சுமத்தி ஆட்டுவிக்க முடியும் என்றால் இந்த 'அமைப்பில்' உயர்சாதி அல்லாத சராசரி மனிதர்களின் நிலை என்ன?

4) வேறெந்த கட்சி மீதும் இல்லாத வன்மம் இந்த இந்திய அமைப்புக்கு, பூணூல் ஊடகங்களுக்கு, உயர்சாதிக்காரர்களுக்கு திமுகவின் மேல் ஏன் உள்ளது?

5) இந்திய அளவில் திமுக என்பது யாருடைய பிரதிநிதியாகப் பார்க்கப்படுகிறது? மண்டல் கமிஷன், சமூகநீதி இந்தி திணிப்பு எதிர்ப்பு, மொழி உரிமை

எல்லாம் பேசாமல் அதிமுக போல அமைதியாக இருந்தால் 2ஜி ஊழல் என்ற பொய்யெ தோன்றி இருக்காதோ?

6) இன்று நிலவும் மயான அமைதியின் பொருள் என்ன? ஊழல்தான் இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு என்றால் அதானி அம்பானிக்கு ஷூ பாலிஷ் போடும் மோடி அரசை கேள்வி கேட்கலாமே?

ஊழல் எதிர்ப்பெல்லாம் லாலு பிரசாத் யாதவ், திமுக போன்ற கட்சிகளுக்கு எதிராக மட்டும்தானா?

7) 2ஜிக்காக ஆ.ராசாவை நெருப்பில் இறங்கச் சொன்னவர்கள் 5ஜி ஏலத்தில் பாஜகவை பாத்-டப்பில் கூட இறங்கச் சொல்லவில்லையே? ஏன்?

இப்படி நிறைய கேள்விகளை எழுப்புங்கள். சராசரி மக்கள்,

விளிம்புநிலை மனிதர்கள், சமூகநீதி, மொழியுரிமை, மாநில உரிமை போன்றவற்றின் பிரதிநியாக திமுக மட்டுமே உள்ளது, திமுகவுக்கு துணை நிற்பது நமக்கு நாமே துணை நிற்பதைப் போல என்பதும் புரியும்.

அப்படியும் புரியாதவர்கள் பக்கத்து கடையில் போய் 5% GST செலுத்தி கப் தயிர் வாங்கிச் சாப்பிடுங்கள்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling