இட்லி-Fridge-புளிப்பு-Cholesterol
வாங்க #அறிவியல்_பேசுவோம்
"இன்னைக்கு மாவு ஆட்டி வச்சாத்தான் நாளைக்கு புளிக்கும், நல்லா இருக்கும்".
"குளிர்காலத்துல மாவு புளிக்க ரொம்ப நேரம் ஆகும்".
இதெல்லாம் நம்ம வீட்டுல அடிக்கடி கேக்குற வார்த்தைகள்.
(1/18)
தயிருக்கும் குளிர்காலத்துல இதே நிலைமை தான். அப்போ இட்லி புளிக்கிறதுக்கும் குளிருக்கும் என்ன சம்பந்தம். வாங்க பாப்போம்.
1. இட்லி எப்படி புளிக்குது:
மனிதர்கள் ஆதிகாலத்துல இருந்து பல உணவுப்பொருட்கள நொதிக்க வச்சி (fermentation) சாப்ட்டுகிட்டு இருக்கோம். Fermentationனா ஒரு 2/18
உணவுப்பொருள நுண்ணுயிரிகளின் துணைக்கொண்டு அதில் உள்ள glucoseஐ வளர்சிதை மாற்றம் (metabolize) செய்து carbondioxideஅயும் lactic acidஅயும் உற்பத்தி செய்வது. carbondioxide உணவுக்கு பஞ்சு போன்ற softnessஅயும் lactic acid புளிப்பு சுவையையும் குடுக்குது. இட்லிய நொதிக்க வைக்கறதுக்கு 3/18
நமக்கு உதவுற பாக்டீரியாக்கள் Leuconostoc mesenteroides மற்றும் Streptoccous thermophilus, இதுல L. mesenteroides இட்லிக்கு carbondioxideஅயும் S. thermophilus lactic acidஅயும் கொடுத்து நமக்கு taste குடுக்குது, அந்த உணவுப்பொருளின் nutritional valueவையும் அதிகப்படுத்துது (4/18)
2. Fridgeக்கும் மாவு புளிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்:
நம்ம மொதல்ல குளிர்காலத்துல மாவு புளிக்க lateஆகும்ன்னு சொன்னோம் இல்லையா? Fridgeகுள்ள வச்சாலும் மாவு புளிக்க மாட்டுது. அப்படினா குளிருக்கும் இட்லியை புளிக்க வைக்கிற பாக்டீரியாக்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு. அது என்ன? (5/18)
பொதுவா எந்த ஒரு செல்லும் முழுமையா செயல்பட, வளர்சிதை மாற்றத்த துரிதப்படுத்த வெப்பநிலை (temperature) ரொம்ப ரொம்ப முக்கியம். பாக்டீரியால இருந்து மனித செல்கள் வரை அனைத்து செல்களும் தன் முழுஆற்றலை வெளிப்படுத்த ஏற்ற வெப்பநிலை 37oC. எனவே தோராயமாக 30oC இருந்து 40oC வரைக்கும் (6/18)
இட்லியில் உள்ள பாக்டீரியாக்கள் துரிதமா செயல்பட்டு நமக்கு இட்லி மாவை சீக்கிரமா புளிக்க வைக்கும். அப்படியே படிப்படியா வெப்பநிலை குறைய குறைய பாக்டீரியாவின் செயல்பாடு குறைந்து புளிக்க வைக்குற processக்கு நெறய time எடுத்துக்கும். (7/18)
Fridgeல இருக்குற 4oCல பெரும்பாலான பாக்டீரியாக்கள் செயல் இழக்குறதாலதான் மாவும் புளிக்காது. திரும்ப மாவை எடுத்து வெளிய வைக்கும் போது தனக்கு ஏற்ற வெப்ப நிலை வந்ததும் பாக்டீரியா happy அண்ணாச்சி. (8/18)
so அதிக நேரம் உயர்ந்த வெப்பநிலையில் இருக்கும் இட்லி மாவு = அதிக bacterial activity = அதிக புளிப்பு
(9/18)
3. அப்போ பிரச்சனை எங்க இருக்கு? Fridge சவப்பெட்டியா?
இங்க பிரச்சனை Fridge storageன்னால இல்ல. ஒருத்தர் அந்த மாவை எத்தனை தடவ இந்த வெப்பநிலை மாற்றத்துக்கு (Freeze-thaw cycle) உட்படுத்துகின்றார் என்பது தான். நீங்க மாவை வெளிய எடுக்குற (10/18)
ஒவ்வொரு நேரமும் L. mesenteroides மற்றும் S. thermophilus பாக்டீரியா தவிர சில தீமைவிளைவிக்கும் பாக்டீரியாக்களும், இன்னும் சில பூஞ்சைகள் அந்த மாவ ஆக்கிரமிக்கவும் வழிசெய்துகுடுக்குறீங்க. பெரும்பாலான பூஞ்சைகள் வெப்பநிலைகட்டுப்பாடுகளை தாண்டியது. 4oCலயும் துரிதமாகத்தான்செயல்படும் 11/18
இதுவே இட்லி மாவு கெட்டுபோயிடுறதுக்கான காரணம். So நம்ம fridgeக்கு வெளிய அந்த உணவுபொருள கையாளறவிதம் தான் தப்பே தவிர fridge தப்பு இல்ல. ஒரு air tight container, நிறைய freeze-thaw cycle இல்லாம ஒரு உணவுப்பொருளை store பண்ணும்போது பெரும்பாலான உணவுகள் (12/18)
ஆரோக்கியம் குறைவதில்லை. இப்போ Fridgeகுள்ள வைக்கிற உணவுப்பொருள் மிகநிதானமாக கெட்டுபோவதறகும் வெளியவேவைக்கிற பொருள் சீக்கிரம் கெட்டுபோவதற்குமான நேர்மறை தொடர்பு தெளிவாகும்னு நினைக்கிறன். Caution:Fridgeகுள்ள வைக்கும்போதும் உணவுப்பொருட்களுக்கு expiry date இருக்குன்றத மறக்கவேண்டாம் 13
4. அப்போ அந்த புளிப்பு cholesterol எல்லாம்?
இப்போ நமக்கு தெரியும் இல்லையா இட்லில உள்ள lactic acid தான் அந்த புளிப்பு சுவையை நமக்கு குடுக்குதுன்னு. அப்போ அந்த lactic acid தான் இந்த videoல சொல்ற மாதிரி cholesterolஆ மாறுதா? (14/18)
இல்ல. இல்லவே இல்ல. மனித உடம்புல cholesterol உற்பத்தி செய்றதுக்கான process lactic acidஐ மூலப்பொருளாய் கொண்டு ஆரம்பிப்பது அல்ல. மேலும் நமது வயிற்றிலேயே lactic acid உற்பத்தி செய்யக்கூடிய நல்ல பாக்டீரியாக்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. (15/18)
பால்குடிக்கும் பருவமுள்ள குழந்தைகளுக்கும் இந்த பாக்டீரியாக்கள் தான் ஜீரணத்தை ஏதுவாக்குகின்றன. அப்போ அவையெல்லாம் cholesterolஅயம் உற்பத்தி செய்கின்றனவா? (16/18)
இங்க ஒரு logic யோசிங்க: fridgeகுள்ள வச்சாலும் வெளிய வச்சாலும் அதே lactic acid தான இட்லில இருக்கப்போகுது. அது எப்படி fridgeகுள்ள இருக்குற lactic acid cholesterolஆகவும் வெளிய வைக்கிற lactic acid வேறவாகவும் நம்ம உடல் ஜீரணிக்கும்? (17/18)
அறிவியலை பொய் என்று கூறி அதன் மேல் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உங்களை அதிலிருந்து மீட்டெடுக்க தான் நாங்க வந்திருக்கோம்னு சொல்ற இந்த திடீர் மீட்பர்கள்கிட்ட கவனமாய்இருங்கள்.
அறிவியலை அதிகம் படியுங்கள்!
அச்சங்கள் யாவையும் வாசிப்பின் மூலம் களையுங்கள்!
#போலி_மீட்பர்களை_நம்பாதீர்!
(18/18)
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
