Tomorrow is not only our #75thYearOfIndependence also #MahaSangataharaChathurthi
15.08.22 #மஹா_சங்கடஹர_சதுர்த்தி
தீராத சங்கடங்களும் சீக்கிரமே தீர இந்த விசேஷ சங்கடஹர சதுர்த்திக்கு விநாயகருக்கு நம் கையால் அருகம் புல்லை மட்டும் வாங்கிக் கொடுத்தால் போதும். மாதம் தோறும் வரும் சங்கடஹர
சதுர்த்தி தினத்தில் விநாயகரை விரதம் இருந்து வழிபாடு செய்ய முடியாதவர்கள் கூட நாளை வருகிற மஹா சங்கட சதுர்த்தி நாளில் விநாயகரை நினைத்து வழிபட்டால், வருடம் முழுவதும் வரும் 11 சங்கட சதுர்த்திக்கும் விநாயகரை வழிபட்ட பலனை நம்மால் பெற முடியும். விநாயகர் சதுர்த்திக்கு முன்பு வரும் இந்த
ஆவணி மாத சங்கட ஹர சதுர்த்தியை நாளை, யாரும் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றே வீட்டை, பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நாளை காலை 6 மணிக்கு முன்பாகவே குளித்துவிட்டு, பூஜை அறையில் விநாயகரை நினைத்து ஒரு மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து நம் விரதத்தைத்
தொடங்க வேண்டும். அவரவர் உடல் சௌகரியத்தைப் பொறுத்து விரதம் இருந்து கொள்ளலாம். உடல்நிலை சரியில்லாதவர்கள் மருந்து மாத்திரை சாப்பிட்டுபவர்கள், பலகாரங்கள் சாப்பிட்டும் விரதம் இருக்கலாம். விளக்கேற்றி நம் பிரார்த்தனையை சங்கல்பம் செய்து வேண்டி கொள்ள வேண்டும். பின்பு காலையிலேயே விநாயகர்
கோவிலுக்கு சென்று விநாயகருக்கு நம் கையால் அருகம்புல் மாலையை வாங்கி கொடுக்க வேண்டும். முடிந்தால் பசுமையாக விளைந்திருக்கும் அருகம்புல்லை நம் கையாலேயே பறித்து, அதை மாலையாகத் தொடுத்து விநாயகருக்கு கொடுப்பது மிக மிக நல்லது. விநாயகருக்கு 11 தோப்புக்கரணம் போட்டு, விநாயகரை 11 முறை வலம்
வரவேண்டும். நாளைய தினம் முழுவதும் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் விநாயகர் நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாளை மாலை 6 மணி அளவில் வீட்டில் சங்கடஹர சதுர்த்தி பூஜையை தொடங்க வேண்டும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, முடிந்தால் விநாயகருக்கு பிடித்த
கொழுக்கட்டையை 11 என்ற கணக்கில் செய்து நிவேதனமாக வைத்து, விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல்லினை சூட்டி, விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். கொழுக்கட்டை செய்ய முடியாதவர்கள் ஒரு டம்ளர் பசும்பாலில் இனிப்பு சேர்த்தும் நிவேதனம் செய்யலாம். பூஜை அறையிலேயே அமர்ந்து
‘ஓம் கம் கணபதயே நமஹ’
என்ற
மந்திரத்தை 108 முறையும், விநாயகர் அகவல், கணேஷ பஞ்சரத்னம் ஆகிய ஸ்தோத்திரங்களை சொல்லி இறுதியாக சங்கடங்கள் தீர வேண்டும், அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, பிரார்த்தனையை முடித்து, இறைவனுக்கு தீப தூப கற்பூர ஆரத்தி காட்டி பூஜையை நிறைவு செய்வது வழக்கம். தொடர்ந்து 12
சங்கடஹர சதுர்த்தி மேற்கொள்ள இருப்பவர்களும் இந்நாளில் தான் முதல் விரதத்தை தொடங்குவார்கள். சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.