PhyFron | அறிவியல் மன்றம் Profile picture
அறிவியல் கேள்விகளை கேளுங்கள் #AskPhyFron | அறிவியல் அறிவொளி 2.0 | #PhyFron Team | https://t.co/KVlqhQ5OrC…

Aug 15, 2022, 20 tweets

இந்தியாவும் அறிவியல் புரட்சியும்
இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவை ஒவ்வொரு முறையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றதில் அறிவியல் மற்றும் அறிவியலாளர்களின் பங்கு அளப்பரியுது. #IndiaAt75
#PhyFron

அப்படி அனைவரின் தனி மனித முன்னேற்றத்தில் பங்கெடுத்த முக்கியமான தொழில்நுடப்ங்கள் பற்றிய இழை.

1947 – 1957 ஆராய்ச்சி நிறுவனங்களும் அறிவியல் அடித்தளமும்
முதல் ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக "அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி" தொடங்கப்பட்டு அதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கிய நிறுவனங்களாக பதினோரு ஆராய்ச்சி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

1957-1967 - பசுமை புரட்சி
உள்நாட்டு உற்பத்தி மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க இயலாமல் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த நிலையில் "பசுமை புரட்சி" மூலம் உணவு (நெல், கோதுமை) உற்பத்தியில் பெரும் பலன் அடைகிறது .

வெண்மை புரட்சி

சுதந்திர இந்தியா மக்கள்தொகையை கணக்கில் கொண்டு தானியங்கள் மட்டுமல்லாது பால் பொருட்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. வர்கீஸ் குரியன் அவரகள் 1950ஆம் ஆண்டு குஜராத்திலுள்ள ஆனந்தில் கைரா பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை

(பின்னாளில் அமுல் என்றானது) நிறுவினார். எருமை பால் வரத்து அதிகம் இருந்த நிலையில், அதனை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றுதல் இயலாது என ஐரோப்பிய நிறுவனங்கள் கைவிட, HM டாலயா அவர்கள் எருமை பாலிலிருந்து பால் பொடி தயாரிக்கும் முறையை கண்டறிந்தார் இது வெண்மை புரட்சியில் பெரிய பலமாக அமைந்தது

செயற்கைக்கோள் மற்றும் தகவல் புரட்சி

விக்ரம் சாராபாய் அவர்கள் இந்திய வான்வெளி ஆராய்ச்சி தலைவராக இருந்தபோது செயற்கைக்கோள்களை கொண்டு வானிலை, தொலைதொடர்பு மற்றும் தொலையுணர்தல் மூலம் மக்களின் முன்னேற்றத்திற்குத் திட்டம் தீட்டினார்.

Satellite Instructional Television Experiment (SITE) என்ற திட்டத்தின் மூலம் தொலைக்காட்சிப் பெட்டியின் வழியே கல்வி மேம்பாட்டுக்கு வித்திட்டார். ஆர்யபட்டா என்ற முதல் செயற்கோளை தொடர்ந்து இன்சாட், IRS (Indian Remote Sensing Satellite System) வகை செயற்கோள்கள் மூலம் தொலைக்காட்சி

மற்றும் தொலைதொடர்பு சேவை இந்தியா முழுவதும் சென்றடைந்தது. வானிலை தொடர்பான செயற்கைக்கோள்கள் பல மக்களின் உயிர்களை காக்க உதவின. 1980களில் VSAT (Very Small Aperture Terminal) சேவை மூலம் வணிகம் மற்றும் இதர துறைகள் வளர்ச்சி கண்டன

மருந்துகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தி

வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் இந்திய மருந்து சந்தையை ஆக்கிரமித்திருந்த நிலையில், 1954ல் இந்தியா Hindustan Antibiotics Limited மற்றும் ரஷ்யா நாட்டு துணையுடன் Indian Drugs and Pharmaceuticals Limited என்ற நிறுவனங்களை தொடங்கியது. இதோடு

National Chemicals Laboratory (NCL), Regional Research Laboratory Hyderabad (Indian Institute of Chemical Technology) and Central Drug Research Institute ஆகியன மருந்து தயாரிப்பில் இந்தியா அடுத்த கட்டத்தை எட்ட பங்காற்றியது.

1970 காப்புரிமை சட்டம், சர்வதேச காப்புரிமை பெறப்பட்ட மருந்துகளை உள்நாட்டில் வெவ்வேறு முறைகள் கொண்டு உருவாக்கக் காரணமாக அமைந்தது. அடுத்த இருபது ஆண்டுகளில் இந்தியா மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் தனி இடம் பதித்தது.

C-DOT-தொலைத்தொடர்பு புரட்சி
மற்ற தொழிநுட்பங்களைப் போல தொலைத்தொடர்புக்கும் மற்ற நாடுகளைச் சார்ந்து இயங்க வேண்டிய சூழல் இருந்த நேரத்தில்,'60களில் இந்தியாவிற்கென்று மின்னணு பரிமாற்ற சேவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது, முதல் சாதனையாக 1973ல் 100லைன் மின்னணு சொடுக்கி உருவாக்கப்பட்டது

ஐஐடி பம்பாய்&டாடா ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து பாதுகாப்பு துறைக்கு தானியங்கி மின்னணு சொடுக்கிகளை உருவாகினர். 1984ல் அரசு Centre for Development of Telematics (C-DOT) என்ற உள்நாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கியது. இதன் மூலம் தொலைதொர்பு இந்தியா முழுவதும் சாத்தியம் ஆனது.

தகவல் தொழில்நுடப புரட்சி

சுதந்திர இந்தியாவின் தரவுகள் செயலாக்கம் IBM & ICL என்ற இரு பன்னாட்டு நிறுவனங்களின் மூலம் கல்விக்கூடம், பாதுகாப்புத் துறை, வணிகம் என எல்லா இடங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்தன. அப்போது அணு ஆராய்ச்சி, தேசிய கணக்கீடு போன்றவைகளுக்கு இந்தியாவிற்கு

மேம்படுத்தபட்ட கணினிகள் தேவைப்பட்டன. பெரு நிறுவனங்களின் ஒற்றைசார் போக்கை கட்டுப்படுத்த உள்நாட்டு மென்பொருள் மற்றும் வன்பொருள் தயாரிப்பை நிறுவ இந்தியா மின்னணு கழகம், கணினி பராமரிப்பு கழகம் மற்றும் மாநில மின்னனு கழகங்கள் மின்னணு துறையின் கீழ் உருவாக்கப்பட்டன.

இதன் முதல் விளைவாக 1986ல் முதல் இந்திய ரயில்வே துறை மின்னணு மயமாக்கப்பட்டது

நீல புரட்சி
மீன் மாற்று கடல் சார் பொருட்களின் உற்பத்தியை விரிவுபடுத்த 1970 ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக மீனவர்கள் மேம்பாட்டு அமைப்பு நிறுவப்பட்டது. 1985ல் நீல புரட்சி என்ற திட்டம் Dr. ஹரி மற்றும் Dr. ஹிராலால் அவர்களால் வகுக்கப்பட்டது. இதன் நோக்கம் நவ்வேன முறிகள் மீன்,

இறால், முத்து, கடற்சார் உற்பத்திகளை பெருக்குவது. இந்தியா வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் மூலம் நவீன முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் மீனவர்களுக்கு பகிரப்படுகிறன.

இவ்வாறு, சுதந்திரம் அடைந்த முதல் 75 ஆண்டுகளில் இந்தியா அறிவியல், தொழில் நுட்பம், விவசாயம் எனப் பல்வித துறைகளிலும் கவனம் செலுத்தி மேற்கொண்ட பலன்களை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நம் வருங்கால சந்ததியினர் நல் வளங்களை அனுபவிக்க, இது போன்ற அறிவியல் பங்களிப்புகள் தேவை.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling