Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Aug 16, 2022, 9 tweets

#பிரிவினை_ஆதரவாளர்கள்
கர்நாடக அரசின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்ட விளம்பரங்களில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் படங்கள் காட்டப்பட்டுகின்றன. ஆனால் நேரு படம் இடம் பெறவில்லை என்பது சர்ச்சையாகி இருக்கிறது. எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சிகளும் மாறி மாறி விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நேருவின் பெயர் இடம் பெறாததற்கு 'தேசப்பிரிவினைக்கு அவர் பொறுப்பு,' என்பதுதான் காரணம் என்று ஆளுங்கட்சி தரப்பில் சொல்லப்படுகிறது. இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மத ரீதியில் இந்தியாவை பிரித்து வைக்க வேண்டும் என்று நேருதான் முதலில் முன்மொழிந்ததாக நான் படித்த வரையில் தகவலில்லை.

அப்படி ஒரு கோரிக்கை எழுந்த போதும் கூட அதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை நேருவும் காந்தியும் முன்னெடுத்தார்கள். வேறு வழியே இல்லாது போன நிலையில்தான் அது தீர்வாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால் ஜின்னாவுக்கு முன்பே மத ரீதியாக தேசம் அமைவதை முன்னெடுத்தவர் யார் தெரியுமா?

வீர் சவர்க்கர்.
போலவே இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தம் என்று சொன்னவர் தீன் தயாள் உபாத்யாய். பிரிவினை நடந்தே தீர வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசுக்கு கடிதம் எழுதியவர் சியாமா பிரசாத் முகர்ஜி.

1937ம் ஆண்டு இந்து மகா சபா மாநாட்டில் சவர்க்கர் பேசுகிறார்:

'இந்தியா ஒருமித்த, ஒருங்கிணைந்த தேசம் கிடையாது. மாறாக, இந்தியாவில் இரண்டு முக்கிய தேசங்கள் உள்ளன: இந்துக்கள்,முஸ்லிம்கள்'
அப்போது அவர்தான் அந்த இயக்கத்தின் தலைவர். இப்படி அவர் பேசி மூன்று ஆண்டுகள் கழித்து 1940ல்தான் முஸ்லிம் லீக் லாகூரில் தனி நாடு தீர்மானத்தை முன்னெடுத்தது.

தனிநாடு கோரிக்கையை ஜின்னா முன்னெடுத்த பின்னர் கூட அந்தக் கோரிக்கையை ஆதரித்தே சவர்க்கர் இயங்கி இருக்கிறார். 1943ல் நாக்பூர் கூட்டம் ஒன்றில் பேசுகையில் அவர் கூறுகிறார்:
'எனக்கு மிஸ்டர் ஜின்னாவின் இரட்டை தேசக் கொள்கையுடன் வேறுபாடு இல்லை. இந்துக்களாகிய நாம் தனி தேசமாகவே இருக்கிறோம்;

இந்துக்களும் முஸ்லிம்களும் இரண்டு தேசத்தவர்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.'

இதுதான் சவர்க்கரின் நிலைப்பாடு. அதுவுமின்றி மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரராக பாஜக பிம்பப்படுத்தும் சவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதங்களில் ஒன்றில் பின்வருமாறு கூறுகிறார்:

'அரசுக்கு எந்த விதத்தில் தேவைப்பட்டாலும் அந்த சேவையை அளிக்க நான் தயாராக இருக்கிறேன்'
'அதிகாரத்தில் உள்ளவர்கள்தான் கருணையுடன் நடந்து கொள்ள இயலும். தாயுள்ளம் கொண்ட அரசின் கதவைத் தட்டாமல் பொறுப்பின்றி வழிதவறிய இந்த மகன் வேறெங்கே போவான்?'

இப்படி எல்லாம் பிரிட்டிஷ் அரசுக்கு சோப்புப்

போட்டவர்தான் காந்தியை விடப் பெரிய சுதந்திரப் போராட்ட வீரர் என்று போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஶ்ரீதர் சுப்ரமணியம் வெளியிட்ட நீண்ட கட்டுரையின் சாவர்க்கர் பகுதி இது

பிஜேபி முன்னிறுத்தும்
மற்ற இரு சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி

Thread 2, thread 3 என வெளியிடுகிறேன்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling