Mr.Bai🍉 Profile picture
Tech Blogger ✉️@mrbaiwriting@gmail.com #YNWA🔴 🦸‍♂️26

Aug 22, 2022, 14 tweets

#MicrosoftFreecertification
Microsoft நிறுவனத்தை பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள், அந்தளவுக்கு தங்களுடைய சேவைகளை வழங்கி கொண்டு இருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். தொழிநுட்பதுறையில் எதாவது ஒரு பணிக்கு சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவிலோ தனது பங்களிப்பை கொடுத்து

கொண்டிருக்கிறது. அதன் மூலம் பல வேலைவாய்ப்புகளும் இருக்கிறது. அந்த வேலைவாய்ப்புகளை மிக எளிதாக பெற சில Certification Courses மைக்ரோசாப்ட் நிறுவனமே வழங்குகிறது, அதில் எப்படி நாம் சேர்ந்து இலவசமாக Certification பெறுவது என்று பார்ப்போம்.

இந்த Certification இலவசமாக நீங்கள் படிப்பதற்கு முதல் தகுதி நீங்கள் ஒரு கல்லூரி மாணவராக இருக்க வேண்டும் , இல்லையென்றால் நீங்கள் பணம் கொடுத்து Certification பெற வேண்டி வரும். ஒரு 8 Courses இலவசமாக கொடுக்கிறார்கள்.அவைபற்றி கொஞ்சம் சுருக்கமாக பார்ப்போம்.

AZ-900: Microsoft Azure Fundamentals

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Cloud Services தான் இந்த Azure, இதில் நீங்கள் Cloud உடைய Basic Cloud Concepts பற்றி அறிந்து கொள்ள முடியும், இதை முடித்த பிறகு நீங்கள் Advance Levelக்கு செல்லலாம்.

DP-900: Microsoft Azure Data Fundamentals

இந்த Certification Data Science சம்மந்தப்பட்டது, ஒரு Data பெற்று அதை Organize செய்து நமக்கு தேவையான தரவுகளை எப்படி பெறுவது என்று அடிப்படையாக இதில் தெரிந்துகொள்ளலாம்.

AI-900: Microsoft Azure AI Fundamentals
இந்த Certification மூலமாக

Cloud Serviceல எப்படி Artificial Intelligence மற்றும் Machine Learning பயன்படுத்துவது என்று அடிப்படையாக கற்று கொடுப்பார்கள்.

MS-900: Microsoft 365 Fundamentals
இதில் நாம் அதிகமா பயன்படுத்தும் Microsoft Excel,Word,Powerpoint, பற்றி கற்றுக்கொடுப்பார்கள்.

மேல சொன்னது போல இன்னும் மூன்று Certification courses இருக்கு அதையும் நீங்கள் மைக்ரோசாப்ட்ன் இணைய பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளுங்கள், அடுத்து எப்படி இதில் Register செய்வது என்று பார்ப்போம்.

முதலில் கீழ் உள்ள இணைய முகவரி மூலமா அந்த பக்கத்திற்கு செல்லுங்கள் சென்றவுடன் Sign in

செய்யுங்கள் ஏற்கனவே Microsoft Account வைத்து இருப்பவர்கள் அதை கொண்டே உள்ள செல்லலாம் அல்லது புதிதாக ஒரு கணக்கை துவங்கி உள்ள செல்லுங்கள் சென்ற உடன் உங்களுடைய சில விபரங்கள் கேட்கும் உதாரணமாக உங்களுடைய பெயர், கல்லூரி பெயர் மற்றும் நீங்கள் கல்லூரி மானவர்தான் என்பதை உறுதி செய்ய உங்கள்

கல்லூரியில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உங்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரி இதையெல்லாம் நீங்கள் கொடுத்த பிறகு, உங்களுக்கு வரிசையாக மேல சொன்ன அனைத்து Courseகளும் இருக்கும்.

அதில் உங்களுக்கு எது தேவையோ அதை நீங்கள் தேர்வு செய்து படித்து, தேர்வு எழுதி Certification பெறலாம்.

உதாரணமாக நீங்கள் Microsoft Azure AI Fundamentals தேர்வு செய்துள்ளீர்கள் என்று வைத்து கொள்வோம் அதன் பிறகு உங்களுக்கு Learn, Prepare, Certify என்று மூன்று பிரிவுகள் இருக்கும்.அதில் முதலில் Learn கீழே உள்ள Explore Option உள்ளே செல்லுங்கள் பிறகு அதில் நீங்கள் படிப்பதற்கு Modules

எல்லாம் வீடியோ வடிவில் இருக்கும் அதை கொண்டு நீங்கள் படித்து தேர்வை எழுதி Certification பெற்று உங்கள் LinkedIn பக்கத்தை அலங்கரியுங்கள்.
மேல குறிப்பிட்டுள்ள Courses கல்லூரி மாணவர்களுக்கு மட்டும்தான் முழுவதும் இலவசம், மற்றவர்கள் படிக்க விரும்பினால் பணம் கொடுத்து தேர்வு

எழுதி Certification பெறலாம்.

மேல பதிவில் குறிப்பிட்டது போல் Microsoftல் எப்படி இலவசமாக Certificate பெறுவது என்பதை வீடியோ வடிவில் அறிந்து கொள்ள கீழ் உள்ள YouTube வீடியோவை காணுங்கள்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling