கலைஞரின் ஏழ்பரியோன் Profile picture
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥

Aug 28, 2022, 7 tweets

எழுதாத பேனாவிற்கு 80 கோடியில் சிலை அவசியமா?
- எடப்பாடி பழனிசாமி கேள்வி

இந்த பையனை நினைவிருக்கிறதா? பழனிசாமி!
இந்த பையன் பேரு பொன்.நாவரசு, அண்ணாமலை பல்கலைகழகத்தில் மருத்துவப் படிப்பில் முதலாம் ஆண்டு தன் லட்சியப் பயணத்தை தொடர்ந்த ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவன்.

இவனுடைய அப்பா சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய ப.க.பொன்னுசாமி! Mr.பழனிசாமி நீங்கள் கொண்டு வந்த நீட் தேர்வுகள் இல்லாத காலகட்டம் அது! ஆம், தலைவர் கலைஞரின் ஆட்சி..தமிழர்களின் பொற்கால ஆட்சி நடந்து கொண்டிருந்த காலகட்டமும் கூட!! அப்போது இரண்டாம் ஆண்டு மருத்துவப் படிப்பு

படித்துக் கொண்டிருந்த ஜான் டேவிட் என்பவன் தன்னுடைய ஓரினச்சேர்க்கைக்கு (Homosexual) இணங்க மறுத்ததால் நாவரசுவை கொலை செய்து உடல்பாகங்களை ஆற்றில் வீசினான்.. தமிழகமே அதிர்ந்த அந்த கொலை சம்பவம் தலைவர் கலைஞரின் காதுக்கு சென்றது. கொதித்தெழுந்த தமிழ்தாயின் தலைமகனான கலைஞர் உடனே அமைச்சரவையை

கூட்டினார். நாவரசுவின் தந்தையான துணைவேந்தர் ப.க.பொன்னுசாமியை அழைத்து ஆறுதல் தெரிவித்தார்.. 06-11-1996ல் நாவரசு கொலை செய்யப்பட்ட நாள் அன்று, அப்போதைய எதிர்கட்சித் தலைவரான உங்க தாய் ஜெயா கொடைநாட்டில் ஒய்வு எடுத்துக்கொண்டிருந்த காலமும் கூட, இதை கண்ட கலைஞரின் கண்களில் கண்ணீர்

ஆறாய் பெருக்கெடுத்தது. கலைஞரின் உதவியாளர் அய்யா சண்முகநாதன் ஏன், தலைவரே அழுகிறீர்கள் என்று கேட்ட போது கலைஞர் சொன்ன பதில் " ஒரு மிகப்பெரிய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மகனுக்கே இந்த நிலையென்றால், பாமரனின் குழந்தை கல்லூரிக்கு வரும்போது என்னை நிலைமை என்று யோசித்துப் பார்க்கவே குலை

நடுங்குகிறது என பதிலளித்தார். அன்று இரவே தலைவர் கலைஞர் இதை தடுக்க சட்டம் ஒன்று கொண்டுவர எண்ணிணார், அதை முடித்தும் கொடுத்தார்.ஆம், அந்த சட்டம் தான் என்னைப் போன்ற எத்தனையோ "அன்றாடம் காய்ச்சியின்"மகன்கள் படித்து முடிக்க காரணமாய் இருந்தது அந்த சட்டம் யாது என்று தெரியுமா Mr.பழனிசாமி?

1997-ல் தலைவர் கலைஞரால் கொண்டுவரப்பட்ட "பகடிவதை தடுப்புச் சட்டம்" (Tamilnadu Prohibition of Ragging act) இந்தியாவிலேயே இதை கொண்டு வந்து சாதித்தது "கலைஞர் பேனா" தான் திரு.பழனிச்சாமி அவர்களே!!

நீ படிச்ச ஸ்கூல்ல கலைஞர் தான் டா கடவுள் வாழ்த்தே!! 💥💥🖤❤️

#KalaignarForever

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling