அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Aug 30, 2022, 7 tweets

#வராகஜெயந்தி #varahajayanti இன்று வராக ஜெயந்தி. மகா விஷ்ணுவின் ஓர் அவதாரம் வராகம் (பன்றி). பூமியைக் கைப்பற்றிய இரணியனின் தம்பி இரண்யாட்சன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். தன் பக்தர்களையும் தேவர்களையும் காக்கவும் பூமா தேவியை மீட்கவும் பிரம்மாவின் நாசித் துவாரத்திலிருந்து, வெள்ளைப்

பன்றியின் உருவில் தோன்றினார் மகா விஷ்ணு. முதலில் கட்டை விரல் அளவாக இருந்தவர், அதன் பின் ஒரு யானையின் அளவாக வளர்ந்தார். அப்படியே மேலும் மேலும் மேகமண்டலம் வரை வராஹ மூர்த்தி வளர்ந்தார். தன் இரு கொம்புகளால் கடலுக்கு அடியில் இருந்த பூமாதேவியைத் தூக்கி, உலகத்தை காப்பாற்றினார். ஆத்திரம்

அடைந்து, வராஹ மூர்த்தியிடமே போர் புரியத் துணிந்த இரணியாட்சனை அழித்து தர்மத்தை நிலை நாட்டினார். இங்கே அரக்கன் என்பது மனிதனின் தீய குணங்களைக் குறிக்கிறது. பூமி என்பது மனிதனின் உடலாகும். தீய குணங்களுக்கு ஆட்பட்ட இந்த உடல் மிகவும் தாழ்மையான நிலைக்குச் சென்றுவிடுகிறது. இறைவனின் கருணை

இன்றி நம்மால் உயர்ந்த நிலையை அடைய முடியாது. ஆகவே #வராஹஜயந்தி ஆன இன்று தீய பழக்கங்களில் இருந்தும் தீய மனிதர்களின் சூழ்ச்சியில் இருந்தும் காப்பாற்று என்று வேண்டிக்கொள்ள, நிச்சயம் அருள் புரிவார் வராஹ மூர்த்தி. திருப்பதி தல புராணத்தில், திருமலை வராக ஸ்தலம் என கூறப்பட்டுள்ளது. இதனால்

தான், திருப்பதியில் ஏழுமலையானுக்கு முன் வராகருக்கு முதல் மரியாதை செலுத்தப்படுகிறது. பூஜைகள் முதல் நைவேத்தியம் வரை வராகருக்குத் தான் முதலில் வழங்கப்படுகிறது. இன்றைய தினம் வராகர் கோயிலில் கலச பூஜை, கலசாபிஷேகம் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

வராஹ ஸ்லோகம்
ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
பொருள்: சுத்த ஸ்படிகம் போல நிர்மலமானவரே, பூர்ணசந்திரனை போல் ஒளிபடைத்தவரே, வராஹ

மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம்.
கொடிய நோய்கள் தீர, பகை அழிய, தோஷங்கள் தொலைய தினமும் இந்த ஸ்லோகத்தை படிக்கலாம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling