எவ்வளவு தூரம் சென்றாய் தலைவா?
இன்று ஏதோ ஆசிரியர் தினமாம், என் ஆசிரியரை இழந்து இன்றோடு நான்கு வருடங்கள் ஆகிறது..என் ஆசிரியர் எப்பேர்பட்டவர் தெரியுமா? என் வாழ்க்கையை நான் சீர்படுத்தும் முன்னால் செதுக்கியவர் தோழர்களே!! அங்கன் வாடி போனேன் என் மெல்லியப்பாதமும், அடிமாடாய் உழைக்கும்
என் தாயின் இடுப்பும் நோகுமென்று உள்ளூரிலேயே அமைத்துக் கொடுத்தவர் என் ஆசிரியர்.. நான் தொடக்கப்பள்ளி போன போது எனக்கு காலணிகளை இலவசமாக கொடுத்தவர் என் ஆசிரியர். நான் நடுநிலைப்பள்ளியில் அடியெடுத்து வைக்கும் போது எனக்கு இலவச பஸ்பாஸை வழங்கியவர் என் ஆசிரியர்.. நான் உயர்கல்வியை நெருங்கும்
எனக்கு இலவச மிதிவண்டியை கொடுத்தவர் என் ஆசிரியர்.. சேரியில் படிப்பறிவு இல்லாத ஒரு தம்பதிக்கு பிறந்த என்னை கல்லூரிக்கு அனுப்பும் போது பார்ப்பணக் கூட்டம் என்னை சூழாதவாறு என் வாழ்க்கையை அமைத்துக்கொடுத்த ஆசிரியர் என் ஆசான்..ஆங்கிலத்தை பார்த்து நான் பயந்த போது செல்வமே! அழாதே... கண்ணை
துடைத்துக் கொள் நானிருக்கிறேன் என்று என்னை ஆரவாரம் செய்தவர் என் ஆசிரியர்..இதையெல்லாம் செய்த என் ஆசிரியர் நான் முதல்தலைமுறை பட்டதாரி என்னும் அந்தஸ்தை பார்க்காமலேயே சென்றுவிட்டார்.. எனக்கு வயது 21 என் ஆசிரியருக்கு வயது நான்கு! ஆச்சிரியக்குறியை அடுக்க வேண்டாம் தோழர்களே. கூனிக்குறுகி
கிடந்த கூட்டத்தில் பிறந்த என்னை போன்ற எத்தனையோ பிள்ளைகளை வளர்த்து இந்த தமிழ் சமூகத்திற்கு அயராது உழைத்தது போதும் என்ற மனநிறைவோடு சென்ற என் ஆசிரியர் யார் தெரியுமா? தலைவர் கலைஞர் தான் ஆசான்.. எனக்கான சுயம்,மனிதம்,கடவுள் இந்த மூன்றையும் வழங்கியவர் தான் தலைவர் கலைஞர். அந்த ஆண்டவனை
நேரில் பார்த்து என் பிறவியின் பலனை அடைந்தேன்! ஏய்,
வங்க கடலே? கொஞ்சம் காத்திரு.. என்னை ஆளாக்கி விட்ட என் ஆசான் உறங்குகிறார்! முடிந்தால் அவரிடம் போய் சொல், மேடையில் சரிநிகர் நாற்காலி போடப்படுகிறது என்று"
#Teachers_Day #OurTeacher_OurLeader
#KalaignarForever 🖤❤️💥💥💥
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.