அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Sep 6, 2022, 7 tweets

#நவராத்திரி_ஸ்பெஷல்
ஒரு தெரு முழுதும் கொலு பொம்மை தயாரிக்கும் வீடுகள் உள்ளன. ஆச்சரியமாக இருக்கிறதா? அஸ்தகிரி என்று அந்த வீதிக்கு பெயர். பொம்மை கார தெரு எனில் யாரும் சின்ன காஞ்சிபுரத்தில் வழி காட்டுவார்கள். குறுகலான வீதி. இரண்டு புறங்களிலும் வீதிகளில் வீட்டு வாசலில் எல்லா

பொம்மைகளும் மாதிரி காட்சிக்கு அடுக்கப்பட்டு இருக்கிறது. விசாரித்தால் உள்ளே போங்கள் எல்லா பொம்மையும் இருக்கிறது என அனுப்பி வைக்கிறார்கள். சில இல்லங்களில் வீட்டின் உள்ளே, சில இல்லங்களில் வீட்டின் மாடி அறையில், என அடுக்கப் பட்டிருக்கும் அட்டை பெட்டிகள் ஏராளம்! காணக் கிடைக்காத செட்

பொம்மைகள் எல்லாம் அங்கு கிடைக்கும். பேப்பர் மேஷே பொம்மைகள் அளவில் பெரியதாகவும் நல்ல பினிஷிங் உடனும் கிடைக்கின்றன. விலை மிக மிக சகாயம். எந்த செட் கேட்டாலும் இருந்தால் கொடுக்கிறார்கள், இல்லையென்றால் இருக்கும் வீட்டிற்கு சரியாக வழி காட்டுகிறார்கள். இந்த தெரு நூறாண்டுகளுக்கு மேலாக

இந்த தொழிலை மேற்கொண்டு வருகிறது. குலாளர்கள் வம்சம் பெரும்பான்மை. இப்போது தொழில் கற்றுக்கொண்ட பலரும் இதை மேற்கொள்ள துவங்கியுள்ளனர். பொம்மைகளை மடியில் சாய்த்து நாகாஸ் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் ஒரு குழந்தையை போல அதனை கைகளில் பிடித்துள்ளார்.
வாய்ப்புள்ளவர்கள், பொம்மை பிரியர்கள்,

அவசியம் தரிசிக்க வேண்டிய புனித பூமி சின்ன காஞ்சிபுரம் பொம்மைகார தெரு. இராமாயணம், மகாபாரதம், பாகவதம், போன்ற புராண செட் பொம்மைகள் கண்கொள்ளா காட்சி! கிரிக்கெட், கல்யாணம், கடைவீதி, டான்ஸ் பொம்மைகள், தேசத் தலைவர்கள் போன்ற பொம்மைகளும் உள்ளன. கரோனாவினால் 2 வருடமாக தொழில் முடிங்கியுள்ளது

கொலு வைப்பார்கள் இவர்களுக்கு இந்த வருடம் ஆதரவு தரலாம். ரொம்ப நொடித்துப் போயிருக்கிறார்கள். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்ட்ரா உள்ளீட்ட பல மாநிலங்களுக்கும் தேவைப்படும் கொலு பொம்மைகள் இங்கு இருந்துதான் செல்கின்றன. கனடா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

நம் பாரம்பரியத்தை காப்போம். கலைஞர்களுக்கும் உதவி செய்வோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling