எந்த ஒரு கொம்பனும் என்னை விட தமிழ்பற்று கொண்டவன் இல்லை - சீமான்!!
Mr.சீமான் இந்த படம் நினைவில் இருக்கிறாதா? உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் நினைவுப்படம்... பேரலை நெருங்கும் போதும் வள்ளுவன் மூன்று விரல்களை காட்டி கம்பீரமாக நிற்கின்றான்! கீழே! "பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்"
என்று எழுதப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பல கொம்பன்களின் மூத்த கொம்பன் என் தலைவன் கலைஞர் என்பதை மறந்திட வேண்டாம்! திருக்குறளை உன்னைப் போன்ற பொய்களை வாரி தூற்றும் கழிசடைகளுக்காகவே அவர் எல்லாப் பேருந்துகளிலும் "யாகாவாராயினும் நாகாக்க " எனும் உலகின் தாரக மந்திரத்தை பிரசுரிப்பு செய்ய
தொடங்கினார். அய்யாகோ! சீமானே! மறந்தாயோ அந்த தமிழ்தாயின் தலைமகனை, கலைஞர் தான் "விதவை" என்னும் வார்த்தையில் கூட பொட்டு வைக்க முடியவில்லை எனவே "கைம்பெண்" என்ற சொல்லாடலை பயன்படுத்த அரசாணையை வெளியிட்டார்!!
அய்யகோ சீமானே! மறந்தாயோ அந்த மாபுலவனை? நொண்டி, முடவன் என்று கேவலமாக பேசிய
சமூகத்தை அவர்களை "மாற்றுதிறனாளி" என்று மாற்றிக்காட்டியவர் தானே தலைவர் கலைஞர்..
அய்யகோ சீமானே! உஷ்,கோத்தி,அரவாணி என்று அருவருப்பாக அழைத்த சமூதாயத்தை "திருநங்கை" என்று அழைக்க ஆணையிட்ட கொம்பனால்லவோ கலைஞர்..
உலக வரலாற்றில் முதல்முறையாக மொழி சார் மாநாடு நடித்தியவர் தலைவர்
கலைஞர் அவர்கள்.. "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" எனும் தமிழ்தாய் வாழ்த்தை மாநில கல்விக்கூடங்களில் ஒலிக்கச் செய்த கடவுளல்லவா கலைஞர்.. 133 அடி உயரத்தில் வள்ளுவனுக்கு சிலை வைத்த வல்லல்லாவா கலைஞர், வள்ளுவர் கோட்டத்தில் கல்தேர் அமைத்த கடமையாளன் அல்லவா கலைஞர்..
அரசு அலுவலகங்களில் "வாழ்க தமிழ்" என்ற வாசகத்தை வைத்த ஆண்டவன் அல்லவா தலைவர் கலைஞர்.. இந்திய திரைத்துறை வரலாற்றில் மிக நீண்ட வசனத்தை எழுதிய நிகழ்கால தொல்காப்பியர் தலைவர் கலைஞர் அவர்களே!! இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் களம் கண்டு வெற்றி பெற்ற சிங்கம் தான் தலைவர் கலைஞர் அவர்கள்!
நம்மையெல்லாம் படைத்தவள் அன்னை "பராசக்தி" ஆனால், அந்த பராசக்தியையே படைத்தவர் தலைவர் கலைஞர் தான் என்பதில் கருத்துவேறுபாடே இருக்கக்கூடாது.. இத்தகையச் மொழிபற்று சிறப்பு கொண்ட ஒரு தலைவன் இனிமேலும் காணுவது அரிதிலும் அரிது.. .மானுட உலகில் மனிதனாக பிறப்பது அரிது? ஆனால், தலைவர் கலைஞராக
பிறப்பது பேரரிது.. மற்றமொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியாம் தமிழை உலக அரங்கில் தலைவர் கலைஞரைத் தவிர எந்த கொம்பனும் முன்னிறுத்தியது இல்லை, இருக்கப்போவதுமில்லை Mr @SeemanOfficial அவர்களே!!
மொழியால் தமிழன்!!
இனத்தால் திராவிடன்!!!
வாழ்க கலைஞர் 💥💥🖤❤️
#KalaignarForever 🙏🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.