90s kids க்கு bourbon, little hearts மாதிரி Generation Alpha க்கு Oreo. இன்றைய தேதிக்கு மிக பிரபலமான biscuit Oreo. கண்டிப்பா எல்லாரும் வாங்கி, 'ட்விஸ்ட் பண்ணுங்க... lick பண்ணுங்க... dunk பண்ணுங்க... சாப்பிடுங்க... என்று சாப்பிட்டு இருப்போம் (குழந்தைக்காகவாது...)
எல்லோருக்கும் சென்று சேர வேண்டும் என Oreo வில் எந்த animal product உம் சேர்ப்பதில்லை முழுக்க முழுக்க vegan பிஸ்கட். அதேபோல diet-friendly! கலோரி கணக்கு மிக குறைவு. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் ட்விஸ்ட் பண்ணி, lick பண்ணி, dunk பண்ணி சாப்பிடலாம்.
எது பிரபலமாக இருந்தாலும், அதைப்பற்றி controversial ஆக விஷயங்கள் வருவது வாடிக்கையானது தானே அந்த வகையில் Oreo cookies பற்றி ஒரு சுவாரஸ்யமான conspiracy theory படித்தேன்.
Oreo biscuit ஐ பார்த்ததும் எல்லார் கண்களும் முதலில் செல்வது அந்த பிஸ்கட் மேல் இருக்கும் டிசைன்க்கு தான்.
American architectural critic Paul Goldberger, Oreo biscuit ன் டிசைனை கண்டு சிலாகிக்கிறார். "யாருக்கு இப்படி ஒரு அரிய சிந்தனை உதித்தது என்று தெரியவில்லை. ஆனால் இந்த டிசைன் ஒரு அற்புதமான நுட்பமான டிசைன்.
சாப்பிட தானே போறாங்க அதுக்கு எதுக்கு இவ்ளோ? சும்மா வட்டமா இருந்தா பத்தாதா? என்றில்லாமல் ஒரு ornament மாதிரி ஒரு celebration மாதிரி அட்டகாசமா இருக்கு. அந்த காலத்து கட்டிடம் எல்லாம் நுட்பமான வேலைப்பாடுகளோடு சிற்பங்களோடு அமைத்திருப்பார்கள்.
அந்த மாதிரி இந்த cookie யை செதுக்கி இருக்கிறார்கள்" என்று புளங்காகிதப்படுகிறார்.
இப்படி எல்லார் கண்களையும் கவர்ந்த அந்த டிசைனுக்கு நம்ம conspiracy theorist ஏதாவது ஒரு கதை வச்சு இருப்பாங்களே... இருக்கு பெரிய கதை இருக்கு...
Oreo's sacred geometry:
Oreo biscuit இல் இருக்கும் symbols ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒரு பொருள் இருக்கிறதாம். இரண்டு bar உள்ள cross க்கு Cross of Lorraine என்று பெயர். இது Knights Templar களின் சின்னம்.
கிறிஸ்தவ மதத்தை பரப்ப புனித போர்கள் நிகழ்த்தியவர்களே இந்த Knights Templar (இவர்கள் யார்? #அதை_நான்_அப்புறமா_சொல்றேன்).
அதே போல Oreo என்னும் பெயரை சுற்றி பூ பூவா four-leaf clover இருக்கு இல்லையா? அது Cross Pattée! அதுவும் Knights Templar களின் சின்னம்.
Oreo என்பதற்கான பெயர் காரணம் யாருக்கும் தெரியாது. சிலர் ஆரம்பத்தில் இந்த பிஸ்கட்கள் தங்க நிற பெட்டியில் இருந்தது. தங்கத்திற்கு ஃப்ரெஞ்ச் சொல் doré அதிலிருந்து Oreo வந்திருக்க கூடும் என்கிறார்கள்.
சிலர் cream இல் இருக்கும் 're' யை எடுத்து chocolate என்னும் சொல்லில் இருக்கும் இரண்டு O க்கு நடுவில் வைத்தால் வரும் சொல் தான் Oreo என்கிறார்கள்.
சிலர் Or என்றால் Hebrew மொழியில் வெளிச்சம் அல்லது அதிகாலை. eo என்றால் கிரேக்க மொழியில் மாலை/சூரியன் மறையும் நேரம்.
வெள்ளை கிரீம் வெளிச்சத்தையும் dark biscuit இரவையும் குறிக்கிறது என்கிறார்கள்.
அடுத்து Templars ஐ watchers என்பார்கள். அதற்கு கிரேக்க சொல் egrḗgoros. இதிலிருந்தும் Oreo வந்து இருக்க கூடும். அதாவது Oreo சாப்பிடுபவர்கள் விழிப்பு நிலையை அடைகிறார்களாம்.
Oreo வை ஏன் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள் என்றால் அதில் எதோ ஒரு addictive பொருளை சேர்க்கிறார்கள் என்கிறார்கள். ஆனா Oreo biscuit ன் target குழந்தைகள் மட்டுமல்ல எல்லா மக்களுமே தான்.
அதில் ஏதோ கலந்து நம்மை அடிமைப்படுத்துவதற்கு தயார் செய்கிறார்களாம் psychic programming or mind control.
பிஸ்கட்டின் நடு பகுதியை சுற்றி உள்ள புள்ளிகளை இணைத்தால் 5 முனை நட்சத்திரம் வருகிறதாம் அது Order of the Eastern Star ஐ குறிக்கிறதாம். இது Freemason னின் மற்றொரு குழு.
இப்படி பல Freemasonry symbol இருப்பதால் இதை டிசைன் செய்தவர் ஒரு Freemason ஆக இருக்க வேண்டும் என்கிறார்கள். (Freemason என்பவர்கள் யார்? #அதை_நான்_அப்புறமா_சொல்றேன்)
Freemasons மற்றும் Knights Templar இவங்க ரெண்டு பேரும் கூட்டா சேர்ந்து இந்த Oreo biscuit மூலமா இந்த உலகையே ஆளப்போகிறார்களாம்.
Freemasonry, Order of Solomon’s Temple (Knights Templar), Illuminati, New World Order இவை எல்லாமே secretive, all-powerful organization
(அப்படினு சொல்லிக்கறாங்க!). இவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து ரகசியமாக இந்த உலகை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் என்று பல நூற்றாண்டுகளாக கிசுகிசுக்கப்படுகிறது.
இவர்கள் ரகசியமாக இணைந்து செயல்பட என்ன காரணம்?
சிலர் யூதர்கள், யூத மதத்தை தவிர்த்து மற்ற மதங்களை அழிக்க இப்படி ரகசியமாக திட்டம் தீட்டுகிறார்கள் என்கிறார்கள். சிலர் இவர்கள் எல்லாம் சாத்தானை வழிபடுபவர்கள் பைபிளில் சொல்லப்படும் Antichrist இன் ஆட்சியை இந்த உலகத்தில் கொண்டு வர சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்கிறார்கள்.
சிலர் Communist கள் உலகத்தை takeover செய்ய இப்படி ரகசியமாக இயங்குகிறார்கள் என்கிறார்கள். எல்லாமே அடிப்படை ஆதாரமற்றவை.
cookies/biscuits மேல அலங்காரமா எதாவது டிசைன் போடுவது docking & embossing என்றழைக்கப்படுகிறது. docking என்பது மாவை bake பண்ணும்போது அது உப்பிவிடாமல் இருக்க நிறைய துளைகளை போடுவது. எதாவது டிசைனை மேல அச்சிடுவது embossing எனப்படுகிறது.
19 ஆம் நூற்றாண்டின் தொழிற் புரட்சியின் போது, பிஸ்கட்கள் தொழிற்சாலையில் mass production செய்யப்பட்டது. அப்போது docking & embossing இரண்டையும் இணைத்து ஒரு automated production line ஐ Thomas Vicars என்னும் ஒரே பெயரைக் கொண்ட இருவர் உருவாக்கினார்கள்.
அதன் பின் அதில் நிறைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வந்தன.
1908 இல் Sunshine Biscuits என்னும் நிறுவனம் Hydrox என்னும் Biscuit ஐ அறிமுகப்படுத்தியது. அதில் நல்ல அழகான நுட்பமான டிசைன் இருந்தது. 4 வருஷம் கழிச்சு அதை காப்பியடிச்சு National Biscuit Company (Nabisco) உருவாக்கியதுதான் Oreo.
Oreo தான் original, Hydrox தான் copy என்று மக்கள் நம்பும் அளவிற்கு தற்போது Oreo வின் புகழ் இருக்கிறது.
Oreo எடுத்ததுமே தற்போது இருக்கும் டிசைனில் வரவில்லை. இப்போது இருக்கும் டிசைன் 1952 இல் வந்தது அதற்கு முன் 2 வேறு வேறு டிசைன்களில் Oreo வந்திருக்கிறது.
இந்த oreo design conspiracy பிரபலமாக தொடங்கியபோது அதை உருவாக்கிய William A. Turnier உயிரோடு இல்லை. ஆகையால் அவர் என்ன ஐடியாவில் இந்த டிசைனை போட்டார் என்று தெரியவில்லை. (ஆளை பார்த்தா ஒரு மாதிரி தான் இருக்காரு...)
அவரது மகன் Bill Turnier விசாரிக்கும்போது, அப்பா Mason உறுப்பினர் இல்லை ஆனால் தாத்தா Mason உறுப்பினராம். இருந்தபோதிலும் அப்பாவிற்கு இதில் எவ்விதமான ஆர்வமும் இருந்ததில்லையாம். ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் அப்படின்ற மாதிரி ஒரு விளக்கம்!
ஒரு பக்கம் இப்படி conspiracy theorist, Oreo சாப்பிடாதீங்க சாப்பிடாதீங்க என்று கூவினாலும் மறுபக்கம் விற்பனை ஜோராக நடந்து கொண்டு இருக்கிறது. Nabisco வும் எவனோ என்னமோ பினாத்திக்கிட்டு போறான் நமக்கு கல்லா கட்டுனா போதும் என்று கமுக்கமா இருக்கு.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.