Swathika Profile picture
Reader, Atheist, Book Indexer, Digital creator, conflict averse, Insta @swathikascribbles, https://t.co/OAOMlXE3ly, https://t.co/eJpVe1KKpt
15 subscribers
Dec 27, 2024 4 tweets 1 min read
இன்னிய தேதிக்கு ஒரு ஆளு அறிவான ஆளுன்னு நாம எதை வச்சு எடைபோடுவோம்? உலக அறிவு, scientific மற்றும் technological அறிவு, அரசியல், etc இதை பற்றி எல்லாம் ஒருவருக்கு இருக்கும் knowledge ஐ வைத்து அடேங்கப்பா அவர் பெரிய புத்திசாலி என சொல்லுவோம்... அப்படியே rewind பண்ணி பின்னாடி போவோம். இதை பற்றி எல்லாம் தெரியாதபோது, மக்கள் ஒருவரை எதன் அடிப்படையில் அறிவாளி, எல்லாம் தெரிந்தவர் என சொல்லுவார்கள்? யாரிடம் நிறைய மூட நம்பிக்கைகள் உண்டோ... யாருக்கு சடங்கு சம்பிரதாயங்கள் நல்லா தெரியுமோ... யாரு கதைகள் சொல்வார்களோ... அவர்கள் தான் அன்னிய தேதிக்கு அறிவாளி.
Oct 23, 2024 18 tweets 2 min read
'தமிழ்' பிக் பாஸ் மெதுவாக toxic ஆ மாறிக்கொண்டே வருகிறது. ஆரம்பத்தில் இது social experiment. வீட்டுக்குள் சின்ன சின்ன சவால்கள், ஒன்றாக வாழ்வதால் ஏற்படும் மோதல்கள் என நார்மல் ஆ இருந்தது. தினசரி சவால்கள் அதை எப்படி போட்டியாளர்கள் எதிர்கொள்கிறார்கள். அதில் எப்படி அவர்களது moral value வெளிப்படுகிறது. சவால்களை நேர்மையுடனும், மனிதாபிமானத்துடன் எதிர்கொள்பவர்களை மக்கள் ரசித்தார்கள் அதில் மக்களுக்கும் பாடம் இருந்தது.
Oct 16, 2024 19 tweets 3 min read
அன்றைய கால school இன்றைய கால ஸ்கூல் மாதிரி கிடையாது. அன்று இருக்கும் தகவல்களை எல்லாம் எழுதி சேமித்து வைக்க record create பண்ணுவதற்கு எழுத படிக்க சொல்லி தருவார்கள். அவர்கள் பிரதி எடுக்கும்போது படித்து கொள்வதுதான். மற்றபடி உனக்கு science சொல்லி தரேன் நீ physics குரூப் அப்படி கிடையாது. இந்த வகையில் பார்க்கும்போது சுமேரியாவில் தான் முதல் பள்ளி இருந்தது அதன் பெயர் Edubbas (3500 BCE) இங்கு எழுத, படிக்க, வரவு செலவு பார்க்க கணக்கு சொல்லித்தரப்படும்.
Oct 12, 2024 14 tweets 2 min read
நேற்று நடந்த விமான சம்பவத்தால் பலர் Captain Sully யை நினைவு கூறுகிறார்கள். நிஜ வாழ்வில் Sully நடத்திய 'Miracle on the Hudson river' எப்போது நினைத்தாலும் goosebumps incident. ஏன் goosebumps? ஒரு retired air force pilot, flight take off ஆகி 97 sec ல, ஒன்னு இல்ல, 2 என்ஜினும் அவுட். இப்படி நடக்கிறதுக்கு வாய்ப்பே இல்ல. 'அதெப்டிங்க ஒரே நேரத்துல 2 என்ஜினும் போகும்'ன்னு, இந்த மாதிரி சம்பவத்திற்கு எந்த training ம் குடுத்து இல்லை. Sully, 20000 மணி நேரம் flight ஓட்டிய அனுபவஸ்தர். ஆனா, ஒரு என்ஜின் fail ஆனா கூட எப்படி இருக்கும்ன்னு அவரு பாத்தது இல்ல.
Aug 1, 2024 6 tweets 1 min read
Vikings: Valhalla (Netflix ) series, வரலாற்றை சுவாரசியத்திற்காக கொஞ்சம் மாத்தி எடுத்து இருக்கறாங்க அது இப்போ முக்கியம் இல்ல. அதுல வர்ற King Canute தான் இங்கிலாந்தின் முதல் Viking ராஜா. Image அவரை Scandinavia ல "Knut the Great" ன்னு கூப்பிட்டாலும், இங்கிலாந்தில் அவரை நக்கலடிக்க ஒரு கதை சொல்லுவாங்க. ஒருமுறை Canute கடலுக்கு போய் அலைகளை பார்த்து, "நில்! நில்!" ன்னு கத்துனாறாம். Image
Jul 27, 2024 5 tweets 1 min read
4 ஆம் நூற்றாண்டு பொ.ஆ.மு வில் Spartan கள் எழுச்சி அதிகமாக இருந்தது. அப்போது Spartan களை எதிர்கொள்ள, கிரேக்க நாடான தீப்ஸ் ல் Gorgidas என்னும் தலைவரால் உண்டாக்கப்பட்ட ஒரு படை தான் "The Sacred Band of Thebes." இந்த படையில் 300 வீரமிக்க இளைஞர்கள் இருந்தார்கள். Image அந்த 300 பேரும் காதல் ஜோடிகள். அதாவது, 150 காதல் ஜோடிகளை கொண்ட படை இந்த Sacred Band. அன்றைய Theban army யில் இது ஒரு elite unit. நாட்டுக்காக சண்டையிடுவதை விட தனது துணையின் உயிருக்காக சண்டையிடும்போது வீரம் துணிச்சல் அதிகரிக்கும் என Gorgidas நினைத்தார். Image
Jan 29, 2024 19 tweets 3 min read
ஆல்பா ஆண் என்ற சிந்தனை ஆரம்பகால சிந்தனை. வனவிலங்கு ஆய்வாளர்கள் ஆரம்பத்தில் ஓநாய்களில் ஆல்பா ஆண் என்னும் தலைவன் இருக்கும் அதை பின்பற்றியே அதன் கூட்டம் இயங்கும். அந்த ஆல்பா ஓநாய் முரட்டுத்தனமானது, மற்ற ஆண் ஓநாய்களிடம் சண்டையிட்டு அதன் இடத்தை தக்க வைத்து கொள்ளும், தனது அதிகாரத்தை மற்ற ஓநாய்களின் மேல் செலுத்தும் என்று சொன்னார்கள். ஆனால் இந்த கருத்து தவறானது என தற்போதைய வனவிலங்கு ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். வனவிலங்கு ஆய்வாளர்கள் இப்போது ஆல்பா என்ற சொல்லை பயன்படுத்துவதில்லை.
Dec 28, 2023 32 tweets 4 min read
December 8 தேவமாதா கருத்தரித்த நாள் என காலண்டர்ல போட்டு இருக்காங்க இல்லையா அது இயேசுவை மாதா கருத்தரித்த நாள் இல்ல. மாறாக மாதாவை அவங்க அம்மா Anne கருத்தரித்த நாள். அதாவது தேவமாதா கருவாக உருவான நாள். 1/21 இயேசு கிறிஸ்து கன்னி மரியாளுக்கு பிறந்தார் என்பது ரொம்பவே முக்கியமான கிறிஸ்தவ கோட்பாடு. அது ஒரு அதிசயம், prophecy என்பதை எல்லாம் தாண்டி ஆதி பாவத்தினால் தீண்டப்படாத ஒரு நபர் இயேசு என்பதை வலியுறுத்துவதற்கு இந்த Virgin Birth மிகவும் அவசியமாக இருக்கிறது. 2/21
Dec 8, 2023 10 tweets 1 min read
Social constructs நமது மூளையில் ஆழமாக பதிந்து இருக்கும். நம்மை அறியாமல் சமூகம் விதித்திருக்கும் வரைமுறைக்குள் தான் இயங்கி கொண்டிருப்போம். அது குறித்தான விழிப்பு நமக்கு இருக்காது. உதாரணமாக நமக்கு கீழ் வேலை செய்பவர் முக்கியமாக வீட்டு வேலை செய்பவர்கள் நம்மிடம் பேசும்போது நின்றுகொண்ட பேசுவார்கள் ஒருபோதும் அமர மாட்டார்கள். அது ஒரு பிரச்சினை என்று கூட நமக்கு தோணாது. நாம் முற்போக்கான ஆளாக இருந்தாலும், அவர்களுக்கு நாம் மரியாதை தருகிறோம் என்றாலும், அவர்கள் பக்கத்தில் இருக்கும் chair ல வந்து உக்காந்து பேசினால் அதை நாம் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என்றாலும்
Nov 27, 2023 19 tweets 3 min read
நாடி சோதிடம், கைரேகை, குறி சொல்லுதல், tarot card reading இப்படி எல்லாமே பொய் தான். அதை செய்பவர்கள் மக்களை ஏமாற்றும் con man (short for confidence man) தான். திருடன் தன்னுடைய physical skill வைத்து திருடுகிறான். con man தன்னுடைய persuasion, charm, மற்றும் psychological tactics பயன்படுத்தி மக்களை manipulate பண்ணி பணம் பறிக்கிறான்.
சோதிடம் என்பது பெரும்பாலும் குலத்தொழில், அது ஒரு closely knitted circle. மக்கள், 'அவங்க பரம்பரையாக சோதிடம் பார்க்கிறார்கள் நன்றாக பார்ப்பார்கள்' Image
Nov 15, 2023 5 tweets 1 min read
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சின்ன விஷயத்தை சார்ந்து மட்டுமே இல்லை. புத்தி சொன்னா கேக்கல அடிச்சு வளக்கிறேன். இல்ல, அடிச்சு வளக்க கூடாது புத்தி சொன்ன போதும் என்று குழந்தை வளர்ப்பை simplify பண்ண முடியாது. நிறைய factors ஒரு குழந்தையின் நடத்தையை தீர்மானிக்கிறது. genetics, குடும்ப சூழல், நண்பர்கள், சமூகம், பள்ளி, கல்வி, media, பொருளாதாரம், வளரும் சூழல், பெற்றோர்களின் involvement, சமூகத்தில் இருக்கும் role model இப்படி பல விஷயங்கள் ஒரு குழந்தையின் நடத்தையை பாதிக்கிறது.
Oct 31, 2023 11 tweets 2 min read
நல்ல சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கதை ஒன்றை எழுதிவிட்டு, அதை எப்படி முடிப்பது என்று தெரியாமல், இது கனவு என்று முடிப்பது ("it was all a dream" ending). அல்லது சுவாரசியமான காட்சிகள் வேண்டும் என்பதற்காக, ஒரு காட்சியை அமைத்துவிட்டு, Image பின்னர் கதாபாத்திரம் திடுக்கிட்டு, 'ஓ கனவா' என விழிப்பது போல காட்சி அமைப்பது deus ex machina என்றழைக்கப்படும். deus ex machina என்ற லத்தீன் சொல்லுக்கு பொருள், god from the machine.
Oct 9, 2023 14 tweets 2 min read
யூத வெறுப்பு வரலாறு முழுக்க இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் கிரேக்க கடவுள்களை ஏற்க மறுத்ததால் கிரேக்கர்களுக்கு யூதர்கள் மேல் கடுப்பு இருந்திருக்கிறது. Philo of Alexandria என்னும் யூத தத்துவவாதி 38 CE யில் யூதர்கள் மேல் நடந்த வெறுப்பு தாக்குதலை பதிவு செய்திருக்கிறார். காரணம் முன்பு சொன்னது போல் கிரேக்க கடவுள்களை ஏற்க மறுத்தததும், யூதர்கள் அவர்களுக்குள் தனியாக ஒதுங்கியே இருந்ததும். பின்னர் ரோம சாம்ராஜ்யம் எழுச்சியுற்ற போதும் இதே கதை தான்.
Oct 7, 2023 12 tweets 2 min read
fiction book கதை புத்தகம் மட்டுமே படிப்பவர்கள் பெரும்பாலோனோர் ஒரு கற்பனை உலகிலேயே இருப்பதை பார்க்கலாம். கதை புத்தகங்கள் பெரும்பாலும் light reading அதிக சிந்தனை தேவை இல்லை முக்காவாசி deductive reasoning தான் பயன்படுகிறது. நம்மை reality யில் இருந்து கடத்தி செல்கிறது. அதிலும் domestic novels எனப்படும் காதல் கதைகள், குடும்ப கதைகள் பெரும்பாலும் நாம் மூளைக்கு வேலை கொடுப்பதில்லை. இத்தகைய புத்தகங்களிலிருந்தும் நாம் கற்று கொள்ள முடியும் ஆனால் அது பாலில் இருந்து தண்ணீரை பிரித்தெடுக்கும் கடினமான வேலை தான் பெரும்பாலானோர் செய்வதில்லை.
Sep 23, 2023 11 tweets 3 min read
child preachers, பெரும்பாலும் Christianity ல தான் இருக்காங்க. குட்டி சாமி ன்னு ஒரு பையன் ரொம்ப முன்னாடி தீட்சதை வாங்கிட்டேன் அப்படினு வந்தான் ஆனா அப்போவே நிறைய ஆதீனங்கள் அதெல்லாம் வாய்ப்பில்லை ன்னு சொல்லிட்டாங்க அப்புறம் அந்த குட்டி சாமிக்கு என்னாச்சுன்னு தெரில. Image Christianity கொஞ்சம் சுதந்திரமான மதம் என்பதால் இங்க child preachers களை அனுமதிக்கிறார்கள். child preachers க்கு வரலாறு முழுக்கவே ஒரு மவுசு இருக்கிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்னு, குழந்தை பொய் சொல்லாது என்றெல்லாம் காலம் காலமாக இருக்கும் நம்பிக்கைகளால்
Aug 21, 2023 24 tweets 7 min read
மண்டியிடுதல் என்பது ஆதிகாலத்தில் இருந்தே மனிதர்களிடம் இருக்கிறது. விலங்குகள் இன்னொரு விலங்கிடம், 'சரணாகதி அடைந்துவிட்டேன் என்னை ஒன்னும் செய்துவிடாதே' என்பதை காட்ட உடம்பை குறுக்கி crouching position க்கு வரும். Image அதே சமயம், 'நான் உன்னைவிட பெரியவன் என்கிட்ட வம்பு பண்ணாத' என காட்ட முன்னங்காலை தூக்கி நிமிர்ந்து நிற்கும். ஒரு விலங்கு முன்னங்காலை தூக்கி நிமிர்ந்து நின்றால் அது attacking position. அதுவே உடம்பை குறுக்கி படுத்தால் submissive position. இதே பழக்கம் தான் மனிதர்களிடமும் இருக்கிறது. Image
Aug 18, 2023 8 tweets 1 min read
alternative medicine மாதிரியே இன்னொரு unregulated area அப்படின்னா, அது counselling, life coaching consultancy. certified life coaching என்பதே ஒரு quackery. இதுல non certified life coaches நிறைய பேர் இருக்காங்க. சதுரங்க வேட்டை படத்தில் வர 'நான் சைக்கிள் ல வந்தேன், ஆனா இப்போ கார் ல போறேன்' என்பது போல, இந்த life coaches 'நானும் வாழ்க்கைல பாதாளத்துல இருந்தேன். இன்னிக்கு உங்க முன்னாடி பேசிட்டு இருக்கேன்னு' மார்க்கெட்டிங் பண்ணிட்டு இருக்காங்க.
Aug 15, 2023 14 tweets 2 min read
முழுக்க முழுக்க நமக்கு சொந்தமில்லாத ஒரு உறவு மேல் தான், நாம் அதிகப்படியான ஈர்ப்பு அதீத அன்பை எல்லாம் காட்டுவோம். ரொம்ப அன்பை கொட்டி கொட்டி தவிப்பை பிழிந்து எழுதும் கவிதைகள் writeup எல்லாம் one side love ஆ இருக்கும், or already engaged/committed ஆனவங்க மேல இருக்கும். "'லவ் யூ. நல்லா இருங்க' என்று வாழ்த்து அனுப்பியிருந்தேன். ரொம்ப நேரம் என்றால் ரொம்ப நேரம் கழித்து - கையில் இருக்கிற வேலையை எல்லாம் முடித்து, மேஜையில் இருந்து நிமிர்ந்து பார்த்து, அப்புறம் என்ன? சொல்லுங்க' என்பது போல் - ' மகிழ்ச்சி சார்' என்று பதில் வந்திருந்தது.
Jul 7, 2023 11 tweets 5 min read
ஒரு கதை என வரும்போது அதில் இருக்கும் கதாபாத்திரங்கள் ரொம்ப ரொம்ப முக்கியம். பல சமயம் கதை அப்படின்னு பாத்தா ஒண்ணுமே இருக்காது. ஆனா அந்த கதையில் வரும் முக்கிய கதாபாத்திரத்தின் வளர்ச்சி 'character arc' ரொம்ப சுவாரசியமா இருக்கும் அதனாலேயே அந்த கதைகள் நல்லா இருக்கும். character arcs பலவிதம்:

1. Positive Change Arc: கதை ஆரம்பிக்கும் போது ரொம்ப டம்மியா ஆரம்பிச்சு அப்புறம் நல்லா develop ஆகி கதை முடியும் போது strong ஆ நல்ல ஒரு personal growth இருந்தா அது Positive Change Arc. உதாரணம், Game of thrones ல வர Theon Greyjoy, The Hound.
Image
Image
Jun 21, 2023 8 tweets 1 min read
Model Minority Myth அப்படின்னு ஒரு concept. 20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்காவில், Asian Americans எல்லாரும் நன்கு படித்த பணக்காரர்களாக இருக்கிறார்கள். so கடுமையா படித்து உழைத்தால் அமெரிக்காவில் மேல் மட்டத்திற்கு வர முடியும். அதற்கு இந்த "Asian Americans" Minority சமூகமே உதாரணம். எனவே African Americans, எங்களை பிதுக்கிட்டாங்க, நசுக்கிட்டாங்க என்றெல்லாம் கூப்பாடு போடாமல், Asian Americans போல படித்து உழைத்து முன்னேற பாருங்கள் என ஒரு கருத்து பரவலாக பரவ தொடங்கியது. இன்றுவரை இருக்கிறது. ஆனால் இது உண்மையா?
Jun 19, 2023 6 tweets 1 min read
ம்மா ப்பா என்பது குழந்தையின் முதல் sound உலகின் பல மொழிகளிலும் (அ)ம்மா, mama, ma, (அ)ப்பா [புள்ளி வைத்த எழுத்தில் சொல் தொடங்க கூடாது என்று தமிழில் அ சேர்த்து இருக்க கூடும்], papa, baba, dada, papi போன்றவை குழந்தையின் மொழியில் இருந்து வந்தது (infantile vocalizations). they are not formal words. whereas தந்தை தாய் father என்பதெல்லாம் மொழி சொல்லும் formal words. இது அந்த சொற்களின் வரலாறு. later on அப்பா dada என்பது affectionate words, very personal எல்லாரும் தந்தை ஆகலாம் ஆனால் சிலர் தான் அப்பா ஆக முடியும் என்றெல்லாம் emotions add ஆகியது.