சாதிக்கு சமாதி கட்டிய ஒரு பேனாவின் சிலையை எப்போது அமைக்கிப்போகிறாய் தமிழ்நாடு அரசே?
தமிழ்நாட்டில் பிராமிண சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கியது அன்றைய எம்.ஜீ.ஆர் அரசு! அது தொடங்கி ஊர் தோறும் சாதி சங்கங்கள் உருவாகியது. MGR முதல்வராக இருந்த போது போக்குவரத்துக்கழங்களுக்கும்
மாவடங்களுக்கும் சில தலைவர்களின் பேர்களை சூட்டி மகிழ்ந்தார்.. அவ்வாறான காலகட்டத்தில் தான் தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்திற்கு அண்ணா மாவட்டம் என்ற பெயரையும் சூட்டினார் MGR.. தலைவர் கலைஞர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் காஞ்சி சங்கரமடத்தின் பேச்சைக் கேட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு
அண்ணாவின் பெயரை சூட்ட மறுத்தார். நெல்லைக்கு கட்டபொம்மன் மாவட்டம் என்றும், விழுப்புரத்திற்கு ராமசாமி படையாட்சி மாவட்டம் என்றும், தூத்துக்குடிக்கு வ.சி.பிள்ளை என்றும் எல்லா தலைவர்களையும் சாதிக்குள் அடக்கினார் MGR.. இத்தோடு நின்று விடாத MGR சாதிய வாக்குகளை கவருவதற்காகவே போக்குவரத்து
கழகங்களிலும் சாதியை புகுத்தத் தொடங்கிடார்.. 1996 தலைவர் கலைஞர் ஆட்சிக்கு முன்புவரை பல்லவன், சேரன்,சோழன்,வீரன் சுந்தரலிங்கனார்,பசும்பொன் தேவர், அழகு முத்துகோன், தீரன் சின்னமலை, என்ற தலைவர்களின் பெயர்களை சாதிக்குள் அடக்கினார் MGR... இதில் பல பேருந்துகள் குறிப்பிட்ட ஊருக்குள் அனுமதி
கொடுக்கபடவில்லை.. ஆங்காங்கே கலவரம் நடைபெற்றது. மக்கள் பயணிக்கவே மறுத்தனர். 1996 தலைவர் கலைஞரின் ஆட்சிக்குப் பின்னர், அத்தகைய தலைவர்களின் பெயர்களை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.. அதன் பயனாக எல்லா சாதி சங்கத்தினரிடம் அவப்பெயரை சம்பாதித்த பாக்கியசாலி தான் தலைவர் கலைஞர்.. அதையெல்லாம்
பொருட்டுத்தாத தலைவர் கலைஞர் "மாநகர போக்குவரத்துக்கழகம்","அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்" அரசு போக்குவரத்துக் கழகங்களான விழுப்புரம், சேலம்,கும்பகோணம்,நெல்லை,மதுரை,கோவை ஆகிய பொதுப் பெயர்களை உருவாக்கி சாதித்துக் காட்டினார்.. தியாகத் தலைவர்களை சாதிக்குள் அடக்க துடித்த அதிகார
வர்க்கத்தினரிடம் கடைசி வரை அவப் பெயரை சுமந்து சென்ற அந்த பேனாவிற்கு எப்போது சிலை அமைக்கப் போகிறாய் தமிழக அரசே??
சாதிகளுக்கு சமாதி கட்டிய சாமானிய முதல்வர் தான் நம் தலைவர் கலைஞர் என்பதை மறந்திட வேண்டாம் உடன்பிறப்பே!!
#KalaignarForever 🖤❤️💥💥💥🙏🙏🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.