கலைஞரின் ஏழ்பரியோன் Profile picture
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥

Sep 9, 2022, 10 tweets

அதிர்ச்சியூட்டும் அரசியல் திருப்பம்..!!

#எலிசபெத் மகா ராணியின் இறுதிக் கணங்கள்...

லண்டன் பக்கிங்காம் அரண்மனை முதலாம் மாடியில் ராணியின் படுக்கையறையில், இருதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் கணிக்கும் கருவிகள் பொருத்தப் பட்ட நிலையில் கட்டிலில் படுத்திருக்கிறார்...

அவரைச்சுற்றி

இங்கிலாந்தின் சிறந்த வைத்தியர்கள் குழு ஒன்று அவரின் உடலின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தபடி இருக்கின்றார்கள்...

இளவரசர் சார்லஸ் சோகமாக மனைவி கமீலாவின் கைகளை பற்றியபடி நின்றிருக்க, அப்போது உள்ளே வந்த அவரின் மகன் வில்லியம்...
"அப்பா...தம்பி ஹென்றிக்கு தகவல் சொல்லியாச்சா.."

என்று கேட்கிறார்...

சார்லஸ் அதுக்கு ஆம் என்று தலையசைத்து விட்டு ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்க்கிறார்...

தகவல் பரவி உள்ளூர் பத்திரிகையிலிருந்து உலக பத்திரிகை வரை எல்லோரும் அரண்மனை வாசலில் கூட தொடங்கியதோடு கேமராக்களை அரண்மனை பக்கம் நீட்டியபடியே செய்திகளை முந்திக்கொடுக்க

வெறியோடு காத்திருக்கிறார்கள்..

காவல்துறை தடுப்புகளை அமைத்து அவர்களை ஒழுங்கு பண்ணத் தொடங்கியிருந்தனர்..

அமெரிக்காவில் இருந்த பேரன் ஹென்றி பாட்டி நிலைமை மோசம் என்ற தகவல் அறிந்ததுமே அவரும் அவசர அவசரமாக தனி விமானத்தில் புறப்பட்டு லண்டன் விரைந்தார்.

ராணி இடை இடையில் கண் விழிப்பதும்

ஏதோ சொல்ல வருவதும், பின்னர் மயக்க நிலைக்கு போவதுமாக இருந்தார்...

சார்லஸ் வைத்தியர்களை பார்க்க, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரியாமல் வைத்தியர்கள் கைகளை பிசைந்தபடி நிற்க...

வெளியே பொது மக்கள் எல்லோரும் மெழுகுவர்த்தி ஏந்தி ராணிக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்க...

அப்போது

அங்கு வந்து சேர்ந்த ஹென்றிக்கு தான் அந்த யோசனை வந்தது...

ராணியிடம் நீண்டகாலமாக உதவியாளராக இருந்த பிலிப் என்பவருக்கே ராணியின் அனைத்து அசைவுகளும் புரியும்...

ஆனால் வயதான அவரும் படுத்த படுக்கையாகி கிடக்கிறார்...
அவரை கொண்டு வந்தால் ராணி சொல்ல வருவதை புரிந்து கொள்வார் என்றதுமே...

ஒரு ஆம்புலன்ஸ் வண்டி வேக வேகமாய் போய் பிலிப்பை அள்ளிப் போட்டுக்கொண்டு வந்தது...

ராணிக்கு அருகில் இருந்த பிலிப் அவரின் கைகளை லேசாக தொட்டதும் லேசாக கண் விழித்த ராணியின் உதடுகள் அசைந்தது...

உடனே சார்லஸ் ஒரு பேப்பரையும் பேனாவையும் பிலிப்பின் கைகளில் கொடுக்க, நடுங்கிய கைகளால் பிலிப்

அதில் எழுதினார்...

அதோடு ராணி கண்களை மூடினார்...
அவருக்கு பொருத்தப்பட்டிருந்த கருவிகள் அனைத்தும் பீப் என்ற சத்தத்தோடு ஒரே நேர் கோட்டில் இயங்க... எல்லோரும் தலை குனிந்து சிலுவை போட்டுக் கொண்டார்கள்...

பிலிப் தான் எழுதிய துண்டு காகிதத்தை சார்லஸிடம் கொடுக்க, கலங்கிய கண்களோடு அதை

வாங்கியவர் மாடியின் பால்கனிக்கு வந்தார்...

அதுவரை காத்திருந்த அத்தனை மக்களும், ஊடகங்களின் காமெராக்களும் பால்கனியை நோக்கித் திரும்பவே...

இதோ மகா ராணியின் இறுதிச் செய்தி என்றபடி சார்லஸ் கையிலிருந்த துண்டு காகிதத்தை உயர்த்திக் காட்டினார்..

அதில் #சீமானுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை...
எனக்கு அவனை தெரியவே தெரியாது என்று எழுதியிருந்தது...
🤣🤣🤣🤣🤣🤣🤣

ஆதாரம் இதோ 👇👇

#QueenElizabeth
#RIPQueenElizabeth

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling