Dr. Nagajothi 👩🏽‍⚕️ Profile picture
| Doctor of Pharmacy (Pharm.D) | | I am a #PharmDian | | Rationalist | | Student of Periyar, Dr. B.R. Ambedkar and Marx | |Belongs to Dravidian Stock| 🌈

Sep 10, 2022, 14 tweets

#திருமணத்தில்_அருந்ததி_பார்ப்பது_ஏன் ?

முன்பு ஒரு காலத்தில் அக்னி தேவன் சப்தரிஷிகளின் மனைவியர் மீது மோகம் கொண்டான், அந்த மோகத்தால் அவர்களை எப்படி அனுபவிப்பது என்று மோக அக்னியால் மிகவும் வாடினான்.

(1)

இதை உணர்ந்து கொண்ட அவன் மனைவி சுவாஹா தேவி, தன் கற்பின் சக்தியால் அந்த முனி பத்தினிகளின் உருவங்களைப் போல் ஒவ்வொன்றாக தானே வடிவம் எடுத்து தன் கணவனை கட்டித்தழுவி அவனுக்கு ஆனந்தம் கொடுத்து வந்தாள்.

(2)

அவ்வாறு அவள் ஆறு ரிஷி பத்தினிகளின் உருவங்களையும் எடுத்தாள், ஆனால் அருந்ததியின் உருவத்தை மட்டும் அவளால் எடுக்க முடியவில்லை. அருந்ததியின் உருவம் தன்னால் எடுக்க முடியாததை நினைத்து சுவாஹா தேவி மிகவும் வியப்படைந்தாள்.

(3)

உடனே அவள் அருந்ததியிடம் சென்று கற்புக்கரசியே உலகத்தில் பல மங்கையரை நான் பார்த்திருக்கிறேன், ஆயினும் உன்னை போல பதிவிரதையை நான் கண்டதே இல்லை. நான் எல்லா தேவர்களுக்கும் முகமாக இருக்கும் அக்னி தேவனுக்கு மனைவியாக இருந்தும்,

(4)

வித விதமான மோக உருவம் எடுக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருந்தும், உன்னுடைய வடிவத்தை மட்டும் எடுக்க எனக்கே சக்தி இல்லையென்றால் மற்றவர்களால் இது சாத்தியப்படுமா? நீயே உத்தமி.

(5)

ஆகையால் எந்தப் பெண் கல்யாண காலத்தில் அக்னி அந்தணர் உற்றார் உறவினர் முன்னிலையில் அருந்ததியான உன்னைப் பார்த்து ஸ்மரிப்பார்களோ (வணங்குவார்களோ) அவர்கள் சுகத்தையும் செல்வத்தையும் புத்திர பேற்றையும் பெற்று சுகமாக வாழ்ந்து புண்ணிய லோகத்தை அடைவார்கள் என்று கூறினாள் சுவாஹா தேவி.

(6)

இந்தக் கதை "சிவமகா புராண"த்தில் சொல்லப்பட்டுள்ளது.

அக்னி தேவன் சப்தரிஷிகளின் மனைவிகள் மீது ஆசை கொள்வது அறமா!? ஒரு கடவுள் செய்யும் செயலா இது?

(7)

திருவள்ளுவர் பிறனில் விழையாமை அதிகாரம் குறள் எண் 148 - இல் இவ்வாறு சொல்கிறார்,

"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு"

பொழிப்பு (மு வரதராசன்): பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.

(8)

பிறரின் மனைவியை மனதால் நினைப்பது கூட அறம் அல்ல என்கிறார் திருவள்ளுவர். ஆனால் கடவுள் என்று சொல்லும் அக்னி தேவன் சப்தரிஷிகளின் மனைவிகள் மீது ஆசைப்பட்டது அதை நிறைவேற்ற அக்னி தேவனின் மனைவி சுவாஹா தேவி அந்தப் பெண்களின் உருவத்தை எடுத்து அக்னி தேவனுடன் இன்பம் கொண்டது.

(9)

இவை எதிலும் ஒரு துளி கூட அறமோ ஒழுக்கமோ இல்லை.

இப்போது ஒன்று கேட்கலாம் அருந்ததி இதில் மேன்மையாக தானே சொல்லப் பட்டிருக்கிறாள் அதனால் இதை சிறிது ஏற்றுக் கொள்ளலாமே என்று,

(10)

இங்குதான் ஒட்டுமொத்த பெண்களுக்கும் எதிரான சூழ்ச்சி நடக்கிறது. அருந்ததி மட்டுமே சிறந்த பத்தினி என்று சொல்லும் போது, மற்ற ஆறு பெண்களும் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்று பொருள் வருகிறது.

(11)

அடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டது அக்னி தேவனின் ஒழுக்கக் கேடு, அதற்கு அவரின் மனைவி துணை போனது அதைவிட அறமற்ற செயல், மற்ற ஆறு பெண்களின் உருவத்தை சுவாஹா தேவியால் எடுக்க முடிந்ததாலேயே அவர்கள் ஒழுக்கமற்றவர்கள் என மறைமுகமாக சொல்வதாகவே இந்த கதை அமைந்துள்ளது.

(12)

கடவுள் கதைகளிலேயே இவ்வளவு அறமற்ற செயலும் ஒழுக்கக்கேடும் இருக்கும்போது, இவைகளை நம்புங்கள் இவை அனைத்தும் நல்ல விஷயங்களை போதிக்கிறது என சொல்வது எப்படி நியாயமாகும்!? நீங்கள் எழுதி வைத்திருக்கும் கடவுள் கதைகளே இவ்வளவு மோசமாக இருக்கும் போது அதை மக்கள் எப்படி பின்பற்ற முடியும்?

(13)

ஒருவர் தன் சுய புத்தியில் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தால் ஒழிய, அவர்களால் ஒழுக்கத்தை பின்பற்ற முடியாது. எந்த கடவுள் பக்தியும் கடவுளின் கதைகளும் ஒழுக்கத்தை போதிக்கவில்லை என்பதற்கு அக்னி தேவனின் கதை ஒரு உதாரணம்.

(14)

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling