Dr. Nagajothi 👩🏼‍⚕️ Profile picture
| Doctor of Pharmacy (Pharm.D) | | I am a #PharmDian | | Rationalist | | Student of Periyar, Dr. B.R. Ambedkar and Marx | |Belongs to Dravidian Stock|
30 Nov
#Threads

#தமிழ்ப்புத்தாண்டு

சித்திரை முதல் நாள் தமிழ் வருட பிறப்பா????  

சித்திரை முதல் நாளை நாம் தமிழ் வருடப்பிறப்பாக கொண்டாடி வந்த காலத்தை எடுத்துப்பார்த்தால், அது சுழற்சி முறையில் இருக்கும்.

(1/n) Image
அதாவது அறுபது ஆண்டுகள் என்ற கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும். அந்த ஆண்டுகள்
‘பரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(2/n)
இந்த அறுபது ஆண்டுகளின் சுழற்சி முறை என்பது வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவரால் கி.பி 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது. சிலர் இது  கனிஷ்கன் என்ற வடநாட்டு அரசனால ஏற்படுத்தப்பட்டது என்றும் கூறுவர்.

(3/n)
Read 20 tweets
29 Nov
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறைகளை அரசியலமைப்புச் சட்டம் கொண்டு எப்படிக் களைவது என, "அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்" புத்தகம் பேசுகிறது.
இணையுங்கள் தோழர்களே இன்று மாலை 6.00 மணிக்கு.

@The_69_Percent
@Greatgo1
@esemarr3

twitter.com/i/spaces/1mnGe…
Read 4 tweets
29 Nov
#Thread

அர்ச்சகர்:- என்ன ஜோசியரே கோவிலுக்கு முன்போல் ஆளுகள் வருவதே இல்லையே! குடும்ப நிர்வாகம் வெகு கஷ்டமாகவல்லவா இருக்கிறது.

ஜோசியர்: - என்ன காரணம் ?

அர்ச்சகர்;- இந்த எழவு எடுத்த சுயமரியாதைதான்.

ஜோசியர்:- சுயமரியாதை காரணம் என்றால் சுயமரியாதைக்காரர்கள் சாமி இல்லை,

(1/n)
பூதம் இல்லை என்று சொல்லி மக்களைக் கோவிலுக்குள் போகக்கூடாது என்று பிரசாரம் செய்கின்றார்களே அதனாலா?

அர்ச்சகர் :- இல்லை - இல்லை அதற்கெல்லாம் நமக்கு பயமில்லை. இன்னமும் ஆயிரந்தடவை வேண்டுமானாலும் சாமியில்லை, பூதம் இல்லை என்று சொல்லட்டும்,

(2/n)
கோவிலை வேண்டுமானாலும் இடிக்க வேண்டுமென்று சொல்லட்டும்.அதனால் நமக்கு ஒன்றும் கெட்டுப் போகாது.

ஜோசியர்:-மற்றென்ன காரணம் என்று சொல்லுகிறீர்கள்?

அர்ச்சகர்;-கோவில்களுக்குத் தேவதாசிகள் வருகின்றதான முக்கிய கைங்கரியத்தைப் பற்றி கண்டபடி பேசி,அதை நிறுத்தி விட்டார்களல்லவா அதனால்தான்
(3/n)
Read 18 tweets
25 Nov
#Thread

#books

தோழர், அருந்ததிராய் அவர்களின் பெருங்கட்டுரை "இந்திய இழிவு" புத்தகம். தமிழில் "நலங்கிள்ளி" அவர்கள் மொழி பெயர்த்துள்ளார்.

உங்களுக்கு மலாலா அவர்களை தெரியும், சுரேகா போட்மங்கே பற்றி தெரியாது எனில், நிச்சயம் அம்பேத்கரை படியுங்கள் என துவங்குகிறது புத்தகம்.

(1/n)
தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை வெறியாட்டத்தின் ஒரு உதாரணத்தை எடுத்துரைத்து, தரவுகளின் அடிப்படையில் விளக்கியுள்ளார். இந்தியாவில் சாதிய கட்டமைப்புகள் குறித்த அம்பேத்கரின் பார்வையை மிகத்துல்லியமாக மேற்கோள்காட்டி எழுதியுள்ளார்.

(2/n)
குறிப்பிட்ட மக்களை தீண்டத்தகாதோர் என ஒதுக்கி வைத்து அவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்த சாதி அடக்குமுறை, அவர்களின் பெண்கள் மீது தன்னை உயர்ந்த சாதி எனக் கருதிக் கொள்பவனுக்கு அதீத உரிமை இருப்பதாக எண்ணுவதன் விளைவு தலித் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்புணர்வு என்கிறார்.

(3/n)
Read 9 tweets
1 Nov
காலம் நான்கு கால் பாய்ச்சலில் குதித்து செல்லும்போது, விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மானுட வாழ்வில் எண்ணற்ற மாற்றங்களை செய்யும்போது மொழி மட்டும் எந்த மாற்றமும் பெறாமல் இருந்துவிட முடியுமா?
@The_69_Percent @esemarr3
@Greatgo1

Set a reminder for upcoming Space! twitter.com/i/spaces/1eaKb…
Read 4 tweets
1 Nov
#Thread

#Diwali

கதை.1

ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

தேவர்களின் முறையீட்டின் படி மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து கடலுக்குள் புகுந்து, அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.

(1/n)
விரித்த உலகம் அப் பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, பவுமன் என்ற பிள்ளையைப் பெற்றது.

(2/n)
அவன் தனக்கு யாராலும் மரணம் நேர கூடாதென்று பிரம்மனை நோக்கி தவம் புரிந்தான்.

அவன் முன் வந்த பிரம்மனிடம் வரத்தை கேட்க, இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள்யாவும் ஒரு நாள் இறந்தே தீரும் என்றார் பிரம்மன்.

பின் அவன் என் தாயால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் வாங்கினான்.

(3/n)
Read 11 tweets
31 Oct
#Thread

*வனப்பாதுகாப்பு சட்ட திருத்தம்*

சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான ஒன்றிய அரசின் அமைச்சகம், 1980- ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியாவின் வனப்பாதுகாப்பு சட்டத்தை திருத்த முன்மொழிவுகள் உள்ள ஆவணத்தை அக்டோபர் 2 ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

(1/n)
காடு எனும் வரையறைக்குள் வரும் பகுதிகளில், காடு சாராத திட்டமான நெடுஞ்சாலை, சுரங்கங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளில், தேவைக்கு அதிகமாகவோ, தேவையில்லாமலோ காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க உருவாக்கப்பட்டது தான் வனப்பாதுக்காப்பு சட்டம்.

(2/n)
இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய ஒன்றிய அரசு முயற்சிக்கிறது, அதில் 14 திருத்தங்களை/ சட்ட விலக்குகள் குறித்த முழுமையல்லாத ஒரு ஆவணத்தை தற்போது வெளியிட்டு, அதன்மீது கருத்துக்களை கோரியுள்ளது.

(3/n)
Read 34 tweets
31 Oct
#Thread

நாம் இந்த தளத்தில் பல நாட்கள் வெறும் பொழுது போக்கிற்காக பதிவுகளை இட்டு கடந்து செல்கிறோம், ஆனால் இன்று இது பேச வேண்டிய விஷயம் என தோன்றுகிறது. இது விளையாட்டல்ல நமக்கு பெறும் வினையாற்றும் ஒரு செய்தி.

(1/n)
டெல்லியில் விவசாயிகள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர், அதற்கு காரணம் புதிய வேளாண் சட்டம், என்பதை நாம் அறிவோம். ஆனால் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட வேண்டிய தேவை என்ன என்பது பலருக்கும் புரியாமல் இது தேவையில்லாத போராட்டம் என்று கூறுகின்றனர்.

(2/n)
இந்த வேளாண் சட்டத்தில் இருக்கும் எனக்கு தெரிந்த பிரச்சனைகளை கூறுகிறேன், நீங்கள் சொல்லுங்கள் இதை எதிர்க்க வேண்டுமா? இல்லையா என்று....

#FarmerProtest

(3/n)
Read 9 tweets
30 Oct
#Thread

சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ள "நடுகல்"லினை கொண்டு ஏற்படுத்தப்பட்ட புரட்டுகள்..

தொல்காப்பியர் காட்டும் நடுகல் என்பது "சீர்த்தகு மரபு"
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்
சீர்த்தகு மரபில பெரும்படை வாழ்த்தல் (தொல். புறத்திணை)

(1/n) Image
இந்த நடுகல், பார்ப்பதற்கு… இன்றைய லிங்கம்  போல் இருந்தமையால், சில ஆய்வாளர்கள், லிங்கம் என்று பிழையாக எண்ணி விட்டார்கள் ஆனால், அன்றைய தமிழில் "ல" என்று வார்த்தை துவங்காது
எடுத்துக்காட்டாக,
லக்ஷ்மி= இலக்குமி; லிங்கம்= இலிங்கம்.

(2/n) Image
லிங்கம் என்பது வடமொழி அதை தமிழில் எழுதும் போது  இலிங்கம்.
அப்புறம் எப்படி நடுகல் லிங்கம் ஆகும்?
தொன்மவியல் ஆய்விலும், ஆய்வாளரின் சைவப் பற்றும் மதம் எனும் பேயும் வந்து ஊடாடினால் இது தான் கதி.

(3/n) Image
Read 18 tweets
28 Oct
#Thread

சங்க இலக்கியங்களில் கடவுளின் பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளது, அது ஆரியர்கள் சொன்னது அல்ல. தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தில் கூட கடவுளைப் பற்றிய குறிப்பு உள்ளது என்று வாதிடுவார்கள் பலர்,அதற்க்கு எடுத்துக் காட்டு என்று இந்த பாடலையும் கூறுவார்கள். 

(1/n)
"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே"

(- தொல்காப்பியம் - பொருளதிகாரம் - அகத்திணை இயல் - பாடல் எண் : 5)

(2/n)
இந்த பாடலுக்கான விளக்கம் பல மதப் பற்றாளர்களால்  இவ்வாறாக கூறப் படுகிறது.

மாயோன் (திருமால்) பொருந்தியிருக்கும் காடுடைய நிலம் முல்லை என்றும், சேயோன் (முருகன்) பொருந்தியிருக்கும் மேகம் சூழ்ந்த மலையுடைய நிலம் குறிஞ்சி எனவும்,

(3/n)
Read 25 tweets
19 Oct
ஜாதகம் என்றால் என்ன? நம்பலாமா? கூடாதா? #Thread

ஜாதகம் என்பது ஒரு குழந்தை பிறந்த நேரத்தை வைத்து,  காலையில் சூரியன் எந்த நேரத்தில் உதித்தது ( உதிக்கும் நேரத்தை ஓரை என்பனர்) என்பதை  அட்ச ரேகையின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது,

(1/n)
இந்த கணிப்பு  தமிழ்நாட்டில் ஒரு நேரமும், கேரளாவில் ஒரு நேரமும் ஆந்திராவில் ஒரு நேரமும் இப்படியாக இடத்திற்கு இடம் மாறுபடும். இப்படி இந்த நேரத்தை வைத்து கணிப்பது தான் ஜாதகம். மொத்தம் 27 நட்சத்திரம்.

(2/n)
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதம் அவை அஸ்வினி, பரணி, கார்த்திகை மற்றும் ரோகினி எனப்படும். 27×4=108 நட்சத்திர பாதங்கள் . ஒவ்வொரு வீட்டிற்க்கும் 9 பாதங்கள் என , 108 நட்சத்திரக் கால்கள் -

(3/n)
Read 9 tweets
17 Oct
அக்டோபர்"மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்", மார்பக புற்றுநோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன.அதே போல மார்பக புற்றுநோய் குறித்த கட்டுக்கதைகளையும் தெரிந்து கொள்வது அவசியம், அது தேவையில்லாத பயத்தை போக்க உதவும் #Thread
(1/n) Image
கட்டுக்கதை no.1 :- உங்கள் மார்பில் ஒரு கட்டி இருப்பதை கண்டுபிடித்தால், அது உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் குறிக்கிறது !?

உண்மை :- மார்பகக் கட்டிகளில் ஒரு சிறிய சதவீதம் மட்டுமே புற்றுநோயாக மாறும்.

(2/n) Image
ஆனால் உங்கள் மார்பகத்தில் தொடர்ந்து புதியதாக மார்பக திசுக்களில் ஏதேனும் மாற்றங்களைக் கண்டால், அதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. மார்பக பரிசோதனைக்காக மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.

(3/n) Image
Read 18 tweets
14 Oct
ஆயுத பூஜை:-

சரஸ்வதி பூஜை என்பது ஒரு அர்த்தமற்ற பூஜை. கல்வியையும் தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதைப் பூஜை செய்தால் கல்வி வரும், வித்தைவரும் என்று சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல்,

(1/n)
சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்துவிட்டு, நாம் அந்தச் சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே , அவர்கள் படித்துப்பெரிய படிப்பாளியாகிக் கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத ``மக்குகள்" என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.

(2/n)
முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்களின் புராணக்கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும்.

(3/n)
Read 27 tweets