கலைஞரின் ஏழ்பரியோன் Profile picture
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥

Sep 12, 2022, 7 tweets

என்ன செய்தது அந்த பேனா? ஏன் அதற்கு 80 கோடியில் சிலை?
- சீமான் கேள்வி!!

Mr.சீமான் இந்த பெண்ணை நினைவிருக்கிறாதா? ஞாபகமில்லையெனில் நினைவு படுத்துகிறேன்! இந்த பெண்ணின் பெயர் #சாரிகா_ஷா சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் படித்துவந்தவர்! 1998-ஜீலை மாதம் இந்த பெண்னை

சில சமூக விரோதிகள் வழிமறித்து அவரின் மீதும் சக தோழியான கவிதா என்ற பெண்மீதும் வாட்டர் பாக்கெட்டை பீய்த்து அடித்து ரகளையில் ஈடுபட்டனர்.அதில் மதுபோதையில் இருந்த ஒருவன் தனது சமநிலையை இழந்து சாரிகாவை கட்டியணைக்க முற்படும் போது நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் அந்த பெண்

சென்னை சௌக்கார்பேட்டையை சார்ந்த அந்த கல்லூரி மாணவியின் மரணம் தமிழகத்தில் தீயாய் பரவியது! இந்த செய்தி தமிழன்னை தவமிருந்து பெற்ற புதல்வனாம் தலைவர் கலைஞரின் காதுக்கு சென்றிட மறுநாளே அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.. தலைவர் கலைஞர் அந்த கூட்டத்தில் கேட்ட கேள்வி யாதெனில்?

" ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த அந்த இளம்பெண்ணிற்கே இந்நிலையென்றால்? பாமரனின் மகளுக்கு என்ன நிலை கூடும்! என அமைச்சரவை கூட்டத்தில் அனலைக் கக்கினார்!! விடிவதற்குள் சரியான தீர்வை நாம் எட்ட வேண்டும் இல்லையெனில்? மக்கள் மன்றத்தில் நாம் தலைகுனிந்து நிற்போம் என சூலுரைத்தார் கலைஞர்!!

சரியாக 30-07-1998 இந்தியாவின் அத்தனை ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியானர் தலைவர் கலைஞர்.. ஆம், அவர் கொண்டுவந்த "பெண்களை துன்புறுத்துதல் தடைச் சட்டம்-1998" (Tamilnadu Prohibition of Eve-Teasing Act) அன்று முதல் தைரியமாக பெண் பிள்ளைகள் கல்லூரிக்குள் காலடியை எடுத்து வைக்க ஆரம்பித்தனர்

பாமரனும், பஞ்சனும் தமது பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்ப ஆரம்பித்தனர்.. தமிழ்நாட்டில் பெண்கள் கல்வியில் ஓர் புரட்சியை திரட்ட ஆரம்பித்தனர்.. பெண்கல்வியின் அவசியத்தை அண்ணாவின் இதயம் கொண்டும், பெரியாரின் தடி கொண்டும் ஓவியமாக தீட்டியவர் தலைவர் கலைஞர்.. பெண்களின் வாழ்வில் வீசக்கூடிய ஓளி

தான் என் தலைவர் கலைஞர்.. எதிரிகள் என்ன பட்டம் வேண்டுமானலும் அவர் மீது சூடிக்கொள்ளட்டும். ஏனெனில், சூட்டுபவனின் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் அதில் கலைஞர் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார்....
திரு. @SeemanOfficial அவர்களே!! 🖤❤️

#KalaignarForever 🙏🙏💥💥

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling