அன்பெழில் Profile picture
நம்புவதை பகிர்ந்து நன்மை செய்வோம்.

Sep 18, 2022, 13 tweets

#பூம்பாரை_வேலப்பர்_கோவில் கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும். இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம் . மிகவும் சக்திவாய்ந்த நவபாஷான முருகன்.
இந்தியாவில் உள்ள எல்லா

கோவில்களிலும் ஐம்பொன், வெங்கலம் கல்லால் ஆன சுவாமி மூர்த்தங்களை காண முடியும். ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமானமூர்த்தங்கள் உள்ளன.
1. பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன்
2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர்
உலகிலேய

நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனிசித்தர் போகர் என்ற மாமுனிவராகும். இவர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் அறிவர். ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும் அவர்தான் நவபாஷானத்தால் உருவாக்கியவர் என்பது தெரியாத செய்தி. அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி

முருகன் போன்று அருள் தர வல்லவர் என்பது அந்த கோவிலுக்கு சென்று அனுபவ ரீதியாக பயன் அடைந்தவர்களுக்குத்தான் தெரியும்.
சுமார் 10/12ம் நூற்றாண்டு வாக்கில் மாமுனி சித்தர் போகர் தமிழ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பழனி மலைக்கும் பூம்பாறை மலைக்கும் நடுவிலுள்ள யானை முட்டி குகையையில்

அமர்ந்து தான் கற்று வந்த கலைகளை சோதிக்க அதற்கான மூலிகைகள் ராசாயண பொருட்கள் சேகரித்து முதலில் ஒரு முருகன் சிலையை உருவாக்கினார். அந்த சிலையைத் தான் பழனி மலை மீது பிரதிஷ்டை செய்தார். தண்டம் கொண்டு அச்சிலையை உருவாக்கியதால் அதற்கு தண்டாயுதபாணி என்று பெயர். அக்கோவிலை இறைவனிடம் வேண்டி

சிவ பூதங்களால் கோவில் மற்றும் மண்டபகங்களை கட்ட செய்தார் என்பது வரலாறு. பின்னர் மறுபடியும் சீீனநாட்டிற்கு சென்று பஞ்சபூத சக்திகளை மீண்டும் பெற்று யானை முட்டி குகைக்கு வந்து ஞான நிலையை அடையும் பிரம்மத்தை உணர்ந்து கொள்ளவும் ஆதிபராசக்தியின் துணை கொண்டு குருமூப்பு என்ற அருமருந்தை நிலை

நிறுத்தவும் பஞ்சபூதங்களை நிலைப்படுத்தி அதன் மூலம் குருமூப்பு சிலையை உருவாக்கினார். அந்தச் சிலையை பூம்பாறை மலையுச்சியுள்ள சேர மன்னன் தவத்திற்கு பழனி முருகன் திருமண காட்சியளித்து சேர மன்னனால் கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் பிரதிஷ்டை செய்தார். அருணகிரிநாதர் பூம்பாறை மலைக்கு வந்து

முருகனை தரிசிக்க வந்தார். அப்போது இரவு நேரமானதால் கோவில் மண்டபத்தில் தங்கி தூங்கிவிட்டார். அப்போது ராட்சசி ஒருத்தி அருணகிரிநாதரை கொல்ல வந்தபோது முருகன் குழந்தை வடிவம் கொண்டு காவியுடை அணிந்திருந்த அருணகிரி நாதர் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்டு குழந்தையும் தாயும் தான்

தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி அருணகிரிநாதரைக் கொல்லாமல் சென்று விட்டதாம். இதனை தனது ஞான திருஷ்டியால் நடந்த சம்பவத்தை கண்டு குழந்தை வேடம் வந்து தன் உயிரை காப்பாற்றியதால் குழந்தை வேலர் என்று அழைக்கப்பட்டு குழந்தை வேலப்பராக இன்றும் அருள் பாலித்து வருகிறார். அவர் அருகிலேயே

அருணகிரி நாதருக்கும் சிலையுடன் கோவில் உள்ளது. வேண்டுவோரரின் பாவ வினைகள் தீர்த்து குழந்தை வடிவம் கொண்டு தன்னை வழிபடும் பக்தர்களை அருள் பாலித்து வருகிறார் #குழந்தை_வேலப்பர்
இக்கோவில் 3000ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டுள்ளது. பழனி தேவஸ்தானத்தின் கீழ் வருகிறது. ஒவ்வொரு வருடமும் பூம்பாறை

முருகனுக்கு தேர் திருவிழா கொண்டாடப் படுகிறது. கொடைக்கானல் மலைக் கிராமங்களில் நடைபெறும் தேரோட்டங்களில் குழந்தை வேலப்பர் கோவிலில் நடைபெறும் தேரோட்டமானது மிகவும் புகழ் பெற்றது. தைப் பூசத்திற்குப் பிறகு வரும் கேட்டை நட்சத்திரத்தன்று விழா நடைபெறுகிறது. பொதுவாக தை அல்லது மாசி மாதத்தில

இவ்விழா நடைபெறும். அந்த சமயத்தில் தினமும் சேவல், மயில், காளை, சிங்கம் உள்ளிட்ட வாகனங்களில் குழந்தை வேலப்பர் உலா வருவார்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling