கலைஞரின் ஏழ்பரியோன் Profile picture
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥

Sep 23, 2022, 7 tweets

மாநில சுயாட்சியை பற்றி பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது?
-பாஜக தலைவர் ஜே.பி.நட்டா!!

Mr.@JPNadda அவர்களே! இந்த படத்தில் உள்ளவரை யார் என்று தெரியுமா? தெரியவில்லை யெனில் அறிமுகப்படுத்துகிறேன்! இவர் பெயர் #பி_வி_ராஜமன்னார் சுதந்திர இந்தியாவின் முதல் நீதிபதி..ஆம், இன்றும்

மாநில சுயாட்சிக்கு பங்கம் நேரும் போதெல்லாம், ஒன்றிய அரசின் ஆணவத்தை அடக்க பயன்படுத்தக்கூடிய வார்த்தை #ராஜமன்னார்_குழு.. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் எந்த மாநில அரசும் சாதிக்காததை சாதித்துக் காட்டியவர் தான் தலைவர் கலைஞர் அவர்கள். 1969 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதியரசர் ராஜமன்னார்

தலைமையில் மூவர் குழுவை அமைத்தது அப்போதைய தலைவர் கலைஞர் தலைமையிலான பொற்கால அரசு.. அந்த குழுவில் P.V.ராஜமன்னார்,லட்சுமண முதலியார், சந்திரா ரெட்டி ஆகியோர் கூட்டாக இணைந்து ஒன்றிய-மாநில அரசுகளுடனான கூட்டாச்சி தத்துவத்தை விளக்கவும், மாநில அந்தஸ்த்தை வழங்கவும் தன்னிகரில்லா முயற்சியை

முன்னெடுத்தார் தலைவர் கலைஞர்.. நீதிமான் #ராஜமன்னார் தலைமையிலான குழு 27-05-1971 ஆம் வருடம் சுமார் 297 பக்கங்களை உள்ளடக்கிய "REPORT OF
THE CENTRE-STATE RELATIONS
INQUIRY COMMITTEE" என்ற ஆய்வறிக்கையை தலைவர் கலைஞரிடம் வழங்கினார் அய்யா #ராஜமன்னார் அவர்கள்.. அதில் குறிப்பிடத்தக்கது

மாநில கல்வி வளர்ச்சி, பொருளாதார ஏற்றத் தாழ்வு ஆகியவற்றில் தலையிட ஒன்றிய அரசிற்கு அதிகாரமில்லை என்றும், ஆளுநருக்கான அதிகாரத்தை குறைத்தும், பிரிவு 365, 356,357 ஆகியவற்றை நீக்கவும் இந்த குழு ஆய்வை சமர்பித்தது.. மேலும் ஒருப்படி சென்று சொல்ல வேண்டும் என்றால் மாநில முதல்வர்களே தேசிய

கொடியை ஏற்றுவதும், அட்டவணை 8-ன் படி மாநில மொழிகளில் உச்சநீதிமன்றத்திலும், அந்தந்த மாநில உயர்நீதி மன்றத்திலும் வட்டார மொழியில் வாதாடலாம் என்றும் கூறப்பட்டது.. ஒன்றிய அரசின் அலுவலகம் மாநிலத்தில் இருந்தால் நிச்சயம் அந்த ஊழியருக்கு மாநில மொழி அவசியம் தெரிந்திருக்க வேண்டும் என்றும்

கூறப்படுகிறது.. அரசியலில் கத்துக்குட்டியான Mr.#நட்டா அவர்களே நீங்கள் தவழ்ந்து கொண்டு பால்வாடி செல்லும் வயதில் தான் தலைவர் கலைஞர் அவர்கள்! பாரத அரசியலின் பிதாமகனாகவே" ஜொலித்தார் என்பதை நினைவுபடுத்துகிறேன்!!

#KalaignarForever #dmkforever #FatherofTamilnadu ❤️🖤

💥💥💥 🙏🙏🙏

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling