Keerthana Ram Profile picture
அறம் வெல்லும் அநீதி வீழும்

Sep 25, 2022, 9 tweets

#ஒருகல்லூரியின்கதை
இந்தியாவின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல்கலைக்கழகம் பீகார் மாநிலத்திலுள்ள நாளந்தா பல்கலைக்கழகம். இதை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று பீகார் விதான் மண்டல் கூட்டு அமர்வில் நாளந்தா பல்கலைக்கழக மசோதாவை அப்போதைய முதலமைச்சர் நிதீஷ் குமார் முன்முயற்சியால்

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் முன்மொழிந்தார். அதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு பணிகள் நிறைவுற்றன. 2014-ஆம் ஆண்டு முதல் இந்த புகழ்பெற்ற பல்கலைக்கழகம்செயல்படத் தொடங்கியது.
பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் குழுவின் முதல்

தலைவராகவும் அதன் முதல் வேந்தராகவும் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட்டது.

இந்நிலையில் மோடி பிரதமராகப் பதவியேற்றபின் ஆர்எஸ்எஸ்-ன் கட்டளைக்கு இணங்க, சில உள்ளுர் ஊடகங்கள், அமர்த்தியா சென் மீது பல ஆதாரமற்ற பொய்

குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இவர்களின் அரசியல் தலையீடு காரணமாக அமர்த்தியா சென் தனது பதவியிலிருந்து விலகினார்.

2015-ல் இரண்டாவது முறையாக அவர் வேந்தராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுபடியும் மேற்கூறியவாறு அவர்மீது தாக்குதல் நடந்தது. அடுத்ததாக சிங்கப்பூர் அமைச்சர் ஜார்ஜ்

இயோவை நியமித்தனர் ஆனால் அவரும் பல்கலைக்கழக விசயங்களில் அரசியல் தலையீட்டால் பதவி விலக நேரிட்டது.

அவர் பதவி விலகியதும் ஆர்எஸ்எஸ்-ன் ஒரு பிரிவான விக்யான் பாரதியின் தலைவரான விஜய் பாண்டுரங் பட்கரை துணை வேந்தராக மத்திய அரசு நியமித்தது.

இந்த எட்டு ஆண்டு கால மோடி ஆட்சியில் நாளந்தா

பல்கலைக்கழகம் பாழடைந்து விட்டது. ஆர்எஸ்எஸ்-பாஜக அமைப்பு நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை திட்டமிட்டு கைப்பற்றி வருகிறது. இதற்கு நாளந்தா பல்கலைக்கழகம் ஒரு சிறந்த உதாரணம். இதைத்தொடந்து டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற பல்கலைக்கழகங்களிலும் ஆர்எஸ்எஸ்

செயல்பாட்டாளர்களை நியமிக்க தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள பல்கலைகழகங்களில் ஆளுநர்களை வைத்து ஆர்எஸ்எஸ் நபர்களை துணைவேந்தர்களாக நியமித்து பல்கலைக்கழகங்களை காவிமயமாக்கி வருகிறது. அவர்களின் மாணவ அமைப்பான ABVP துணைவேந்தரின் துணையோடு காவிகளின் குண்டர் படைகளாக செயல்படுகிறது;

மத்திய பல்கலைக்கழகங்களில் மட்டுமல்லாமல் மத்திய மாநில பல்கலைக்கழகங்களிலும் இவர்கள் செழித்து வளர்கிறார்கள்.

கல்வி நிலையங்களில் ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர்கள் தலைமையேற்றால் கல்வி காவிமயமாகும்; வேத புராண இதிகாச குப்பைக் கதைகள், புல்புல் சாவர்க்கர் கதைகள்தான் நாட்டின் வரலாறாகிவிடும்.

இவர்களின் மனுதர்மம் நிலைநாட்டப்படும். இவர்கள் கட்டுப்பாட்டில் பல்கலைக் கழகங்கள் இருந்தால் சூரப்பாக்கள்
அண்ணா பல்கலையில் நுழைந்து சீரழித்தது போல
மேலும் பல பல்கலையில் நுழைவர். இதனை தடுக்க துணை வேந்தர்கள் மாநில அரசே நியமிக்கும் உரிமையை எப்படியாவது பெற்றே தீர வேண்டும்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling