கலைஞரின் ஏழ்பரியோன் Profile picture
சமூகநீதி பேசும் 2K Kids |தாயின் கருவிலிருந்தே நான் சுயமரியாதைக்காரன் ❤️🖤🖋️| மற்றொரு ஜென்மத்தில் கலைஞரின் கணையாழியாக பிறக்க தவம் செய்துகொண்டிருப்பவன்...💥💥

Sep 30, 2022, 7 tweets

திமுக ஆட்சி எப்போதெல்லாம் இருக்கிறதோ பெண்களுக்கு பாதுகாப்பும் இல்லை, சட்ட ஒழுங்கும் சந்தி சிரிக்கின்றது!
- எடப்பாடி பழனிசாமி

Mr.பழனிசாமி #சிதம்பரம்_பத்மினி யை நினைவிருக்கின்றதா? 1992 ஜெயாவின் காண்டுமிராண்டி ஆட்சியின் போது தன் கணவன் கண்ணெதிரே கற்பழிக்கப்பட்ட ஒரு

அப்பாவி பெண்.. அந்த வழக்கில் நீதிமன்றம் வரைச் சென்று நீதியை நிலைநாட்டியவர்கள் திமுகவினர் தான்.. அத்தோடு மட்டும் நின்றிடாமல் ஜெயலலிதாவின் ஆட்சியின் போது 1992களில் #வச்சாத்தி கிராமத்தில் புகுந்து பெண்களை மானபங்கம் படுத்தி, பாலியல் வன்புணர்வுகளை நிகழ்த்தியதும் அந்த ஆட்சியில் தானே!

2001 திண்டிவனத்தில் அப்பாவி பெண் #ரீட்டாமேரி மீது பொய்வழக்கை சுமத்தி அவரை பாலியல் வல்லுறவு செய்து மனநிலை பாதிக்கும் அளவிற்கு சித்திரைவதை செய்த காண்டுமிராண்டிகள் உலாவியதும் ஜெயலலிதா ஆட்சியில் தானே! அப்பாவி பழங்குடியினர் மீது பொய்வழக்கை சுமத்தி கைது செய்யப்பட்டவரின் குடும்பத்தில்

உள்ள பெண்களை வன்புணர்வு செய்ததும், குற்றத்தை ஒப்புக் கொள்ள வைத்ததும் ஜெயலலிதாவின் ஆட்சியில் தானே! ஒரு பெண் ஆட்சியில் இருக்கும் போதே இவ்வளவு குற்றங்கள் எப்படி வந்து? அப்பாவி பெண்களுக்கு பாதுகாப்பை யார் அளித்தார் என்பதை அரசியலில் ஆழத்தை அளந்து பார்த்த திமுகவின் கடைமட்டத் தொண்டனிடம்

வந்து கற்றுக் கொள்ளுங்கள்! தலைவர் கலைஞர் ஆட்சி செய்த போது பெண்கள் மீது கை வைக்கவே ஒரு கூட்டம் அஞ்சி நடுங்கும் ஏனெனில் 1998-ல் "ஈவ்டீசிங்" சட்டம் கொண்டு வந்து தாய்குலத்தின் பாதுகாப்பை உறுதி செய்த பிதாமகன் தான் தலைவர் கலைஞர்..பெண்கள் நலனுக்காக ஜெயா செய்த நன்மைகள் தான் என்ன? என்பதை

தங்கள் வாயிலாக அறிய விழைகிறேன்! குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்து வந்த உங்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்! நான் கூறியது அனைத்தும் 1991-1996 காலகட்டம் மட்டுமே! திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கை பற்றி பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை..அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு

என்பது "பேய் ஆட்சியாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" போன்றது.. எனவே திமுகவை பற்றி பேசவோ அல்லது பொய் புரளியை உருவாக்கவோ நீங்கள் இன்னும் அரசியலில் பயிற்சி பெற வேண்டும்! ஏனென்றால் நாங்கள் தலைவர் கலைஞரின் வளர்ப்புகள் எதையும் ஆதாரமில்லாமல் பேசமாட்டோம்!

#KalaignarForever 🖤❤️💥💥

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling