கபிலன் Profile picture
பெரியாரிய மாணவன் | ஒரு நாள் ஜாதியற்ற சமூகம் உருவாகும் என்று நம்புகிறேன்

Oct 12, 2022, 11 tweets

யார் இந்த நாட்டை ஆள்கிறார்கள் நானா இல்லை இராமசாமி நாயக்காரா ? பார்த்து விடலாம் என்ற ஆணவத்தில் 1938- இல் இந்தியை கட்டாய பாடமாக அறிவிக்கிறார் இராசகோபாலாச்சாரியார் ஆனால் 1926ஆம் ஆண்டிலேயே அதாவது இந்த உத்தரவு வருவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு 1/1

பெரியார் குடிஅரசு இதழில் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி வடமொழி உயர்வுக்கு வகை தேட பார்ப்பனர்கள் இந்தியை திணிக்கிறார்கள் என்று எதிர்த்து எழுதினார் 1930-ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தி நுழைவதைக் கண்டித்து பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார் 1/2

1938- பிப் மாதம் காஞ்சிபுரத்தில் மாபெரும் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது மாநாட்டில் பெரியார் இந்தியை எதிர்த்து போர்முரசு கொட்டினார்
“இந்தி” கட்டாய பாடமாக்குவது ஒழித்தால் மட்டும் போதாது. அதற்கான உள் காரணங்களை ஒழிக்க வேண்டும்” என்று கூறினார் தந்தை பெரியார் 1/3

நம் தமிழ் மக்களை புராண காலம் போல் பார்ப்பனியத்துக்கு நிரந்தர அடிமைகளாய் ஆக்குவதே இதன் நோக்கம் சுயமரியாதை உணர்ச்சியால் ஆட்டம் கொண்டிருக்கும் பார்ப்பனிய மத உணர்ச்சியை மீண்டும் சரியானபடி புகுத்துவதற்கே இந்தித் திணிப்பு என்று அம்பலப்படுத்தி போராட்டத்துக்கு அறைகூவல் விடுத்தார் 1/4

இந்தி எதிர்ப்பு போராட்ட அணிகள் உருவாக்கப்பட்டன. போராட்டத் தலைவருக்கு ‘சர்வாதிகாரி’ என்று பெயரிடப்பட்டது போராடியர்கள் மீது அடக்கு முறை சட்டங்களை ஏவி விட்டார் இராஜ கோபாலாச்சாரி கைதானவர்கள்மீது வழக்கு போட்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சிறையில் அடைத்தனர் 1/5

கைதானவர்களை மொட்டை அடித்து சிறை உடை அணிவித்து குல்லாய் போட வைத்து களியையும் கூழையும் உணவாக கொடுத்தனர் இந்த நிலையில் திருச்சியிலிருந்து இந்தித் திணிப்பை எதிர்த்து 100 பேர் கொண்ட வழி நடை பிரச்சார படை ஒன்று புறப்பட்டது. இதற்கான வழியனுப்பு விழாவை திருச்சியில் பெரியார் நடத்தினார் 1/6

இந்தப் படையின் தலைவர் தஞ்சை அய்.குமாரசாமி, ‘நகர தூதன்’ பத்திரிகை ஆசிரியர் மணவை ரெ. திருமலைசாமி, படையின் யுத்த மந்திரி, பட்டுக்கோட்டை அழகிரி, படை அணியின் தலைவர் 1938 ஆகஸ்ட் 1ஆம் நாள் திருச்சியில் புறப்பட்ட இந்தப் படை 1938 செப்டம்பர் 11ஆம் நாள் சென்னை வந்தடைந்தது 1/7

42 நாட்கள் 577 மைல்தூரம் நடந்தே வந்து மக்களிடம் இந்திக்கு எதிராக பரப்புரை செய்தனர் இந்த படைக்காக பட்டுக்கோட்டை அழகிரி கேட்டு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதித் தந்த பாடல்தான், “எப்பக்கம் வந்து புகுந்து விடும் இந்தி? அது எத்தனைப் பட்டாளம் கூட்டி வரும்?” என்ற பாடல் 1/8

அவர்களை வரவேற்று சென்னை கடற்கரையில் மக்கள் கூட்டத்தில் பெரியார் வைத்த முழக்கம் தான், “தமிழ்நாடு தமிழருக்கே” பெரியார் மீது ஆச்சாரியார் ஆட்சி வழக்கு தொடர்ந்தது. 1938 நவம்பர் 26-ல் பெரியார் கைதானார். 2 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் பெரியாருக்கு விதிக்கப்பட்டது 1/9

முதலில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பெரியார் - பிறகு பெல்லாரி சிறைக்கு 1939-ல் மாற்றப்பட்டார் சென்னை சிறையில் அடைக்கப்பட் டிருந்த இந்தி எதிர்ப்பு வீரர்கள் தாளமுத்து, நடராசன் இருவரும் சிறை அடக்குமுறையால் சிறையிலே உயிர்நீத்து களப்பலியானார்கள் 1/10

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling