பெரியாரிய மாணவன் | ஒரு நாள் ஜாதியற்ற சமூகம் உருவாகும் என்று நம்புகிறேன்
Jan 9, 2023 • 5 tweets • 1 min read
தமிழகத்தில் இருந்த ஜாதி கொடுமைகளும் ஏழ்மையும் மக்கள் கூலிகளாக போக காரனமாக இருந்தன சென்னை மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏழை தமிழ் தொழிலாளர்கள் கங்காணிகள் மூலம் சேகரிக்கப்பட்டு இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இருந்த துறைமுகத்திற்கு பல நூறு கிலோமீட்டர் தூரம் நடந்து
1/5
வந்து இங்கிருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டனர் அங்கு நூறு பேர் செல்லக் கூடிய படகுகளில் 200 பேராக சென்றனர் தலைமன்னார் கரையில் இறங்கிய பின்னர் அங்குள்ள முகாம் ஒன்றில் பல நாட்கள் தங்க வைக்கப்பட்டனர்
2/5
Jan 1, 2023 • 7 tweets • 2 min read
நான் என் வாழ்வில் பார்த்து பிரமித்த மனிதர் பெரியார் அடுத்து சேகுவேரா
மருத்துவம் படித்தவர் சேகுவேரா மக்களுக்கு சேவை செய்ய என்று ஒரு மோட்டர் வண்டியை எடுத்து கொண்டு தென் அமெரிக்கா முழுவதும் சுற்ற கிளம்பி விடுகிறார் தென் அமெரிக்கா முழுவதும் சுற்றி முடித்து விட்டு ஓரிடத்தில் 1/7
அமர்ந்து யோசிக்கிறார் இந்த அடிமை மக்களுக்கு நாம் எதோ மருத்துவ சேவை மட்டும் செய்ய கூடாது வேறு ஒரு சேவை தான் செய்து முன்னேற்ற வேலைகளை செய்ய வேண்டும் என்று தீர்மானித்து ஆயுத வழி புரட்சியை தேர்ந்தெடுக்கிறார் இந்த பக்கம் பெரியார் ஈரோட்டில் செல்வந்தரின் மகனாக பிறந்து செல்வ செழிப்பை 2/7
Jan 1, 2023 • 4 tweets • 1 min read
நமக்கு பதவி வந்தால் போதாது நம்மில் பலர் இலட்சாதிபதியானால் போதாது நமக்கு இன்றைக்கு தேவை எல்லாம் நமது மானம் மீட்கப்பட்டாக வேண்டும் நமது இழிவை ஒழித்தாக வேண்டும்
இன்னும் எத்தனை நாளைக்கு நான் இருக்கப் போகிறேன் எத்தனை நாளைக்கு கத்தப்போகிறேன் நாளைக்கே பொசுக் கென்று போய்விடுகிறேன் 1/4
என வைத்து கொள்ளுங்கள் உங்கள் கெதி என்ன என் இடத்தில் உட்கார எவன் வரப்போகிறான் வர விரும்புகிறவன் இருந்தாலும் எவனை இந்த அளவுக்கு மதிக்க போகிறீர்கள்
மக்களிடம் மதிப்பு பெறுவது என்பது சின்ன காரியமா அந்த மதிப்பை பெற எவ்வளவு பட்டாக வேண்டும் ஆகவே தோழர்களே நாளை எனக்கு ஏதாவது என்றால் 2/4
Dec 31, 2022 • 4 tweets • 1 min read
காங்கிரசை ஒழிப்பேன் என்று சூளுரைத்து காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியேறிய பெரியார் தான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜரை இங்கு கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தார் அவர் தேர்தல் பரப்புரையில் காமராஜரை ஆதரித்து பச்சை தமிழர் காமராஜருக்கு வாக்கு செலுத்துங்க என்றார் 1/4
இப்போது பலருக்கும் கேள்வி எழும் காமராஜரை ஏன் ஆதரித்தீர்கள் ? ஏன் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தீர்கள் ? என்று ஆகவே அதற்கும் நானே பதில் சொல்கிறேன் என்று கூறி விளக்கம் ஒன்றையும் கூறுகிறார் பெரியார் 2/4
Dec 30, 2022 • 4 tweets • 1 min read
1978ஆம் ஆண்டு கக்கன் ராஜாஜி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுகிறார் மருத்துவமனை விண்ணப்பத்தில் அவர் வருமானத்தை பூர்த்தி செய்யும் போது மாதம் ரூ350 என்று குறித்து அவரை Cகிளாசில் விடுகிறார்கள் ஆனால் கக்கன் அதை மறுத்து எனது பென்சன் பணம் ரூ280 மட்டும் தான் அதை மட்டும்
1/4
போட சொல்கிறார் பிரச்னை டீனிடம் செல்கிறது அவர் வந்து அரசு விதிமுறைகளை விளக்குகிறார் எதுவும் எடுபடவில்லை இறுதியில் பொதுவார்டில் ஒரு பகுதியை திரைகளால் மறைத்து அறை உருவாக்கி கொடுக்கிறார்கள்
மதுரைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக எம்ஜிஆர் வருகிறார் கக்கன் மருத்துவமனையில் இருப்பதை
அறிந்து
2/4
Dec 24, 2022 • 7 tweets • 2 min read
1940 காலம் ஒருமுறை பெரம்பலூர் அருகில் உள்ள ஒரு சிற்றூருக்கு பெரியார் கி.ஆ.பெ விசுவ நாதமும் ஒரு கூட்டத்திற்காக சென்றார் ஊரின் எல்லையில் மக்கள் எல்லோரும் கூடி நின்றனர் வரவேற்பதற்காக என்று கருதிவிட வேண்டாம் கைகளில் கம்பு, தடியோடு அவர்கள் நின்றனர் பார்த்தவுடனேயே 1/7
பெரியாருக்கு புரிந்து விட்டது
எங்கள் ஊருக்கு உள்ளே நுழையக்கூடாது அன்று அவர்கள் சத்தமிட்டனர் சரி, திரும்பி விடலாம் என்றார் கி.ஆ.பெ. ஆனால் பெரியார் கேட்கவில்லை காரை வீட்டுக் கீழே இறங்கினார் அந்த மக்களின் குரல் மேலும் பெரிதாயிற்று அவர்களை பார்த்து பெரியார் 2/7
Dec 9, 2022 • 6 tweets • 2 min read
பெரியாருக்கு எப்படி பெரியார் என்று பெயர் கொடுக்கலாம் ?? என்று குமுறுகிறார்கள் பாவம்
என்னை நீங்கள் தோழர்.இராமசாமி என்று சொன்னால் போதும் என்று கூறியவர் அவர்
அவருக்கு பெண்கள் மாநாட்டில் கொடுத்த பெயர்தான் பெரியார் அதை உன்னால் சகிக்க முடியவில்லை ? அதன் பெயர் தான் வெறுப்பு 1/6
காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள் நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா. அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்க வேண்டும் என்று பெண்கள் முடிவு செய்கிறார்கள் 1938, நவம்பர் மாதம் 13-ஆம் தேதி, சென்னை, ஒற்றைவாடை நாடக கொட்டகையில் 2/6
Dec 9, 2022 • 5 tweets • 1 min read
வீட்டில் நீ ஆங்கிலத்தில் பேசு வேலைக்காரியிடம் ஆங்கிலத்தில் பேசு என சொன்ன பெரியார் துரோகியா?
“மும்மொழி திட்டம் மூளையை குழப்பும் தன்மனம் விரும்பின் தனித்தனி பயில்க தமிழர் தமிழையும் ஆங்கில மொழியையும் அமிழ்தென கற்க ஆர்வம் பெறுகவே”
பெருஞ்சித்திரனார் கோடாரி காம்புகள் கவிதைகள் 1/5
சரி விடுங்க இவர்கள் கொண்டாடும் ம.பொ.சி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்
தமிழ் நாட்டில் பிற மொழியாளர்கள் நூலில் நாம் பிராமணர்கள் போல் ஆங்கிலம் கற்கவேண்டும்
அதாவது பிராமணர்களை போல தமிழர்கள் அனைவரும் அனைத்து பொறுப்புகளிலும் வர வேண்டும்
ம.பொ.சியும் ஆங்கிலம் கற்க சொல்கிறார்
2/5
Dec 9, 2022 • 4 tweets • 2 min read
பெரியார் 1965 இந்தி எதிர்ப்பு போராளிகளை சுட சொன்னார் இராணுவத்தை வர வைத்தார் அதை பெருஞ்சித்திரனார் தன் தென்மொழி இதழில் எழுதினார் ஆம் அவர் எழுதினார் இல்லை என்று மறுக்கவில்லை பெரியார் சொல்லவில்லை என்றும் மறுக்கவில்லை ஏன் சொன்னார் ? யாரை சுட சொன்னார் ? இங்கு என்பதே முக்கியம் 1/4
ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடியடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளாய் இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்” 2/4
Dec 8, 2022 • 6 tweets • 1 min read
பெரியார் தமிழ் மொழியை இன்னும் ஒருபடி மேலே சென்று தாய்ப்பாலை கொச்சைப்படுத்திவிட்டார் என்கிறார்கள் தாய்ப்பால் கட்டுரையை நாம் முழுமையாக வாசிக்க வேண்டும் இவர்கள் பெரியார் குறித்து ஒன்றை செல்கிறார்கள் என்றால் அதை கட்டாயம் நாம் அந்த கட்டுரையை முழுமையாக வாசிக்க வேண்டும் அந்த கட்டுரை 1/6
தமிழ்மக்கள் என்னும் குழந்தைகளுக்குத் ‘தாய்ப்பால்’ என்னும் தமிழானது முன்னேற்றம் என்னும் உடல்தேர்வதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கிறதா?
பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில், தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே, சத்தற்றவள் 2/6
Dec 8, 2022 • 5 tweets • 1 min read
இராஜாஜி ஆங்கிலத்தை ஆதரித்த போது பெரியாரும் ஆதரித்தார் அவர் பார்ப்பனிய அடிவருடி என ஒரு திரிபுவாதி 53- நிமிடங்கள் பெரியாரை கட்டுடைகிறேன் என்று வீடியோ வெளியிட்டுருந்தார் அந்த நுங்கம்பாக்கம் கூட்டத்தில் பெரியார் பேசியது பின் வருமாறு 1/5
1957 நுங்கம்பாக்கத்தில் இந்திய எதிர்ப்பு கூட்டம் என்பதாக ஒரு கூட்டம் கூட்டப்பட்ட காலத்தில் எல்லாக்கட்சிக்காரர்களும் வந்திருந்தார்கள் அந்தக் கூட்டத்தில் பேசிய திருவாளர் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தமிழ்நாட்டுக்கு ஆங்கிலமே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்றும் 2/5
Nov 16, 2022 • 9 tweets • 2 min read
பெரியார் ஜாதி மநாட்டில் பேசினார் என்கிறவர்கள் அவர் என்ன பேசினார் என்று சொல்லமாட்டார்கள்- 2
(வன்னியகுல ஷத்திரியர் மகாநாடு)
புராணக் குப்பைகளிலிருந்து ஆதாரம் தேடி உங்கள் சமூகத்தை புகழ்ந்து விட்டு போக நான் இங்கு வரவில்லை நான் சொல்லப் போகும் செய்திகள் உங்கள் மனசுக்கு சங்கடத்தை 1/8
ஏற்படுத்தலாம் பல பிடிக்காமலும் இருக்கலாம் எப்படி இருந்தாலும் நான் சொல்லும் சொற்களை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை நான் சொல்வதை ஆராய்ந்து உங்கள் புத்திக்கு எது சரி என்று படுகிறதோ அதை நீங்கள் ஒப்பு கொள்ளுங்கள் இல்லையேல் தள்ளி விடுங்கள், 2/8
Nov 15, 2022 • 5 tweets • 2 min read
தமிழ்த்தேசியத்தில் சாதியை ஒழிக்க என்ன வழி ? சாதியம் என்பது தமிழக சமூகவியலில் மக்களின் வாழ்வியலை தீர்மானிக்கிறது இந்த வகையில் தான் நமது வர்ககம் ஒரு சாதி வர்க்கமாக உள்ளது சொந்த சாதிக்குள் மணம் செய்து கொள்ளும் முறைதான் இந்த வழக்கத்தின் முதன்மை 1/5
பெயருக்கு பின் சாதி பட்டம் குல தெய்வ வழிபாடு என்ற இரண்டும் ஜாதி கட்டமைப்பை இனைத்து விடுகிறது இதை காப்பதில் தான் சாதியத்தின் வெறி மிக கொடூரமாக இருக்கிறது சமூகநீதி மட்டும் போதும் அது சாதி ஒழிப்பை செய்து விடுமா ? என்றால் முடியாது சமூகநீதி இல்லாமல் சாதி ஒழிப்பும் முடியாது 2/5
Nov 14, 2022 • 7 tweets • 2 min read
தென் தமிழக கோவில்களில் நாடார்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட போது நாடார்களுக்கு அனுமதியில்லை என்றால் வேறெந்த சாதியும் கோவிலுக்குள் செல்ல கூடாது என்று அறிவித்தார் பெரியார் வட தமிழக கோவில்களுக்குள் நாடார்கள் செல்லலாம் ஏன் தென் தமிழக கோவில்களுக்குள் அவர்கள் செல்ல முடியாது ? என்று 1/7
கேள்வி எழுப்பி ஆலய நுழைவு போரட்டத்தை முடுக்கினார் பெரியார் மேலும் ஏன் நாடார் சகோதரர்கள் பாதம் பட்டவுடன் சாமி மறைந்து விடுமா அல்லது சாமிக்கு சக்தி போய் விடுமா ? அப்படி சக்தியற்ற அந்த கல்லை தொழுவதால் யாருக்கு என்ன பிரயோஜனம் ? என்று கேட்டார் 2/7
Nov 13, 2022 • 6 tweets • 2 min read
ராவ் பகதூர் நமசிவாயம் சிவராஜ் B.A.,B.L. தந்தை சிவராஜ் அவர்கள் நீதிக்கட்சியின் தலைவராக இருந்தார் தன்னை தேடி வந்த துணை நீதிபதி பதவி ஏற்காமல் மக்கள் பணி செய்வதை உயர்வாக கருதி இயங்கினார் 1927 வரை ஆதிராவிட மாணவர்களை சேர்த்து கொள்ளாத பச்சையப்பன் கல்லூரியின் மீது வழக்கு தொடர்ந்து 1/6
அந்த வழக்கில் சிவராஜ் அவர்கள் வெற்றி பெற்றார், அதன் பின்னர் தான் 1928-ஆம் ஆண்டு முதல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்களை கல்லூரியில் சேர்த்து கொண்டனர் அன்றைய மதராஸ் மாகாணத்தின் மேயராகவும் 1945 முதல் 1946 பதவிவகித்தார் தந்தை சிவராஜ் 2/6
Oct 29, 2022 • 8 tweets • 2 min read
இந்த ஆவணங்கள் இலங்கை
மலையகத்திலிருந்து 1964 ஸ்ரீமா
சாஸ்த்திரி ஒப்பந்தப்படி தமிழ்நாடு திரும்பிய மக்களுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதர் வழங்கும் ஆவணம் இதில் குடும்ப உறுப்பினர் விவரமும் இந்தியாவில் பூர்வீக குடும்பத்தின் ஊர் முகவரியும் இந்தியா வந்த தேதியும் பதிவும் இருக்கும் 1/8
இங்கு வந்த சேர்ந்த மக்களுக்கு ,
கல்வி, வேலைவாய்ப்பு வணிக கடன் வழங்கவும் விதிகள் வகுத்து
செயல்படுத்தவும் குடும்ப கார்டு என்ற
அடையாள அட்டையும் மத்திய அரசு இலங்கையில் இருந்த தூதர் மூலமே
வழங்கியது மத்திய அரசுகள் ஆண்டு தோறும் நிதி அளிக்கும் தமிழக அரசு அளவில்தமிழ்நாடு அரசின் வேலை 2/8
Oct 28, 2022 • 10 tweets • 4 min read
பெரியாரின் போர்ப்படை தளபதிகள் அதில் முக்கியமானவர் திராவிடர் இயக்கத்தின் அஞ்சா நெஞ்சன் தளபதி என்ற இரு அடைமொழிக்கும் சொந்தக்காரர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமான பெரியார் தொண்டர் எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தன் வாழ்நாள் முழுதும் ஒரே தலைவன் ஒரே கட்சி என்று நின்ற கொள்கை மறவன் 1/10
பெரியார் சுயமரியாதை இயக்கத்தை கட்டும் முன்பே பட்டுக்கோட்டையில் அழகிரி அவர்கள் சுயமரியாதை சங்கம் ஒன்றை நிறுவியவர் சாதி சமய சடங்குகள் சம்பிரதாயங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றை எதிர்த்து களப்பணி ஆற்றி பெரியாரின் கருத்துக்களை மக்களிடம் பரப்பி வந்தவர் இவர் 2/10
Oct 27, 2022 • 11 tweets • 4 min read
பெரியாரின் பெருந்தொண்டர் MR.ராதா பெரியாரின் தம்பிகள் பெரியாரை விட்டு போன போது இல்லை இல்லை நான் தந்தை பெரியாருடன் தான் சாகும் வரை இருப்பேன் என்று அழுத்தமாக கூறி அந்த தம்பிகளின் அவதூறுகளுக்கு பதிலடி கொடுத்து கூடவே இருந்தவர் நடிகவேள் MR.ராதா அவர் திரையில் தோன்றி பேசும் வசனத்தில்1/1
முழுக்க முழுக்க பகுத்தறிவு கருத்துக்களும் திராவிட இயக்கத்தின் கருத்துகளும் தான் இருக்கும் அசாத்திய திறமைசாலி நாடகம் போடும் இடத்தில் நாத்திக கருத்துக்கு எதிராக ரவுடிகள் வந்து கலவரம் செய்தால் தனித்து நின்று அவர்களை துவம்சம் செய்து விட்டு அதே வேகத்தில் மேடையேறி வசனங்களை பேசுவார் 1/2
Oct 13, 2022 • 10 tweets • 4 min read
மெட்ராஸ் மாகணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வலியுறுத்தி அவர் இருந்த காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமையான காமரஜரை எதிர்த்து போராடி 76 நாட்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த தியாகி சங்கரலிங்கனார் நினைவு தினம் இன்று 1/1
சங்கரலிங்கனார் 27.7.1956 அன்று விருதுநகரில் அவர் போரட்டத்தை துவங்கினார் அந்த போரட்டாம் முதல்வர் காமராசரின் ஆட்சியை அலட்சியப்படுத்தியது பிரதமர் நேருவோடு பேசி சங்கரலிங்கனாரின் உயிரை பாதுகாக்க வேண்டிய காமராசர் செய்தியாளர்களிடம் இந்த பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லை என்றார் 1/2
Oct 12, 2022 • 11 tweets • 4 min read
யார் இந்த நாட்டை ஆள்கிறார்கள் நானா இல்லை இராமசாமி நாயக்காரா ? பார்த்து விடலாம் என்ற ஆணவத்தில் 1938- இல் இந்தியை கட்டாய பாடமாக அறிவிக்கிறார் இராசகோபாலாச்சாரியார் ஆனால் 1926ஆம் ஆண்டிலேயே அதாவது இந்த உத்தரவு வருவதற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு 1/1
பெரியார் குடிஅரசு இதழில் ஆரிய ஆதிக்கத்தை நிலைநாட்டி வடமொழி உயர்வுக்கு வகை தேட பார்ப்பனர்கள் இந்தியை திணிக்கிறார்கள் என்று எதிர்த்து எழுதினார் 1930-ம் ஆண்டு தஞ்சை மாவட்டம் நன்னிலத்தில் நடந்த ஒரு சுயமரியாதை மாநாட்டில் இந்தி நுழைவதைக் கண்டித்து பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார் 1/2
Oct 10, 2022 • 4 tweets • 2 min read
பலருக்கும் தெரியாத ஒரு போராளி தான் பெரியாரின் தங்கை “கண்ணம்மாள்” பெரியார் காங்கிரசில் இருந்த போது ஈரோட்டில் கள்ளுக்கடை மறியல் போராட்டம் நடந்தது பெரியார் துணைவி நாகம்மையாரும் சகோதரி கண்ணம்மாவும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர் எப்படியாவது மறியலை நிறுத்த வேண்டும் என்று 1/1
காந்தியாரிடம் கேட்டபோது அது என் கையில் இல்லை ஈரோட்டில் இருக்கும் இரண்டு பெண்களிடம் தான் இருக்கிறது என்று காந்தி கூறியதாக வரலாற்று குறிப்பு இருக்கிறது வைக்கத்தில் நடந்த போராட்டத்திலும் இவர்கள் கலந்து கொண்டனர் கொட்டும் மழையிலும் கலையாமல் போராடினார்கள் 1/2