12 வருடம் சிவபெருமானை வழிபட்ட பலன் கிடைக்க (இன்று) சனி மஹா #பிரதோஷம் வழிபாடு செய்யுங்கள்!
சிவபெருமானுக்கும் நந்திக்கும் வில்வ அர்ச்சனை செய்யுங்கள்!
1 வில்வ இலை = 1 கோடி மலர்கள்
மாலை 4.30 to 6.30 சோம சூக்தப் பிரதட்சணம் செயுங்கள்!
"சிவாயநம" என்று மனதிற்குள் ஜெபம் செய்யுங்கள்!
சிவாலயம் முழுவதும் விளக்கு ஏற்றுங்கள்!
பிரதோஷவழிபாடு செய்ய மாலயனாதி வானவர்களும் சிவாலயம் செல்வார்கள்!
ஆதலால் பிரதோஷ நேரத்தில் திருமால் கோயில்களில் வழிபாடு செய்வதில்லை!
சிவபெருமான் பிரதோஷ காலத்தில் இடபதேவரின் இரு கொம்புகளுக்கிடையே உயிர்கள் உய்யும் பொருட்டுத் திருநடனம் புரிவார்!
அப்போது, சரஸ்வதி வீணை வாசித்தாள். இந்திரன் புல்லாங்குழல் ஊதினார். பிரமதேவர் தாளம் போட்டார். லட்சுமி தேவி பாடினாள். திருமால் மிருதங்கம் வாசித்தார். தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், கின்னர்கள்,திசைபாலர்கள் முதலிய அனைவரும் வந்து பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுகிறார்கள்!
வாக்தேவீ த்ருத வல்லகீ சதமகோ வேணும் ததத் பத்மஜ
ஸ்தாலோன்னித் கரோ ரமா பகவதீ கேய ப்ரயோகாந்விதா |
விஷ்ணு: ஸாந்த்ர ம்ருதங்க வாதநபடுர்தே3வா: ஸமந்தாத்ஸ்திதா :
ஸேவந்தே தமநு ப்ரதோஷ ஸமயே தேவம் ம்ருடாநிபதிம்
'வரத்தின் அருள்பெற்ற மத்தள மாயோன் தன் கரத்தினனியொத்திக் களிப்ப.நரைத்தலையோன் தாளம் பிடிக்க" - கச்சி ஆனந்த ருத்சேரர் வண்டு விடுதுாது!
வாரியார் சுவாமிகளின் பிரதோஷ மகிமை (₹10) @somusathish
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.