ஆறடி நிலம் கூட நீ தந்ததாக இருக்கக் கூடாது. நான் போராடி பெற்றதாக இருக்க வேண்டும்.. ஆம், உலகில் எந்த தலைவனுக்கும் நடந்திடாத கொடுமை ஒரு தலைவனுக்கு மட்டுமே நடந்தது என்றால் அது தலைவர் கலைஞருக்கு மட்டுமே...
இந்திரா காந்தி நாடு முழுவதும் #எமர்ஜென்சியை பிரகடனப்படுத்திய காலகட்டம் அது
தலைவர் கலைஞர் மீது குற்றம் சுமத்தி எப்படியாவது ஆட்சியை கலைக்க MGR காலில் கங்கணம் கட்டி அலைந்து கொண்டிருந்த காலமும் கூட.. அப்போது, இந்திராகாந்தி முன்பொரு நாளில் எம்.ஜி.ஆரும் கம்யூனிஸ்ட் தலைவர் கல்யாணசுந்தரமும் கொடுத்த பொய் வழக்கை சரியாக அந்த சமயத்தில் வழக்கு விசாரணையை தூசி தட்டி
எடுத்தார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி #ரஞ்சித்_சிங்_சர்க்காரிய தலைமையில் ஒரு கமிஷனை அமைத்து அந்த வழக்கை அவரிடம் ஒப்படைத்தார் இந்திரா காந்தி.. முதல் விசாரணையை MGRஇடமிருந்தே தொடங்கினார் சர்க்காரியா. அந்த ஆணையத்தில் MGR கூரிய வார்த்தை எனக்கு ஏதும் தெரியாது சேலம் வழக்கறிஞர்
கண்ணன் கூறியதைத் தான் நான் கூறினேன் என்று கூறிவிட்டு தலைதெறீக்க ஓடி மாய்ந்தார்.. பிறகு கல்யாணசுந்திரத்தை விசாரிக்கையில் "MGR கூறியதைத் தான் நான் கூறினேன்! என்று அவரும் விலகிவிட ஆணையத்தை அமைத்ததற்காக தலைவர் கலைஞரிடமே விசாராணையை தொடங்யது சர்க்காரியா குழு அந்த குழுவை பார்த்து
தலைவர் கலைஞர் "என் மீது தகுந்த குற்றச்சாட்டுகளை தங்களின் தரப்பு உறுதிப்படுத்தினால், இந்த நாட்டை விட்டே வெளியேறத் தயார் என்றார்.. சர்காரியா குழு தனது ஆய்வை இந்திராகாந்தியிடம் சமர்பித்த போது "கலைஞர் எந்த குற்றமும் செய்யவில்லை என நன்றாக தெரிகிறது" என்று அறிக்கையை சமர்பித்தது..
இதனால் இந்திராகாந்தி கலைஞரிடம் மன்னிப்பு கேட்ட வரலாறும் உண்டு.. சர்க்காரிய கமிஷனில் எந்த இடத்திலும் தலைவர் கலைஞரை ஊழல்வாதி என முத்திரையிட்டதை காண முடியாது.. எதிர்கால தேவையை அறிந்த ஒரு தலைவனுக்கு அவமானமும், இழிச்சொல்லும் நேருவது இயற்கையன்னையின் இடர்பாடுகளில் ஒன்றாகதான் இருக்க
முடியும். என் தலைவர் அந்த 94 வயதிலும் வசைமொழியை அதிகமாக சுவாசித்துப் பழகியதால் தான் இன்று தமிழகம் தன் தனித்திறமையை பெற்று நிற்கின்றது.. "வாழ்க வசவாளர்கள்"என்ற அண்ணவின்
மந்திரச்சொல்லோடு நிறைவுச் செய்கிறேன்.. கடவுள் இல்லையென்றாய் தலைவா! மறுக்கின்றேன்.. நீ தானே கடவுள் தலைவா.. 🖤❤️🙏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.